என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேவாரம்"

    • சோழ நாட்டு திருவெண்ணை நல்லூர் சடையப்ப வள்ளல் கம்பரை ஆதரித்தார்.
    • முதல் குலோத்துங்க சோழன் கி.பி. 12ம் நூற்றாண்டில் கம்பரை ராமாயணம் எழுத வேண்டினான்.

    ஒற்றியூரில் கம்பர் ராமாயணம் எழுதினார்

    சான்றோருடையது தொண்டை நன்னாடு என்பதால் கல்வியில் சிறந்த கம்பன், வடமொழி வான்மீகி ராமாயணத்தைக் கேட்டு, அதைக் தமிழில் மொழிபெயர்த்து எழுத சோழ நாட்டிலிருந்து, தொண்டை நாட்டிலுள்ள திருவொற்றியூர் வந்தார்.

    கவி சக்கரவர்த்தி உவச்சர் குலத்தைச் சேர்ந்தவர். இக்குலத்தை சேர்ந்தவர்களே ஸ்ரீ வட்டபாறை அம்மனை பூசித்து வந்தனர்.

    சோழ நாட்டு திருவெண்ணை நல்லூர் சடையப்ப வள்ளல் கம்பரை ஆதரித்தார்.

    திருவொற்றியூரில் வடமொழி வான்மீகி ராமாயணத்தை கேட்டு அதைத் தமிழில் மொழிபெயர்த்து ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றினார்.

    இதற்கான ஆதாரங்கள் கல்வெட்டுக்கள், புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    முதல் குலோத்துங்க சோழன் கி.பி. 12ம் நூற்றாண்டில் கம்பரை ராமாயணம் எழுத வேண்டினான்.

    வடமொழியில் இருந்த வால்மீகி ராமாயணத்தை கற்க கம்பர் திருவொற்றியூர் வந்தார்.

    திருவொற்றியூர் சதுரானை பண்டிதர் என்பவர் மடம் ஒன்றை நிறுவினார்.

    இவர் கேரள நாட்டினர்.

    பல கலைகளையும் பயின்றவர் என்று தமிழக வரலாற்றில் (பக்கம் 356) கல்வெட்டை ஆதாரமாகக் கொண்டு கூறுகிறது.

    இவரிடம் தான் பகல் எல்லாம் வடமொழி வான்மீகி ராமாயணத்தை கம்பர் கேட்டு, இரவு முழுவதும் அதைத் தமிழில் எழுதினார்.

    கம்பர் உவச்சர் குலத்தவர், காளி பக்தர், எனவே தினமும் வட்டபாறை காளியம்மனை வணங்கிய பிறகே ராமாயணத்தை எழுதுவார்.

    இரவில் தமிழில் பாட்ல எழுதும் போது வட்டபாறை நாச்சியார்,பெயர் வடிவில் வந்து ராமாயணம் எழுதும் கம்பனுக்குத் தீபந்தம் ஏந்தி நின்றதைக் கம்பரே பாடியுள்ளார்.

    ஒற்றியூர் காக்க உறைகின்றகாளியே

    வெற்றியூர்க் காகுத்தன் மெய்ச்சரிதை & பற்றியே

    நந்தாது எழுதற்கு நள்ளிரவில் மாணாக்கர்

    பிந்தாமல் பந்தம் பிடி

    தீப்பந்தம் ஏந்தி நின்று வட்டபாறை அம்மனே கம்பனின் தமிழுக்குத்தொண்டு செய்துள்ளதும், சதுரானை பண்டித மடத்தில் உள்ள ஒருபெண் மேல் கம்பன் அன்பு கொண்டு பாடியுள்ளதும் இங்கு அகச்சான்றுகளாய் உள்ளன.

    கம்பர், வான்மீகி ராமாயண வடமொழிகள் மூல படம் கேட்க ஒற்றியூர் சதுரானை மடம் வந்ததும், வட்டபாறையம்மன் அருளால் தமிழில் ராமாயணம் பாடியதும் தனிச்சிறப்புக்குரிய செய்தியாகும்.

    • இந்த தலவிருட்ச மரமாகிய அத்தி மரத்தின் கீழ் அமர்ந்து தவம் புரிந்து சிவனருள் பெற்றார்.
    • அடியார் பசித்திருக்க அன்னை பொறுப்பாளோ?

    அண்ணி வடிவில் வந்து ராமலிங்க வள்ளலார் அடிகளுக்கு சாதம் பரிமாறிய அன்னை

    ராமலிங்க அடிகள் தனது 12வது வயதிலிருந்து 35வது வயது வரை 24 ஆண்டுகள் இடைவிடாமல் இந்த ஒற்றியூர் இறைவனை வந்து வணங்கினார்.

    இந்த தலவிருட்ச மரமாகிய அத்தி மரத்தின் கீழ் அமர்ந்து தவம் புரிந்து சிவனருள் பெற்றார்.

    அவர் அருளிச் செய்த 6 திருமுறைகளில் 3 திருமுறைகள் முற்றிலும் திருவொற்றியூரின் மேன்மையை உணர்த்துகின்றன.

    ஆதிபுரிஸ்வரர் மீது எழுத்தறி பெருமான் மாலை என 31 பாடல்களையும், வடிவுடையம்மன் மீது ஸ்ரீ வடிவுடை மாணிக்க மாலை என 101 பாடல்களையும் பாடியுள்ளார்.

    ஸ்ரீ தியாகராஜ பெருமானது பவனி பற்றியும் சிறப்பாக பாடியுள்ளார்.

    திருவொற்றியூர் முருகன் கற்பூரம் ஏற்ற காசு இன்றி மிகவும் வருந்தி பாடியுள்ளார்.

    "அருமருந்தே தணிகாசலம் மேவும் ஆருயிரே

    திருமருங்கார் ஒற்றியூர் மேவிய நின் திருமுன்னதால்

    ஒருமருங்கு ஏற்ற என் செய்வேன்

    கற்பூர ஒளியினுக்கே" என்று வருந்தி பாடியுள்ளார்.

    அடியார் பசித்திருக்க அன்னை பொறுப்பாளோ?

    ஒருநாள் இரவு அன்னை ஸ்ரீ வடிவுடையாளை தரிசித்து கால்நோக நடந்து சென்று நள்ளிவு ஆனதால் வீட்டில் அண்ணியை எழுப்ப மனமின்றி பசியோடு வீட்டுத் திண்ணையில் ஸ்ரீ ராமலிங்க அடிகள் தூங்கச் சென்றார்.

    அண்ணி வடிவில் அன்னை ஸ்ரீ வடிவுடையாளே அவருக்கு சாதம் தந்து அருள் செய்தாள்.

    குழந்தையின் பசியை பொறுக்காது ஞானபால் தந்தவளாயிற்றே? அடியாரை பசிக்க விடுவாளோ? என்று ராமலிங்க அடிகளார் பாடுகிறார்.

    • இங்கு முற்றும் துறந்த ஞானியாகக் கோவணத்துடன் வருகை தந்தார்.
    • முடிவாக ஜீவ சமாதியாக கடற்கரை அருகில் சிவலிங்க வடிவாகவே ஆனார்.

    திருவொற்றியூரில் பட்டினத்தார் முக்தி

    "பட்டினத்தார் உலகையே துறந்தவர். அவரைபோல அனைத்தையும் துறந்தவர் பூவுலகில் யாரும் இல்லை" என்று தாயுமானவர் பாடியுள்ளார்.

    அத்தகைய பட்டினத்தார் முக்திபெற்ற இடம் திருவொற்றியூர்.

    இங்கு முற்றும் துறந்த ஞானியாகக் கோவணத்துடன் வருகை தந்தார்.

    பக்திரசம் சொட்டச் சொட்ட பல பாடல்கள் பாடினார்.

    திருவொற்றியூரில் தெருவில் நடந்து போனேன் காலடி மண்ணை நெற்றியில் திருநீறாக பூசினால் பிறவி நோய்க்கும் அருமுருந்தாகும் என்று பட்டினத்தார் பாடலில் கூறியுள்ளார்.

    பட்டினத்தார் இந்த ஊரில் மீனவச் சிறுவர்களுடன் விளையாடினார்.

    மணலைத் தோண்டி அதில் தன்னை புதைக்கச் செய்தார்.

    வேறு இடத்தில் இருந்து வெளியில் வந்தார்.

    இதுபோல 2 முறை செய்தார். 3வது முறையும் புதைத்த போது அவர் வெளியே வரவில்லை.

    தோண்டி பார்க்கும் போது இறைவனடி சேர்ந்து லிங்கமாக காட்சி தந்தார்.

    திருவொற்றியூர் இறைவனை பாடி அர்ச்சனை செய்ய ஏதுவாக 28 போற்றி பாடல்கள் பாடியுள்ளார்.

    முடிவாக ஜீவ சமாதியாக கடற்கரை அருகில் சிவலிங்க வடிவாகவே ஆனார்.

    இவரது சமாதிக் கோவில் திருவொற்றியூர் கடற்கரை சாலை அருகே இன்றும் உள்ளது.

    • தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது தேவாரம் என்று பெயர் பெற்றதாக கூறுவர்.
    • மெய்தவத்தின்முயல் வார்உயர்வானகம் எய்தும் புகலூரே.

    சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை தேவாரம் என்று அழைக்கிறோம்.

    இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள்.

    தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது தேவாரம் என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர்.

    இந்த தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.

    பாடல்:-

    செய்தவத்தர்மிகு தேரர்கள்சாக்கியர்

    செப்பில்பொருள் அல்லாக்

    கைதவத்தர்மொழி யைத்தவிர்வார்கள்

    கடவுள்ளிடம் போலும்

    கொய்துபத்தர்மல ரும்புனலும்கொடு

    தூவித்துதி செய்து

    மெய்தவத்தின்முயல் வார்உயர்வானகம்

    எய்தும் புகலூரே.

    - திருஞானசம்பந்தர்

    விளக்கம்:-

    சாக்கியர், சமணர் ஆகியோர்களின் உண்மையில்லாத வஞ்சகம் நிறைந்த மொழிகளை கேளாதவராய், மிகுதியான தவத்தை செய்யும் அடியார்களின் தலைவராகிய சிவபெருமானுக்கு உகந்த இடமானது, அடியார்கள் மலர் கொய்து வந்து துதிப்பாடி, தவநெறியில் முயன்று உயர் வானகத்தை அடைவதற்குரிய வழிபாடுகளை செய்யும் புகலூர் ஆகும்.

    • இக்கோயில் பல யுகங்களை தாண்டிய தேவார பாடல் பெற்ற தலம் ஆகும்.
    • அம்மன் சன்னதிக்கு அருகே உள்ள எமனை வழிபட்ட பின்னர் தான் ஏனையகடவுள்களை வழிபட தொடங்குவார்கள்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகா, ஸ்ரீவாஞ்சியம் மங்களாம்பிகை சமேத வாஞ்சிநாதர் கோவில் மிகப் பிரபல மான கோவிலாகும். இவ்கோ விலில் இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்து சாமி தரிசனத்திற்காக வும், தங்களின் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக, தங்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களில் இருந்து, விடுபடவும் வழிபாடு செய்ய பக்தர்கள் பலர் வருகை தருகின்றனர்.

    இவ்வாலயத்தில் இந்தியாவிலேயே எமனுக்கு என்று தனி சன்னதி உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான குளம், குப்தகங்கை என அழைக்க–ப்படுகிறது. இக்குளத்தில் திருமகள் 64 கலைகள் ஓடு வாசம் செய்வதாக ஐதீகம். இக்கோயில் பல யுகங்களை தாண்டிய கோயில் என வரலாற்று புராணங்கள் சொல்லுகின்றன. இத்திரு–க்கோயிலை தேவாரம் பாடிய மூவர் பாடிய திருத்தலம் ஆகும்.

    திருவாஞ்சியம் கிராமம் சோழ மன்னர்கள் காலத்தில் துணை தலைநகரமாகவும் இருந்ததாக வரலாறு கூறுகின்றன. கோவிலை காண்பதற்கும், இக்கோ–யிலில் வழிபடுவதற்கும், குளத்தில் குளிப்பது, காசியில் உள்ள கங்கை யில் நீராடுவதற்கு சமம், தங்களின் பாவங்கள் நீங்கும் என்ற ஐதீகம் உள்ளது. பக்தர்கள் பலர் இங்கு வருகை தந்து தங்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களுக்கு பரிகாரம் செய்யும் திருத்தலமாக விளங்குகிறது. வாஞ்சிநாதர் மற்றும் மங்களாம்பிகையை வழிபடுவதற்கு முன்பு இங்குள்ள அம்மன்சன்ன தியில் எமனை வழிபட்ட பின்னர் ஏனையகடவு ள்களை வழிபட தொடங்கு வார்கள்.

    அத்தகைய சிறப்பு வாய்ந்த திருவாஞ்சியம் வாஞ்சிநாத ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர் சுற்றுலாப்பயணிகள் தங்குவதற்கான விடுதி, வாகனம் நிறுத்துவதற்கான இருப்பிட வசதி, கழிப்பிட வசதிகள், கோயிலின் தல வரலாறு அறிந்து கொள்ளக்கூடிய வகையில், அருங்காட்சியகம், திருவாஞ்சியம் நகரத்தில் பெருமையை உணர கூடிய வகையில், கலை அரங்கம் அமைக்கப்பட வேண்டுமென பொதும–க்களும் பக்தர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். பக்தர்களின் கோரிக்கையை இந்து சமய அறநிலையத்துறை நிறைவேற்றுமா என எதிர்பார்க்கின்றனர்.

    ×