என் மலர்
முகப்பு » நோட்டுப்புத்தகம்
நீங்கள் தேடியது "நோட்டுப்புத்தகம்"
- சோழவந்தானில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.
- ரூ.25ஆயிரம் மதிப்புள்ள நோட்டுகள், எழுதுபொருட்களை முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.
சோழவந்தான்
சோழவந்தான் சி.எஸ்.ஐ.தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் மற்றும் எழுதுபொருள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தாளாளர் எபினேசர்துரைராஜ் தலைமை தாங்கினார்.பெற்றோர்-ஆசிரியர் கழகத்தலைவர் ஆதிபெருமாள் முன்னிலை வைத்தார். ரூ.25ஆயிரம் மதிப்புள்ள நோட்டுகள் மற்றும் எழுதுபொருட்களை முன்னாள் மாணவர்களான கரூர் எல்.ஐ.சி. துணை மேலாளர் முத்துராமன்,சொக்கலிங்கபுரம் ஊராட்சிஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஜோயல்ராஜ், இல்லம் தேடிகல்வித் திட்ட மாநில கருத்தாளர் ராணிகுணசீலி ஆகியோர் வழங்கினர்.
தலைமை ஆசிரியர் ராபின்சன்செல்வகுமார் ஒருங்கிணைத்தார். ஆசிரியை பிரேமாஅன்னபுஷ்பம் வரவேற்றார். ஆசிரியைகள் வனிதாசாந்தகுமாரி, திவ்யா, கிறிஸ்டிஜெயஸ்டார் மற்றும் பெற்றோர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். ஆசிரியை பிரேம்குமாரி நன்றி கூறினார்.
×
X