என் மலர்
நீங்கள் தேடியது "தமிழகத்தில் கொரோனா நிலவரம்"
- சென்னையில் 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
- இன்று 596 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
தமிழகத்தில் மேலும் 525 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 596 ஆக உள்ளது. இதுவரை 35 லட்சத்து 23 ஆயிரத்து 858 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு இல்லை. தமிழகம் முழுவதும் 5,268 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.சென்னையில் 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
- கொரோனா தொற்றில் இருந்து இன்று 2,458 பேர் குணமடைந்தனர்.
- கொரோனா தொற்றால் பாதிப்பட்டவர்களில் ஒருவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கூடுதலாக 2,316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 17 ஆயிரத்து 777- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இன்று 2,458 பேர் குணம் அடைந்துள்ளனர். எனினும், தொற்று பாதிப்பால் ஒருவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 34 ஆயிரத்து 135 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. தலைநகர் சென்னையில் இன்று 596- பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1072 பேருக்கு கொரோனா.
- கொரோனாவில் இருந்து இன்று ஒரே நாளில் 1,487 குணமடைந்துள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ள தினசரி கொரோனா பாதிப்பு நிலவரப்படி தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,672- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 14,504- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 1,487- பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் 1072 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். செங்கல்பட்டில் 373 பேருக்கும், கோவையில் 145 பேருக்கும், திருவள்ளூரில் 131 பேரும் புதிதாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.