என் மலர்
நீங்கள் தேடியது "தமிழக கொரோனா நிலவரம்"
- மருத்துவமனையில் 381 பேர் கொரோனா சிகிச்சைக்காக அனுமதி.
- அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பாதிப்பு இல்லை.
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று புதிதாக 247 ஆண்கள், 187 பெண்கள் என மொத்தம் 434 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 85 பேர், கோவையில் 59 பேர், செங்கல்பட்டில் 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பாதிப்பு இல்லை,
அவற்றை தவிர பிற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. மருத்துவமனைகளில் இன்று 381 பேர் மட்டும் கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்புக்குள்ளாகி 4 ஆயிரத்து 896 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
- சென்னையில் 90 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் மேலும் 539 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 628 ஆக உள்ளது.
இதுவரை 35 லட்சத்து 22 ஆயிரத்து 660 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு இல்லை. தமிழகம் முழுவதும் 5,407 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- சென்னையில் 561 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
- கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு இல்லை.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மாநில மக்கள் நலவாழ்வு மற்றும் மருத்துவத்துறை தகவல் வெளியிட்டு வருகிறது.
அதன்படி தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,142 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 22 ஆயிரத்து 142 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 2,219 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக இன்று உயிரிழப்பு எதுவும் இல்லை.
கொரோன தொற்று பாதிப்பை கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 31,116 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தலைநகர் சென்னையில் இன்று 561 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
- சென்னையில் இன்று 575 பேருக்கு கொரோனா பாதிப்பு
- கொரோனா பாதிப்பு காரணமாக இன்று உயிரிழப்பு எதுவும் இல்லை.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் இன்று புதிதாக 2,223- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 20 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2,402- ஆகும். தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்பு எதுவும் இல்லை. கொரோனா தொற்று பரவலைக் கண்டறிய இன்று பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 33,312 ஆகும். தலைநகர் சென்னையில் இன்று 575- பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
- தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்று அதிகரித்துள்ளது.
- கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2,312-ல் இருந்து 2,340- ஆக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 15 ஆயிரத்து 461- ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 2,599 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு எதுவும் இல்லை.
இன்று 34,541 கொரோனா ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 618-ல் இருந்து 607 ஆக குறைந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 306- பேருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் 149-பேருக்கும், கோவை -165, சேலம் -88, காஞ்சிபுரம், 73, நெல்லை -71 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் மேலும் 2,312- பேருக்கு கொரோனா தொற்று
- கடந்த 24 மணி நேரத்தில் 33,058 பேர்களிடம் கொரோனா பரிசோதனை.
இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தில் மேலும் 2,312- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 13 ஆயிரத்து 121- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 2,682 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தொற்று பரவலைக் கண்டறிய இன்று பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 058- ஆகும். தலைநகர் சென்னையில் 618- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
- இன்று 1,542 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.
- சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 15,616- ஆக உள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று புதிதாக 2,654 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 85 ஆயிரத்து 429- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,542 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு எதுவும் இல்லை.
தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 30,545 ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் இன்று 1,066 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 15,616- ஆக உள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன.
- கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 13,319- ஆக உயர்வு உயர்வு.
- கொரோனாவில் இருந்து இன்று 1,372 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக வேகமாக அதிகரித்து வருகிறது. மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டு வரும் தினசரி பாதிப்பு தகவலின்படி நேற்று 2,385 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இன்று அதன் எண்ணிக்கை 2,500 தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் புதிதாக 2,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 13,319- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 1,372 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் இன்று 1,059 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.