search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரும்பு சட்டர்கள்"

    • காஞ்சிக்கோயில் குப்பை கிடங்கு அருகே தரைப்பாலம் கட்டும் வேலை நடக்கும் இடத்தில் இரும்பு சட்டர்களை யாரோ திருடி சென்று விட்டனர்.
    • இதனையடுத்து ஆறுமுகம் இது தொடர்பாக காஞ்சிகோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி வழக்கு பதிவு செய்து திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.

    பெருந்துறை:

    பவானி ஊராட்சி கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 43). இவர் தனியாருக்கு சொந்தமான கட்டுமான கம்பெனியில் சப்-கான்ட்ராக்டராக வேலை எடுத்து செய்து வருகிறார்.

    கடந்த 3 மாதங்களாக காஞ்சிக்கோயில் முதல் சித்தோடு வரை தார் ரோட்டை அகலப்படுத்தும் பணி செய்து வந்துள்ளார். இவர் பணி செய்து வந்த இடத்தில் அடிக்கடி இரும்பு பொருட்களை யாரோ திருடி சென்று வந்தனர்.

    இந்நிலையில் சம்ப வத்தன்று ஆறுமுகம் காஞ்சிக்கோயில் குப்பை கிடங்கு அருகே தரைப்பாலம் கட்டும் வேலை செய்து வந்தனர். பின்னர் வேலை முடித்து வீட்டிற்கு சென்று விட்டார்.

    மீண்டும் இரவு 9 மணி அளவில் வந்து பார்த்தபோது 5 இரும்பு ஷட்டர்களை யாரோ திருடி சென்று விட்டது தெரிய வந்தது. கடந்த 3 மாத காலத்திற்குள் 90 இரும்பு சட்டர்களை யாரோ திருடி சென்று விட்டனர்.

    இதன் மொத்த மதிப்பு ரூ.90 ஆயிரம் இருக்கும்.

    இதனையடுத்து ஆறுமுகம் இது தொடர்பாக காஞ்சிகோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி வழக்கு பதிவு செய்து திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.

    ×