என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மேற்கு மண்டல"
- நம்பியூர் குமுதா பள்ளி மைதானத்தில் 2 நாள் நடைபெறும் மேற்கு மண்டல அளவிலான கைப்பந்து போட்டி தொடக்க விழா நடைபெற்றது.
- இப்போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்று சிறப்பாக விளையாடும் வீரர்கள் தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் குமுதா பள்ளி மைதானத்தில் 2 நாள் நடைபெறும் மேற்கு மண்டல அளவிலான கைப்பந்து போட்டி தொடக்க விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு குமுதா பள்ளியின் தாளாளரும், கமிட்டி சேர்மனுமான கே.ஏ.ஜனகரத்தினம் தலைமை தாங்கினார். குமுதா பள்ளியின் செயலாளர் டாக்டர். அரவிந்தன், துணை செயலாளர் டாக்டர்.மாலினி, இணை தாளாளர் சுகந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மாநில கைப்பந்து கழக பொதுச்செயலாளர் மார்ட்டின் சுதாகர் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் 4 மண்டல ங்களில் நடைபெறும் மண்டல அளவிலான கைப்பந்து போட்டியில் ஒவ்வொரு மண்டலத்திலும் 8 மாவட்ட அணிகள் பங்குகொண்டு லீக் மற்றும் நாக்அவுட் முறையில் விளையாடினர். கைப்பந்து போட்டியில் வெற்றி பெறும் முதல் 4 அணிகளை தேர்வு செய்து அடுத்த மாதம் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
இப்போட்டிக்காக அரியலூர், நாகர்கோயில், வேலூர், ஈரோடு மண்டல அளவிலான போட்டிகள் நடைபெற்று கொண்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் போட்டியில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, தருமபுரி, சேலம், உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இப்போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்று சிறப்பாக விளையாடும் வீரர்கள் தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் குமுதா பள்ளியில் முதல்வர் மஞ்சுளா, தலைமை ஆசிரியை வசந்தி மற்றும் தமிழ்நாடு கைப்பந்து கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.