search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொறியியல் கல்லூரி"

    • சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரியில் கணிப்பொறியியல் துறை தொழில்நுட்ப கருத்தரங்கம் நடந்தது.
    • நவீன தொழில்நுட்பமான பிளாக்செயின் டெக்னாலஜியின் பயன்பாடுகள், முக்கியத்துவம் குறித்து சிறப்பு விருந்தினர் அவினாஷ் எடுத்துரைத்தார்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் கணிப்பொறியியல் துறை சார்பில் ஒரு நாள் தொழில்நுட்ப கருத்தரங்கம் நடந்தது.

    கல்லூரிதாளாளர்ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேஸ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். டீன் மாரிசாமி தொடக்க உரையாற்றினார். கணிப்பொறியியல் துறை தலைவர் ராமதிலகம் வாழ்த்துரை வழங்கினார்.

    கணிப்பொறியியல் துறையின் 4-ம் ஆண்டு மாணவி வைஷ்ணவி வரவேற்றார். 3-ம் ஆண்டு மாணவி கனகதுர்கா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி இன்க்ரீக்ஸ் டெக் சொலுசன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அவினாஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதே நிறுவனத்தின் இணை நிறுவனர் மொஹமத் நவ்சத்தும் பங்கேற்றார்.

    சிறப்பு விருந்தினர் அவினாஷ் பேசுகையில், நவீன தொழில்நுட்பமான பிளாக்செயின் டெக்னாலஜியின் பயன்பாடுகள், முக்கியத்துவம் மற்றும் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட சவால்களை சந்திப்பது குறித்து எடுத்துரைத்தார். மாணவர்கள் தொழில் அதிபர்களாகவும், மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருபவர்களாகவும் இருக்க வேண்டும். இதற்கு மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ. அமைப்பின் மூலமாக சிறு தொழில் தொடங்குவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொண்டு தொழில் அதிபராக வளர வேண்டும் என்றும் கூறினார்.

    நிகழ்ச்சியில் பேப்பர் பிரசண்ேடசன், பிளைண்ட் கோடிங், கேப் பெஸ்ட் , மக்ல்ஸ் இன்டலக்ட் போன்ற தொழில் நுட்பம் சார்ந்த போட்டிகளும், கிரேசி சேஸ், தம் சரசட்ஸ், டல்கோனா கேன்டி, ஜியூக்பாக்ஸ் போன்ற தொழில்நுட்பம் சாராத போட்டிகளும் நடந்தன.

    இந்த போட்டிகளில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 250 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கான நிறைவு விழாவில், 4-ம் ஆண்டு மாணவி லிதியா ஸ்ரீ நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்- ஒருங்கிணைப்பாளர்கள் அருண் சண்முகம், பாலகணேஷ், இறுதியாண்டு மாணவ ஒருங்கிணைப்பாளர்களான விக்னேஷ், மணிகண்டன், மதுபாலா, வைஷ்ணவி மற்றும் துறை பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் இணைந்து செய்திருந்தனர்.

    • பதிவுக்கட்டணத்தை விண்ணப்பதாரர் இணைய தளம் வாயிலாக செலுத்தலாம்.
    • இந்த கல்வியாண்டில் பகுதி நேர பி.இ. பட்டப்படிப்பு கலந்தாய்வு இணையதளத்தின் வாயிலாக மட்டுமே நடைபெறும்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தொழில் நுட்பக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கீழ்க்காணும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியற் கல்லூரிகளில் 2022-23-ம் கல்வியாண்டிற்கு தகுதி வாய்ந்த பட்டயப்படிப்பு முடித்து, பணிபுரியும் விண்ணப்பதாரர்களுக்கு பகுதி நேர பி.இ. பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    1. அரசினர் பொறியியற் கல்லூரி, கோயம்புத்தூர்.

    2. அரசினர் பொறியியற் கல்லூரி, சேலம்-636 011.

    3. அரசினர் பொறியியற் கல்லூரி, திருநெல்வேலி.

    4. அழகப்பசெட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி, காரைக்குடி.

    5. தந்தை பெரியார் அரசினர் பொறியியற் கல்லூரி, வேலூர்.

    6. அரசினர் பொறியியற் கல்லூரி, பர்கூர்.

    7. கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோயம்புத்தூர்.

    8. தியாகராஜர் பொறியியற் கல்லூரி, மதுரை.

    கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பதாரர் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளன்று பட்டயப்படிப்பு முடித்து, இரண்டு ஆண்டுகள் முழுமையாக நிறைவு பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணிபுரிகிறவராகவோ அல்லது இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்திருந்தவராகவோ இருக்க வேண்டும்.

    விண்ணப்பதாரர் www.ptbe-tnea.com என்ற இணையதள வாயிலாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும்.

    ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பதிவு செய்யலாம். விண்ணப்பங்கள் பதிவு துவங்கும் நாள்: 04.07.2022. முடிவுறும் நாள்: 03.08.2022.

    பதிவுக்கட்டணத்தை விண்ணப்பதாரர் இணைய தளம் வாயிலாக செலுத்தலாம்.

    இணையதள வசதி இல்லாத விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப்படி வத்தினை இணையதளம் வாயிலாக பதிவு செய்வதற்கு, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையத்தினை பயன்படுத்திக்கொள்ளலாம். அனைத்து டி.எப்.சி. மையங்களிலும் போதிய அளவில் கொரானா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த கல்வியாண்டில் பகுதி நேர பி.இ. பட்டப்படிப்பு கலந்தாய்வு இணையதளத்தின் வாயிலாக மட்டுமே நடைபெறும்.

    மேலும் விவரங்களை www.ptbe-tnea.com என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.தொடர்பு எண்: 0422-2590080, கைபேசி எண். 9486977757.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×