search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் பெரியகருப்பன்"

    • அனைத்து பணியாளர்களும் அமரும் வகையில் உரிய அடிப்படை வசதிகள் நிறைந்த இடத்தில் நடத்த வேண்டும்.
    • பணியாளர் நிகழ்வு நடைபெறும் விவரத்தினை அனைத்து பணியாளர்களுக்கும் முன்னரே தெரிவித்து கலந்து கொள்ளச்செய்யவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர்களின் குறைகளை தீர்வு செய்திடும் வகையில் இருமாதங்களுக்கு ஒருமுறை இரண்டாவது வெள்ளிக்கிழமை மண்டல அளவில் பணியாளர் நாள் நிகழ்வு நடத்தப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

    அவ்வாறு இராண்டாவது வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக இருந்தாலோ அல்லது வேறு காரணங்களினால் நடத்த இயலாத சூழல் ஏற்பட்டாலோ அடுத்து வரும் வேலை நாளில் அக்கூட்டத்தினை நடத்திடவும், பணியாளர் நாள் நிகழ்வு நடத்தப்படும் இடம் அனைத்து பணியாளர்களும் அமரும் வகையில் உரிய அடிப்படை வசதிகள் நிறைந்த இடத்தில் நடத்திடவும், பணியாளர் நிகழ்வு நடைபெறும் விவரத்தினை அனைத்து பணியாளர்களுக்கும் முன்னரே தெரிவித்து கலந்து கொள்ளச்செய்யவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

    நிராகரிக்கப்படும் மனுக்கள் எந்த காரணத்திற்காக நிராகரிக்கப்படுகிறது என்பதையும் தெளிவாக குறிப்பிட்டு மனுதாரர்களுக்கு பதில் அனுப்பி அவ்விவரங்கள் இணையதளத்தில் பதிவிட வேண்டும் என்றும் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

    • சர்வ தேச கூட்டுறவு தினத்தைப் பற்றிய விழிப்புணர்வு.
    • உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கடன் மேளா நடத்தப்பட்டது.

    சென்னை:

    கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கூட்டுறவு வங்கிகள் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும், சமூக மேம்பாட்டிற்காகவும் பயிர்க் கடன், கறவை மாட்டுக் கடன், நகைக் கடன், சுய உதவி குழுக் கடன், சிறுவணிகக் கடன், மகளிர் தொழிற்முனைவோர் கடன், மகளிர் சம்பளக் கடன், வீட்டு வசதிக் கடன் போன்ற கடன்களை வழங்கி வருகிறது.

    இந்த ஆண்டு சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கூட்டுறவுகள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குகின்றன என்ற மைய கருத்தில் மக்களுக்கு சர்வ தேச கூட்டுறவு தினத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    அனைத்து மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கடன் மேளா, ரத்ததான முகாம், மரக்கன்று நடும் முகாம், பேச்சு போட்டி, கட்டுரை போட்டி நடத்தப்பட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கல்விக்கடன் பெறும் மாணவர்கள் கல்வி பயிலும் காலம் முடிந்து 6 மாதங்கள் கழித்து வரும் 5 வருடங்களுக்குள் கடனை திருப்பி செலுத்த வேண்டும்.
    • முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டுமின்றி, இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவர்களுக்கும் கல்விக் கடன் வழங்கப்படுகின்றன.

    சென்னை:

    கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    இளைஞர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைவதற்கு, கல்வி மிகவும் அவசியமாகும். அவ்வாறு கல்லூரி கல்வி பயிலும் மாணவர்களுக்கு குடும்ப வருமானம் ஒரு தடையாக இருக்க கூடாது என கருதி, தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுபடி, கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மாணவர்களின் புத்தக கட்டணம், தங்கும் விடுதி கட்டணம், உணவு கட்டணம், டியூஷன் கட்டணம் போன்று பல்வேறு கல்வி கட்டணங்களை செலுத்த ஏதுவாக ரூ. 1 லட்சமாக வழங்கப்பட்டு வந்த கல்விக்கடன் ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    கல்விக்கடன் பெறும் மாணவர்கள் கல்வி பயிலும் காலம் முடிந்து 6 மாதங்கள் கழித்து வரும் 5 வருடங்களுக்குள் கடனை திருப்பி செலுத்த வேண்டும். இக்கல்விக் கடனுக்கான அதிகபட்ச வட்டி விகிதம் 10% ஆகும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மூலம் அங்ககீகரிக்கப்பட்ட பட்டயப் படிப்பு மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு மட்டுமின்றி, முதுகலைப் பட்டப் படிப்புக்கும், தொழில்முறை படிப்புகளுக்கும் (professional courses) கூட்டுறவு நிறுவனங்கள் கல்விக் கடன் வழங்குகின்றன. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டுமின்றி, இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவர்களுக்கும் கல்விக் கடன் வழங்கப்படுகின்றன.

    தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் (டாம்கோ) சிறுபான்மையின மாணவர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் குறைந்த வட்டி விகிதத்தில் கல்விக் கடன் வழங்கப்படுகின்றன.

    தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், நிறுவனங்களை மாணவர்கள் அணுகி, உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து, கல்விக் கடனை பெற்று மாணவர்கள் தங்களின் கல்விக் கனவை நனவாக்கிக் கொள்ள கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர் கடன் வழங்கப்பட்டு வருகிறது.
    • பயிர் கடன் பெற்று பயிர்களை விளைவித்து பயன்பெறுமாறு கோட்டுக்கிள்கிறேன்.

    நடப்பு பருவத்திற்கு தேவையான உரம் மற்றும் இடுபொருட்கள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கே.ஆர்.பெரியகருப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு பருவத்திலும் கூட்டுறவுத்துறையின் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வேளாண்மைப் பணிகளுக்குத் தேவையான உரம் மற்றும் இடுபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு வேளாண்மைத்துறையுடன் ஒருங்கிணைந்து உழவர் பெருமக்களுக்கு தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி, நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவ மழையின் காரணமாக ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை உள்ள நடப்பு காரீப் பருவத்தில் வேளாண்மைப் பணிகளுக்குத் தேவையான உரம் மற்றும் இடுபொருள்களைப் பொறுத்தவரை யூரியா 30.000 மெட்ரிக் டன் என்ற அளவிலும், டி.ஏ.பி 15,000 மெட்ரிக் டன் என்ற அளவிலும், எம்.ஓ.பி 9,200 மெட்ரிக் டன் என்ற அளவிலும், காம்ப்ளக்ஸ் 21,600 மெட்ரிக் டன் என்ற அளவிலும் ஆக மொத்தம் 75,800 மெட்ரிக் டன் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    மேலும், உடனடித் தேவை எதிர்கொள்ளும் வகையில், டான்பெட் இருப்புக் கிட்டங்கிகளில் (Buffer Godowns) யூரியா 4,500 மெட்ரிக் டன் என்ற அளவிலும், டி.ஏ.பி 2,700 மெட்ரிக் டன் என்ற அளவிலும், எம்.ஓ.பி 3,700 மெட்ரிக் டன் என்ற அளவிலும், காம்ப்ளக்ஸ் 5,400 மெட்ரிக் டன் என்ற

    அளவிலும் ஆக மொத்தம் 16,300 மெட்ரிக் டன்கள் இருப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர் கடன் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பயிர் கடன் பெற்று பயிர்களை விளைவித்து பயன்பெறுமாறு கோட்டுக்கிள்கிறேன். என தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வட்டியில்லா கடன் 2023-24ம் நிதியாண்டில் ரூ.1500 கோடி வரை வழங்கப்படும் என்றார் அமைச்சர் பெரியகருப்பன்.
    • வேளாண் கடன் அட்டை வைத்திருக்கும் விவசாயிகளும் கூட்டுறவு வங்கிகளை அணுகி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.

    சென்னை:

    ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

    இந்த வட்டியில்லா கடன் 2023-24ம் நிதியாண்டில் ரூ.1,500 கோடி வரை வழங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

    கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களில் ஈடுபடும் விவசாயிகள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலமாக பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    வேளாண் கடன் அட்டை வைத்திருக்கும் விவசாயிகளும் கூட்டுறவு வங்கிகளை அணுகி பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கிராமங்கள் தோறும் இருக்கும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும், ஆடு, மாடு, கோழி, மீன்கள் போன்றவற்றை வளர்க்கும் விவசாயிகள், தங்களுடைய ஆதார் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை சமர்ப்பித்து கடன் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரூ.3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
    • அனைவருக்குமான அரசாக திகழ்ந்து வருகிறது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அரளிக்கோட்டையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு 1112 பயனாளிக ளுக்கு ரூ.3.13 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அப்போது அவர் பேசிய தாவது:-

    தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் பயனுள்ள பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகி றார். அரசின் நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு நேரடியாக கிடைக்கும் வகையில் மாதந்தோறும் கடைகோடி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. முகாமில் 159 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு 125 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ள்ளது.

    முதல்-அமைச்சர் தலைமையிலான தமிழக அரசில் எல்லோருக்கும் எல்லாமும் என்ற தத்துவத் தின் அடிப்படையில் அனை வருக்குமான அரசாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக மக்களை தேடி அரசு என்ற உன்னத நிலை தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.

    அதனடிப்படையில் அனைத்து துறை அரசு முதல் நிலை அலுவலர்க ளையும் ஒருங்கி ணைத்து நடைபெற்று கொண்டி ருக்கும் இம்மக்கள் தொடர்பு முகாமின் மூலம் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து துறை சார்ந்த முதன்மை அலுவலர்கள் விரிவாக மக்களுக்கு எடுத்துரைத்து உள்ளனர்.

    இதனை பொதுமக்கள் கருத்தில் கொண்டு அத்து றையைச் சார்ந்த அலுவலர் களை முறையாக அணுகி அதன் மூலம் பயன்பெற்று தங்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனசுந்தரம், ஒன்றிய செயலாளர் பாலசுப்பிர மணியன், ஊராட்சி தலை வர் புவனேஸ்வரி காளி தாஸ், திருப்பத்தூர் யூனியன் சேர்மன் சண்முகவடிவேல், பேரூராட்சி சேர்மன் கோகிலா ராணி நாராய ணன், மாவட்ட மாணவர் அணி தி.மு.க. அமைப்பாளர் ராஜ்குமார், திருப்பத்தூர் ஒன்றிய துணை அமைப்பா ளர் கண்ணன் மற்றும் ஒன்றிய, பேரூர், நகர் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மருத்துவ முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்
    • சுகாதார மேற்பார்வையாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அரளிக்கோட்டை கிராமத் தில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் மருத்துவ முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களையும், கர்ப்பிணிகளுக்கு ஊட்ட சத்து பெட்டகங்களையும் அமைச்சர் வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    ஒவ்வொரு வட்டாரத்திலும் 3 முகாம் களை நடத்திட உத்தரவிடப் பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மொத்தம் 36 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தற்போது 2-வது முகாம் நடந்துள்ளது. இந்த முகாம்களில் பல்வேறு நோய்களுக்கான தன்மையை கண்டறிந்து அதுக்கான உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு உடல்நலம் சார்ந்த பரிசோதனைகள் மேற்கொண்டு பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில், சுகாதார துணை இயக்குநர் விஜய்சந்திரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கதிர் ராஜ்குமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மதிவாணன், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் சதீஷ்குமார், சன் சீமான் சுப்பு, ஊராட்சி மன்றத்தலைவர் புவனேஷ்வரி காளிதாஸ், வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு, ஏரியூர் மருத்துவர் பிரேம்குமார், சுகாதார மேற்பார்வையாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    • திருப்பத்தூரில் கருணாநிதி நூற்றாண்டு விழா நடந்தது.
    • அமைச்சர் பெரியகருப்பன் தொ.மு.ச. கொடியை ஏற்றி வைத்து பேசினார்.

    திருப்பத்தூர்

    திருப்பத்தூரில் உள்ள மின்வாரிய செயற்பொறி யாளர் அலுவலகம் முன்பு தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா நடந்தது. மாவட்ட திட்ட செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் தொ.மு.ச. கொடியை ஏற்றி வைத்து பேசினார். கோட்ட செயலாளர் ஜெயராஜ் வரவேற்றார். இதில் திட்ட தலைவர் ராமமூர்த்தி, பொருளாளர் சரவண குமார், மாநில தொழிலாளர் நல செயலாளர் ரவிந்திரன், மதுரை மண்டல செயலா ளர் ராஜேஷ் கண்ணன், பேரவை செயலாளர் திருநாவுக்கரசு, ஒன்றிய செயலாளர் முத்துராம லிங்கம், வட்டச் செயலாளர் சோமு, மாநிலத் துணைத் தலைவர் இராமு, திருப்பத்தூர் நகர செயலாளர் கார்த்திகேயன், மற்றும் கோட்டம், உப கோட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், மற்றும் சங்கபொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கடந்த 10 நாட்களில் தக்காளி விலை மளமளவென உயர்ந்துவிட்டது.
    • தக்காளியை மொத்தமாக பதுக்கும் வியாபாரிகளை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

    சென்னை:

    தக்காளி விலை எப்போதும் இல்லாத அள வுக்கு விலை உயர்ந்து உள்ளது. தமிழ்நாட்டில் தக்காளி விலை கிலோ ரூ.200 வரை உயர்ந்துவிட்டது. இந்த விலை இன்னும் உயரும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    கடந்த மாதம் தக்காளி விலை 100 ரூபாயாக உயர்ந்த போது கூட்டுறவுத்துறையின் மூலம் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளியை விற்பனை செய்ய அரசு ஏற்பாடு செய்தது.

    சென்னை, மதுரை, கோவை, திருச்சி, தூத்துக்குடி, திருவண்ணாமலை, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருப்பூர், சேலம், ஈரோடு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் கூட்டுறவு கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தவிர சில ரேஷன் கடைகளிலும் தக்காளி விற்கப்பட்டது. ஆனாலும் பொதுமக்கள் பல பேருக்கு தக்காளி குறைந்த விலையில் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் தக்காளி தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. கடந்த 10 நாட்களில் தக்காளி விலை மளமளவென உயர்ந்துவிட்டது. இப்போது ஒருகிலோ தக்காளி ரூ.180 முதல் ரூ.200 வரை விற்கப்படுகிறது.

    இந்த விலையை கட்டுப்படுத்த அரசு இப்போது முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக உயர்மட்ட அளவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமைச்செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தக்காளி விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசுத்துறை உயர்அதிகாரிகளை அழைத்து ஆலோசித்தார். இந்த கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதில் தக்காளியை மொத்தமாக பதுக்கும் வியாபாரிகளை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

    கூட்டுறவுத்துறை மூலம் தக்காளியை மொத்தமாக வாங்கி கொள்முதல் விலைக்கே கூட்டுறவு கடைகளில் விற்பனை செய்யவும் விரிவான ஏற்பாடுகளை செய்ய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தக்காளியை குறைந்த விலைக்கு விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • தமிழகம் முழுவதும் மொத்தம் 111 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும்.

    சென்னை:

    தக்காளி விலை கிலோ ரூ.130 வரை உயர்ந்து விட்டதால் அதை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து தலைமை செயலகத்தில் அமைச்சர் பெரியகருப்பன் இன்று கூட்டுறவுத்துறை அதிகாரிகள், கூட்டுறவு சங்க பதிவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    அதன் பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    தக்காளியை குறைந்த விலைக்கு விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் நாளை முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட உள்ளது.

    வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை என 3 ஆக பிரித்து மொத்தம் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் சில ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யும் அளவில் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும்.

    தமிழகம் முழுவதும் மொத்தம் 111 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். ஒரு கிலோ தக்காளி ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.

    • தற்காலிகமான தக்காளி விலையேற்றத்தை கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொண்டு வருகிறது.
    • சட்டவிரோதமாக தக்காளியை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிகை விடப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பண்ணை பசுமை கடையை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் தக்காளி விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த கூட்டுறவுத்துறையின் மூலம் செயல்பட்டு வரும், பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு கோடையில் கடும் வெப்பம் நிலவியதால் விவசாயிகள் தக்காளி பயிரிடுவது கணிசமாக குறைந்ததாலும், அண்டை மாநிலங்களிலிருந்து தக்காளி வரத்து குறைந்ததாலும், கடந்த வாரம் முதல் தக்காளி விலை அதிகரித்துள்ளது. தோராயமாக நாள் ஒன்றுக்கு சென்னை, கோயம்பேடு மார்கெட்டிற்கு 800டன் வரையிலான வரக்கூடிய தக்காளி வரத்து தற்போது 300டன் என்ற அளவில் குறைந்துள்ளது. இதனால் வெளிச்சந்தைகளில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில், கூட்டுறவுத்துறையின் மூலம் தமிழகத்தில் செயல்பட்டு வரும் 62 பண்ணை பசுமை நுகர்வோர் பசுமை கடைகள் 3 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் இன்று முதல் குறைந்தபட்சமாக தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு ரூ.60 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலையானது வெளிச்சந்தையுடன் ஒப்பிடுகையில் ரூ.30 முதல் ரூ.40 வரை குறைவானதாகும்.

    திருவல்லிக்கேணி நகர கூட்டுறவுச் சங்கத்தின் கீழ் தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, ராஜா அண்ணாமலைபுரம், கீழ்ப்பாக்கம், பெரியார்நகர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், அம்மா உணவத்திற்கும் தனியாக தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த தற்காலிகமான தக்காளி விலையேற்றத்தை கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொண்டு வருகிறது. மேலும், சட்டவிரோதமாக தக்காளியை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிகை விடப்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால் தமிழ்நாட்டில் உள்ள 35,000-க்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகள் மூலம் தக்காளி விற்பனையினை விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.10.78 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
    • அமைச்சர் பெரியகருப்பன் சான்றிதழ் வழங்கினார்

    சிவகங்கை

    சிவகங்கையில் கூட்டுறவுத்துறை சார்பில் 371 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.10.78 கோடி மதிப்பீட்டில் கடன் தள்ளுபடிக்கான சான்று மற்றும் 7 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.30.10 லட்சம் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.

    இதில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களையும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவிகளையும் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 2022-23-ம் ஆண்டில் 472 பேருக்கு ரூ.14.65 கோடி மதிப்பீட்டில் மகளிர் சுய உதவி குழு கடன் வழங்கப்பட்டுள்ளது. ேமலும் முதல்-அமைச்சரின் ஆணையின் படி தமிழகத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் அன்றைய தேதியில் நிலுவையில் இருக்கும் மகளிர் சுய உதவி குழு கடன்கள் தள்ளுபடி செய்ய அரசாணை வெளியி டப்பட்டது.

    அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 732 மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் 38 ஆயிரத்து 681 உறுப்பினர்களிடம் நிலுவையாக இருந்த ரூ.82.04 கோடி மகளிர் சுய உதவி குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

    அதற்கான தொடக்க நிகழ்வாக இன்றைய தினம் 371 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.10.78 கோடி மதிப்பீட்டில் கடன் தள்ளுபடிக்கான சான்றுகள் வழங்கி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதை தவிர, 7 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.30.10 லட்சம் மதிப்பீட்டிலான கடனுதவிகளும் வழங்கப்பட்டுள்ளது.

    அரசின் திட்டங்களின் மூலம் பயன்பெற்று வரும் பெண்கள், திட்டங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் அதனை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு தங்களின் வாழ்வா தாரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) கோ.ஜினு, மேலாண்மை இயக்குநர் (மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி) ரவிச்சந்திரன், ஆவின் பால்வளத்தலைவர் சேங்கைமாறன், சிவகங்கை நகர் மன்றத் தலைவர் துரைஆனந்த், காரைக்குடி சரகத்துணை பதிவாளர் சீமான், சிவகங்கை துணை பதிவாளர் பாலச்சந்திரன், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து மற்றும் பலர் பங்கேற்றனர்.

    ×