search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 மாதங்களில்"

    • ஈரோடு மாவட்ட மலைவாழ் மக்களின் 70 ஆண்டு கால கோரிக்கையினை ஏற்று கத்திரிமலை பகுதியில் சாலை அமைக்க முடிவு வெசய்யப்பட்டது.
    • இச்சாலைப் பணி இன்னும் 4 மாதங்களில் நிறைவு பெற்று பொது மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கத்திரி பட்டி மலை கிராமம் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3500 அடிஉயரத்தில் கத்திரிபட்டி மலை உள்ளது.

    இங்கு மாதம்பட்டி, மலையம்பட்டி என 2 பகுதிகள் உள்ளது. இதில் 76 குடும்பங்களும், சுமார் 279 மக்களும் வசிக்கின்றனர். இந்த மலைப்பகுதி 45 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது.

    இந்த பகுதிக்கு செல்வதற்கு ரோடு வசதி இல்லாமல் இருந்தது. இதையடுத்து கத்திரிபட்டி கிராமத்துக்கு ரோடு அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்ட மலைவாழ் மக்களின் 70 ஆண்டு கால கோரிக்கையினை ஏற்று அந்த பகுதியில் சாலை அமைக்க முடிவு வெசய்யப்பட்டது.

    இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி மாதம் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் கத்திரிப்பட்டி வன எல்லை முதல் ஈசலாங்காடு வரை கப்பி சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

    அதனைத் தொடர்ந்து கடந்த 27.4.2022 அன்று ரூ.1.47 கோடி மதிப்பீட்டில் கத்திரி மலைப்பகுதி சாலையின் இரு புறங்களிலும் அமைந்துள்ள பாறைகளை முழுமையாக அகற்றி சாலை சமன் செய்யப்பட்டது.

    ஆரம்ப நிலைப் பணிைய கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு சாலை அமைக்கும் பணியினை விரைவாக முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இச்சாலை 8.10 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்படுகிறது.

    கலெக்டர் உத்தரவுப்படி கத்திரிபட்டி முதல் கத்திரி மலை சாலை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தற்போது மண்சாலை மேம்பாடு பணிகள் முடிந்துள்ளது. கரடு முரடான பாறைகள் உடைத்து மக்கள் சிரம மின்றி சாலையில் பயணம் செய்வதற்கு ஏதுவாக சீர் செய்யப்பட்டுள்ளது.

    கான்கிரீட் பணிகள் மற்றும் அடித்தளம் பொருட்கள் சேகாரம் நடைபெற்று வருகிறது. இச்சாலைப் பணி இன்னும் 4 மாதங்களில் நிறைவு பெற்று பொது மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் கத்திரிமலை ப்பகுதியில் 8 ஆட்டு கொட்டகை அமைக்க ப்பட்டுள்ளது. 18 மாட்டு கொட்டகை அமைக்கும் பணியும், சூரிய மின் சக்தியுடன் கூடிய 20 பசுமை வீடுகள் மற்றும் பிரதான் மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 7 வீடுகள் அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகிறது.

    அதனைத் தொடர்ந்து கத்திரிப்பட்டி வன எல்லை முதல் ஈசலாங்காடு வரை கப்பி சாலை அமைக்கும் பணியை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின் போது, அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவசங்கர், உதவி செயற்பொறியாளர் சிவபிரசாத் உள்பட அலுவலர்கள் பலர் உடனி ருந்தனர்.

    ×