என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கட்டுப்பாட்டு"
- விக்கிர வாண்டி பஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது டிராக்டர் டிப்ப ரின் ஹைட்ராலிக் திடீரென ரிலீசானது.
- பஸ் நிலையம் அருகில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்
கொய்யா மரகட்டை களை ஏற்றிக்கொண்டு ஒரு டிராக்டர் இன்று காலை 7.30 மணிக்கு முண்டியம்பாக்கம் நோக்கி சென்றது. இந்த டிராக்டரை விக்கிரவாண்டியைச் சேர்ந்த நாகராஜ் (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார். டிராக்டர் விக்கிர வாண்டி பஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது டிராக்டர் டிப்ப ரின் ஹைட்ராலிக் திடீரென ரிலீசானது. இதனால் டிப்பர் மேலே தூக்கியது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையில் தலை கீழாக கவிழ்ந்தது.
விபத்தில் டிராக்டர் டிரைவர் நாகராஜ்க்கு படுகாயம் ஏற்பட்டது. அவ்வழியே சென்றவர்கள் அவரை மீட்டு முண்டியம் பாக்கத்தில் உள்ள விழுப்பு ரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவல் அறிந்த விக்கிர வாண்டி போலீசார் மற்றும் தீயணைப்பு துறை அலுவ லர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சாலை யில் கவிழ்ந்த கிடந்த டிராக்டர் டிப்பரை அகற்றி னர். இதனால் விக்கிர வாண்டி பஸ் நிலையம் அருகில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- ஒரே நாளில் மேலும் 33 பேருக்கு பாதிப்பு சேலத்தில் விரைவில் கொரோனா கட்டுப்பாட்டு மையம் திறப்பு சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
- 154 பேருக்கு சிகிச்சை.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் 28 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று மேலும் 33 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதில் சேலம் மாநக–ராட்சியில் 17 பேர், சேலம் சுகாதார மாவட்டத்தில் 7 பேர், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் 9 பேரும் அடங்குவர்.
இவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சேலம் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 10 பேர் குணமாகி வீடு திரும்பினர். மேலும் 154 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கொேரானா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் முக கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியையும் கடை பிடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் கொரோனா தொற்று குறித்த சந்தேகங்க–ளுக்கும், நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை தெரிந்து கொள்ளவும் கலெக்டர் அலுவலகத்தில் விரைவில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட உள்ளது. இதில் சுகாதாரத்துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் இணைந்து செயல்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்