என் மலர்
நீங்கள் தேடியது "சுற்றுலா தலங்களில் மாஸ்க்"
- திண்டுக்கல் மாவட்டத்தில் இரட்டை இலக்க கொரோனா பதிவு உருவாகி வருகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
- கொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் மற்றும் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
திண்டுக்கல்:
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலும் இரட்டை இலக்க கொரோனா பதிவு உருவாகி வருகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பழனி கோவிலுக்கு வருபவர்கள் முக கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு வராதவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் முக கவசம் வழங்கப்பட்டு வருகிறது.
இதேபோல் சுற்றுலா நகரான கொடைக்கானலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் கூட்டம் கூட்டமாகவும், முக கவசம் அணியாமலும் அவர்கள் செல்வதால் தொற்று மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே கொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் மற்றும் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் அபராதம் விதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.