என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆளில்லா விமானம்"
- முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது கழுகுகள் பறக்க விடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
- 2 ஆண்டுகளுக்கு மேலாக கழுகுகள் டிரோன்களை கையாள முழு பயிற்சி பெற்றுள்ளன.
தெலுங்கானா:
தெலுங்கானா மாநிலத்தில் பாதுகாப்பு பணியில் கழுகு ஈடுபடுத்தப்படுகின்றன. முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது கழுகுகள் பறக்க விடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
கடந்த 2020-ம் ஆண்டு முதல் 3 கழுகுகளுக்கு போலீசார் மொய்னாபாத்தில் உள்ள மையத்தில் பயிற்சி அளித்து வருகின்றனர்.
இந்த கழுகுகள் ஆளில்லா விமானங்களை துல்லியமாக கணித்து அவற்றை கீழே இழுத்து வரும் தன்மை கொண்டது.
இதற்காக கழுகுகளுக்கு தினமும் ஒரு மணி நேரம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
2 ஆண்டுகளுக்கு மேலாக கழுகுகள் டிரோன்களை கையாள முழு பயிற்சி பெற்றுள்ளன. நாட்டின் எந்தப் பகுதியிலும் இந்த கழுகு படையை பயன்படுத்த முடியும். நெதர்லாந்தில் கழுகு படை உள்ளது. அதற்குப் பிறகு இந்தியாவிலேயே தெலுங்கானாவில் தான் போலீசார் கழுகுப்படையை உருவாக்கி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதாக தெரிவித்தனர்.
- காவல்துறைக்கு உதவும் வகையில் நவீன தொழில்நுட்ப உபகரணங்கள்.
- ரெயில் மற்றும் பேருந்து நிலையங்களிலும் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
உ.பி மாநிலம், அயோத்தியில் ராமர் கோயிவிலில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உத்தரப் பிரதேச காவல்துறை ஆளில்லா விமானங்கள் மற்றும் 10,000 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
அங்கீகரிக்கப்படாத ட்ரோனைக் கட்டுப்படுத்த ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளதாக எஸ்பி செக்யூரிட்டி கவுரவ் வான்ஸ்வால் தெரிவித்தார்.
மேலும், அயோத்தி மாவட்டத்தில் 10,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக டிஜி (சட்டம் ஒழுங்கு) பிரசாந்த் குமார் தெரிவித்தார். இது தவிர, காவல்துறைக்கு உதவும் வகையில் நவீன தொழில்நுட்ப உபகரணங்களும் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும், கோவில் நகரத்திற்கு செல்லும் சாலைகள் சுத்தப்படுத்தப்பட்டு வருவதாக டிஜி தெரிவித்தார். ஜனவரி 17 அல்லது 18 முதல் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுகிறது. அதற்காக அவ்வப்போது போக்குவரத்து அறிவுரைகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெயில் மற்றும் பேருந்து நிலையங்களிலும் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. போலீஸ் பாதுகாப்பும் போடப்படுகிறது.
- இரு தரப்பிலும் டிரோன்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது
- 2023 ஆகஸ்டில் சிறிய மற்றும் பெரிய தாக்குதல்கள் உக்ரைனால் தினமும் நடைபெறுகிறது
ரஷியாவில் பல தசாப்தங்களாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தை ரஷியர்கள் ஒரு வித அச்சத்துடன் பார்த்து வருகின்றனர்.
"ஆகஸ்ட் சாபம்" (August Curse) என அவர்கள் பெயரிட்டு அழைக்கும் இந்த மாதத்தில் தான், அதிக எண்ணிக்கையில் ஆபத்தான விபத்துகள், தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் போர் தொடக்கம் ஆகியவை நடைபெற்று பலத்த உயிர்சேதங்களும், கட்டிட சேதங்களும் நடக்கின்றன என அவர்கள் நம்புகிறார்கள்.
கடந்த சில வருடங்களாக அந்நாட்டு மக்கள் இதனை சற்று மறந்திருந்தார்கள். ஆனால் நடைபெற்று வரும் ரஷிய-உக்ரைன் போர் இந்த அச்சத்தை மீண்டும் தட்டி எழுப்பியிருக்கிறது.
கடந்த 2022 பிப்ரவரியில் ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் போரிட்டு வருகிறது. இரு தரப்பிலும் பெரும் உயிர்சேதமும், கட்டிட சேதங்களும் நடைபெற்று வருகிறது.
போர் 530 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. இப்போரில் இரு தரப்பிலும் டிரோன் எனப்படும் ஆளில்லா விமானங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆகஸ்ட் மாதம், ரஷியாவின் மீதான உக்ரைன் தாக்குதல்கள் அதிகரித்திருக்கிறது.
கருங்கடல் பகுதியில் ரஷிய ராணுவ மற்றும் சரக்கு கப்பல்கள் மீது உக்ரைன் 'கப்பல் டிரோன்கள்' மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் சிறியளவிலேயே பல டிரோன் தாக்குதல்களை தினந்தோறும் நடத்தி உக்ரைன் அதிரடி காட்டி வருகிறது.
இவை ரஷியாவில் உள்ள அலுவலக கட்டிடங்கள், ராணுவ தளங்கள், வர்த்தக இடங்கள் மற்றும் பொதுமக்களின் வசிப்பிடங்களை குறி வைத்து நிகழ்த்தப்படுகிறது. இவற்றில் பல வீழ்த்தப்பட்டாலும், மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் உக்ரைனிலிருந்து ரஷியாவின் பல இடங்களை நோக்கி ஏவப்பட்ட 20 ஆளில்லா விமானங்களை ரஷியா இடைமறித்து வீழ்த்தியதாக தெரிவித்தது. இத்தாக்குதல்களில் உயிர்சேதம் ஏதுமில்லை.
இந்த 20 டிரோன்களில் மாஸ்கோவிற்கு தென்மேற்கே 150 கிலோமீட்டர் தொலைவில் கலுகா பகுதியில் ஒரு டிரோன் வீழ்த்தப்பட்டது. ரஷிய தலைநகர் மாஸ்கோவின் மேற்கு பகுதிக்கு குறிவைக்கப்பட்ட மற்றொரு டிரோன் இதே போல் வீழ்த்தப்பட்டுள்ளது. இவை மக்களிடையே மீண்டும் ஆகஸ்ட் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- உக்ரைன் வீரர்கள் பயன்படுத்தி வரும் அமெரிக்க மாடலைப் போன்று இந்த ஆளில்லா விமானம் உள்ளது.
- தைவான் தனது அடுத்த தலைமுறை தற்கொலை தாக்குதல் ட்ரோன்களையும் உருவாக்கி வருகிறது
தைவானை மீண்டும் தன்வசப்படுத்தி ஆதிக்கம் செலுத்தத் துடிக்கும் சீனா, ராணுவ நடவடிக்கை எடுக்கவும் தயாராகி வருகிறது. அவ்வப்போது போர் விமானங்களை அனுப்பி தைவானை பதற்றமடைய வைக்கிறது. தைவானைச் சுற்றி போர் ஒத்திகையை மேற்கொள்கிறது. சீனா போர் தொடுத்தால் எதிர்கொள்ள தயாராக உள்ளதாக தைவான் கூறி உள்ளது.
சீனாவின் ராணுவ அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், தைவான் முதல் போர்ட்டபிள் ட்ரோனை (ஆளில்லா விமானம்) இன்று அறிமுகம் செய்து சீனாவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. ரஷியாவுக்கு எதிரான சண்டையில் உக்ரைன் வீரர்கள் பயன்படுத்தி வரும் அமெரிக்க மாடலைப் போன்று (ஸ்விட்ச்பிளேடு 300) இந்த ஆளில்லா விமானம் உள்ளது. இந்த ஆளில்லா விமானம் மூலம் எதிரிகளின் இலக்கை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்த முடியும்.
தைவானில் தயாரிக்கப்பட்ட, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய இந்த ட்ரோன், ஒரு பையில் எடுத்துச் செல்லும் அளவுக்கு சிறியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 15 நிமிடங்கள் வரை வானத்தில் பறக்க முடியும் என தைவான் ராணுவத்தின் நேஷனல் சுங்-ஷான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் கூறியிருக்கிறது.
தங்கள் நாட்டின் கடற்கரைக்கு அருகில் உள்ள இலக்குகளைத் தாக்குவதில் இது பயனுள்ளதாக இருக்கும் என அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன தலைவர் சி லி பின் கூறினார். மேலும், தைவான் தனது அடுத்த தலைமுறை தற்கொலை தாக்குதல் ட்ரோன்களையும் உருவாக்கி வருவதாகவும், நீண்ட தூர தாக்குதல்களில் பயன்படுத்தக்கூடிய பெரிய ட்ரோன்களும் இதில் அடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
- அமிர்தசரசின் சஹர்பூர் கிராமத்திற்கு அருகே பாகிஸ்தானில் இருந்து மற்றொரு ஆளில்லா விமானம் பறந்து வந்துள்ளது.
- சம்பவ இடத்திற்கு உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் எல்லை வழியாக ஊடுருவதை தடுக்க காஷ்மீர், பஞ்சாப் எல்லைகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் சர்வதேச எல்லையையொட்டி கடந்த 26ம் தேதி பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்த ஆளில்லா விமானம் (டிரோன்) ஒன்றை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து அங்கு கூடுதல் கண்காணிப்பு போடப்பட்டிருந்தது. அமிர்தசரசின் சஹர்பூர் கிராமத்திற்கு அருகே பாகிஸ்தானில் இருந்து மற்றொரு ஆளில்லா விமானம் (டிரோன்) பறந்து வந்துள்ளது.
அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் டிரோன் சத்தத்தை கேட்டதும் உஷாராகினர். உடனே அவர்கள் டிரோன் மீது துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர்.
சம்பவ இடத்திற்கு உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தில் வெள்ளை நிற பாலீத்தின் பொருட்கள் கிடந்தது. அவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் இன்றிரவு டிரோன் ஒன்று அத்துமீறி நுழைந்தது.
- அந்த ஆளில்லா விமானத்தை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
அமிர்தசரஸ்:
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் பஞ்சாப்பில் உள்ள குர்தாஸ்பூர் பிரிவு எல்லைக்குள் வெள்ளிக்கிழமையன்று ஆளில்லா விமானம் ஒன்று அத்துமீறி நுழைந்தது. இதைக்கண்ட ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த எல்லை பாதுகாப்புப் படையினர் அதனை சுட்டு வீழ்த்தினர்.
இந்நிலையில், இன்றிரவு 9.15 மணியளவில் பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸ் பிரிவு எல்லைக்குள் ராணியா பகுதியில் ஆக்டா-காப்டர் என்ற அத்துமீறி புகுந்த ஆளில்லா விமானம் ஒன்றை பி.எஸ்.எப். வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். இது 12 கிலோ எடை கொண்டது.
துப்பாக்கிச் சூட்டில் எட்டு இறக்கைகளில் 2 இறக்கைகள் சேதமடைந்தன. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
கடந்த இரண்டு நாட்களில் சுட்டு வீழ்த்தப்பட்ட 2-வது ஆளில்லா விமானம் இது என பி.எஸ்.எப். தெரிவித்துள்ளது.
- புறப்பாடு, தரையிறங்குதல் உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் துல்லியமாக அமைந்தது.
- ஆளில்லா விமானங்களில் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதில் சாதனை.
சித்ரதுர்கா:
மத்திய பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தானியங்கி முறையில் பறக்கும் தொழில் நுட்ப செயல் விளக்க விமானத்தை இன்று பரிசோதனை செய்துள்ளது.
இந்த விமானத்தில் பயன்படுத்தப்பட்ட அனைத்து வான் கட்டுப்பாட்டு சாதனங்களும் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை.
கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள வான்சோதனை தளத்தில் முதல்முறையாக நடைபெற்ற இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்தது. முற்றிலும் தானியங்கி முறையில் இயங்கக்கூடிய இந்த விமானத்தின், புறப்பாடு, பறக்கும் வழி, தரையிறங்குதல் உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் துல்லியமாக நடைபெற்றன.
வருங்காலத்தில் தயாரிக்கப்படும் ஆளில்லா விமானங்களில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் இந்த சோதனை ஓட்டம் மாபெரும் சாதனையாக அமைந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் இந்தியா தற்சார்பு அடைந்துள்ளதற்கு இது உதாரணமாக உள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
டிஆர்டிஓ வி்ஞ்ஞானிகளின் இந்த முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ள பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், தானியங்கி ஆளில்லா விமான தயாரிப்பில் இது ஒரு பெரும் சாதனை என்றும் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்