என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாசன"
- தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- சொட்டு நீர் பாசன திட்டத்திற்கு மட்டுமே இணைய தளத்தில் பதிவு செய்து பயன்பெறும் வகையில் வசதிகள் அமைக்கப்பட்டிருந்தது.
வாழப்பாடி:
அயோத்தியாப்பட்டணம் வட்டார தோட்டக்கலைத்து றை உதவி இயக்குநர். கலை வாணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்துறையின் கீழ் பல்வேறு திட்டங்களில் பயன் பெறுவதற்கு, உழவன் செயலியில் பதிவு செய்து முன்னுரிமை அடிப்ப டையில் திட்டங்களை விவசாயிகள் இதுவரை பெற்று வந்தனர்.
சொட்டு நீர் பாசன திட்டத்திற்கு மட்டுமே இணைய தளத்தில் பதிவு செய்து பயன்பெறும் வகையில் வசதிகள் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், நடப்பு ஆண்டு 2022--–23 நிதியாண்டில் அனைத்து விவசாயிகளும் இணைய தளத்தில் https://tnhorticulture.tn.gov.in/tnhortnet/registration_new.php என்ற முகவரியை பயன்படுத்தி பதிவு செய்தால் மட்டுமே மானியம் பெற இயலும் என தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.
எனவே, அயோத்தி யாப்பட்டணம் வட்டாரத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் மேற்கண்ட இணையதள முகவரியை பயன்படுத்தி தோட்டக்கலைத்துறையில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் மற்றும் அரசு மானியங்களை பெற விண்ணப்பித்து பயன் பெற வேண்டும்.இதுமட்டுமின்றி, தேசிய தோட்க்கலை இயக்க திட்டத்தின் மூலம், வீரிய காய்கறிகள் பரப்பு விரிவாக்கத்தில், ஆடிப்பட்ட த்தில் நடுவதற்கு தக்காளி, கத்திரி, மிளகாய் நாற்றுகளை இணையத்தில் பதிவு செய்து விவசாயிகள் பெற்றுக் கொள்ள லாம்.
நடப்பாண்டில் கலை ஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் தேர்வு செய்யப்பட்டுள்ள அனுப்பூர், மின்னாம்பள்ளி, வளையக்காரனுார், கருமாபுரம், விளாம்பட்டி, பூவனுார், கோராத்துப்பட்டி, எஸ்.என்.மங்கலம், ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுத்து தோட்டக்கலைத்துறை திட்டங்களை 80 சதவீதம் செயல்படுத்த அரசாணை வழங்கப்பட்டுள்ளது.
நுண்ணீர் பாசனம், காய்கறிகள் மற்றும் பழச்செடிகள் பரப்பு அதிகரித்தல், துல்லியப் பண்ணையம், வாழை மற்றும் காய்கறி ஊடுபயிர்கள், தென்னையில் ஊடுபயிர், அங்கக வேளாண்மை உள்ளிட்ட திட்டங்கள் செயல்ப டுத்தப்படுகிறது.
தோட்டக்கலை பயிர்களில் பூச்சிநோய் தாக்குதல், மகசூல் இழப்பு மற்றும் பயிர் சேதாரம் உள்ளிட்ட விபரங்களை தங்கள் பகுதி உதவி தோட்டக்கலை அலுவலர்கள் மூலமாக அல்லது வேளாண்மை விரிவாக்க மையம்–தோட்டக்கலைத்துறை அலுவலகத்திலோ தகவல் தெரிவித்து தீர்வு பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- கொளத்தூர் வட்டார விவசாயிகளுக்கு நுண்ணுயிர் பாசன முறை தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.
- நுண்ணுயிர் பாசன முறைகளுக்கு அரசு மானியம் குறித்தும், சோயாபீன் செய்வதால் முக்கியத்துவம் குறித்தும் உதவி வேளாண்மை அலுவலர் ரவிசங்கர் எடுத்து கூறினார்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் கொளத்தூர் வட்டாரத்திற்கு உட்பட்ட மேட்டூர் அடுத்த நவபட்டி கிராமத்தில் அட்மா வேளாண்மை தொழில்நுட்ப முகமை திட்டத்தின் கீழ் நுண்ணுயிர் பாசன முறை பரப்புதல் தொடர்பான தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.
நவபட்டி கிராமத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த முகாமிற்கு கொளத்தூர் வேளாண்மை உதவி இயக்குனர் ராஜகோபால் தலைமை வகித்தார்.
ஓய்வு பெற்ற துணை இயக்குனர் நாகலிங்கம், நுண்ணுயிர் பாசன முறைகள் ஏன் அமைக்க வேண்டும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கமாக எடுத்து கூறினார் நுண்ணுயிர் பாசன நிறுவனத்தின் செயல்பாடுகள் பாசன குழாய் எவ்வளவு இடை–வெளியில் அமைக்க வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளித்தார்.
நுண்ணுயிர் பாசன முறைகளுக்கு அரசு மானியம் குறித்தும், சோயாபீன் செய்வதால் முக்கியத்துவம் குறித்தும் உதவி வேளாண்மை அலுவலர் ரவிசங்கர் எடுத்து கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் கமலக்கண்ணன் செய்திருந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்