search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜி.பி.எஸ்"

    • செடி, கொடி, மரங்களை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • மாஸ் கிளினீங் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் தலைமையில் தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர் பங்கேற்ற காலாண்டு நுகர்வோர் கூட்டம், கடந்த மார்ச் மாதம் கூட்டப்பட்டது. அதன் தீர்மான விபரம் தற்போது நுகர்வோர் அமைப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    அதில்,தெருக்களில் சரியான முறையில் வாட்டமாக மழைநீர் வடிகால் அமைத்து, பிரதான ஓடை, ஆறுகளின் வழியாக தண்ணீர் வழிந்தோடி செல்லும் வகையில் கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும் என நுகர்வோர் அமைப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். அதற்கு, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அளித்துள்ள விளக்கத்தில், 15வது நிதிக்குழு மானிய நிதியிலும், தூய்மை பாரத இயக்க திட்டத்தின் மூலமும் மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சிகளில் உள்ள தெருக்களில் நீர் தேங்காத வண்ணம் மழைநீர் வடிகால் அமைப்பு, வடிகால் அமைப்பு, தனிநபர் இல்லம் மற்றும் சமுதாய உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

    ஊராட்சிகளில் உள்ள குளங்கள் வற்றிய நிலையில் புதர், செடி, கொடி மண்டி, மரம் வளர்ந்து, குப்பைகள் கொட்டப்பட்டு அதில் வழிந்தோடி வரும் மழைநீர் தடைபடும் வகையில் உள்ளது என நுகர்வோர் அமைப்பினர் கூறியிருந்தனர்.இதற்கு ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அளித்துள்ள விளக்கத்தில், கிராம உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள குளம், ஊரணிகள் குடிமராமத்து திட்டத்தில் தூர்வாரப்பட்டுள்ளன. நீர் நிலைகளில் உள்ள புதர், செடி, கொடி, மரங்களை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மாதந்தோறும் 5 மற்றும் 20-ந் தேதிகளில் கிராம ஊராட்சிகளில் உள்ள குடிநீர் ஆதாரங்களை சுத்தம் செய்தல், குப்பை அகற்றுதல் போன்ற மாஸ் கிளினீங் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    அதிகாரிகளின் இந்த விளக்கம் குறித்து, தி கன்ஸ்யூமர் கேர் அசோசியேஷன் தலைவர் காதர்பாஷா கூறியதாவது:-

    நுகர்வோர் அமைப்பினரின் கேள்விகளுக்கு, சம்பந்தப்பட்ட துறையினர் விளக்கமளிப்பது பாரட்டுக்குரியது,வரவேற்கதக்கது. அதே நேரம், சரியான தகவலை அளிக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தின் பல இடங்களில் நீர்நிலைகள் சுத்தமாக இல்லை. உதாரணமாக நல்லாறு, கவுசிகா நதிக்கரையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன.பல ஊராட்சிகளை ஒட்டிய சாலையோர மழைநீர் கால்வாய் புதர்மண்டி, மழைநீர் வெளியேற வழியில்லாமல் உள்ளன. எனவே, ஊராட்சிகள் வாரியாக ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்தில் நீர்நிலைகளை சர்வே செய்து அவற்றை சுத்தப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    ×