search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடி ஏற்றம்"

    • செஞ்சி முருகன் கோவிலில் கொடி ஏற்றத்துடன் ஆடி கிருத்திகை விழா தொடங்கப்பட்டது.
    • காலையில் வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை சிறப்பு பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது.

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி திருவண்ணாமலை சாலை பி.ஏரிக்கரையில் உள்ள ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி ஆலய 49 -வது ஆண்டு ஆடி கிருத்திகை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு காலையில் வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை சிறப்பு பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. செஞ்சி ஒழுங்குமுறை விற்பணை கூட நெல், அரிசி, மணிலா, வியாபாரிகள் .மற்றும் எடை பணி தொழிலாளர்கள் சார்பில் நடைபெறும் இவ்விழாவில் 22-ந் தேதி சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேக ஆராதனையும், மாலை திருவீதியுலாவும் நடைபெறுகிறது. 23-ம்தேதி ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயத்தில் இருந்து 108 பால் குட ஊர்வலமும், சக்திவேல் அபிஷேகம் மற்றும் ஊர்வலமும், தொடர்நது காலை 10 மணிக்கு மேல் அகினி சட்டி ஊர்வலமும், தீமித்தல் ஆகியவைதேர் வீதியுலாவும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை செஞ்சிஒழுங்குமுறை விற்பனைக்கூட நெல் அரிசி, மணிலா, வியாபாரிகள் சங்கம் மற்றும் எடைபணி தொழிலாளர்கள், ஊர் பொது மக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரத்தில் 1,600 ஆண்டு பழமை வாய்ந்த நடனபாதேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடந்தோறும் பிரம்ம உற்சவம் விழா 13 நாட்கள் நடைபெறுவது வழக்கம். தொடர்ந்து பிரம்ம உற்சவ விழா கடந்த 30 -ந் தேதி பிடாரி அம்மன் உற்சவத்துடன் தொடங்கியது.

    நேற்று (1 -ந் தேதி) விநாயகர் பூஜை மற்றும் பெரியசாமி வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது. இன்று பிரம்ம உற்சவத்தை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது. தொடர்ந்து நடன பாதேஸ்வரர் மற்றும் அஸ்தாளம்பிக்கை தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மங்கள வாத்தியத்துடன் சிறப்பு அலங்காரத்தில் சாமி புறப்பட்டு கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.

    பின்னர் வேத மந்திரம் முழங்க மங்கள இசை வாசித்தபடி கொடியேற்று விழா விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை சூரிய பிரபை வாகனத்தில் சாமி வீதியுலா நடைபெறுகிறது. பின்னர் தினந்தோறும் காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்று, இரவு பல்வேறு வாகனத்தில் சாமி மீது நடைபெற உள்ளது. 7-ம் நாள் உற்சவமான வருகிற 8- ந்தேதி காலையில் அதிகார நந்தி மற்றும் மாலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. 10 -ந் தேதி முக்கிய விழாவான தேர்த்திருவிழா காலை 9 மணி முதல் 10:30 மணிக்குள் நடைபெற உள்ளது. அன்று இரவு தேரடி இறங்குதல், மறுநாள் (11- ந்தேதி) காலை நடராஜர் தரிசனம், மாலை தீர்த்தவாரி மற்றும் 12- ந்தேதி காலை சண்டிகேஸ்வரர் உற்சவம், இரவு ரிஷப வாகனம் வீதி உலா, 13- ந் தேதி இரவு தெப்பல் உற்சவம் நடைபெற உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் மகாதேவி தலைமையில் கணக்கர் சரவணன், கவுன்சிலர் செல்வகுமார் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    ×