என் மலர்
நீங்கள் தேடியது "அரசு போக்குவரத்து கழகம்"
- போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வர வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
- வரும் 9-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும்.
சென்னை:
அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 8 ஆண்டுகளாக வழங்கப்படாத அகவிலைப்படி உயர்வை வழங்க வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வருகிற 9-ந்தேதி முதல் 'ஸ்டிரைக்' நடத்த உள்ளனர்.
பொங்கலுக்கு முன்பாக இந்த ஸ்டிரைக் நடத்தப்பட உள்ளதால் பயணிகள் பாதிக்காமல் இருப்பதற்காக அனைத்து ஊழியர்களும் விடுமுறை எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் என்று போக்குவரத்து கழகங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் 9-ந்தேதி வேலைநிறுத்தப்போராட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் போக்குவரத்து கழகங்களில் மொத்தம் சுமார் 1,20,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இதில் தொ.மு.ச. தவிர்த்து மற்ற பிற தொழிற்சங்கங்களான சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தயாராகி வருகின்றனர்.
இதுகுறித்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கூறுகையில், பொங்கலுக்கு முன்பு எங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி முடிவு அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் 9-ந்தேதி ஸ்டிரைக்கை திரும்ப பெறும் எண்ணம் இல்லை. நாங்கள் முறையான ஸ்டிரைக் நோட்டீசு வழங்கி விட்டோம். 4-ந்தேதியே அந்த கெடு முடிந்துவிட்டது. இருந்தாலும் 5 நாள் 'டயம்' கொடுத்து 9-ந்தேதி தான் வேலைநிறுத்தம் நடத்த இருக்கிறோம்.
எனவே பொங்கல் சிறப்பு பஸ்களை இயக்குவது பாதிக்கப்படக்கூடாது என கருதும் தமிழக அரசு தொழிற்சங்கத்தினரை அழைத்து பிரச்சனைகளை பேசி தீர்க்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வருகிற 9-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர்.
- ஆலோசனை முடிவில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:
அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, தொழிலாளர் நல கமிஷனர் மற்றும் அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்துடன் நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வருகிற 9-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர்.
இதையடுத்து போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வர வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், செயலாளருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஆலோசனை முடிவில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
- 9-ந்தேதி வேலைநிறுத்தப்போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் இன்று அறிவித்துள்ளனர்.
- போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், செயலாளருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
சென்னை:
அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 8 ஆண்டுகளாக வழங்கப்படாத அகவிலைப்படி உயர்வை வழங்க வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வருகிற 9-ந்தேதி முதல் 'ஸ்டிரைக்' நடத்த உள்ளனர்.
பொங்கலுக்கு முன்பாக இந்த ஸ்டிரைக் நடத்தப்பட உள்ளதால் பயணிகள் பாதிக்காமல் இருப்பதற்காக அனைத்து ஊழியர்களும் விடுமுறை எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் என்று போக்குவரத்து கழகங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதையடுத்து 9-ந்தேதி வேலைநிறுத்தப்போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் இன்று அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், செயலாளருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு தமிழக அரசு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.
அதன் அடிப்படையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று மதியம் பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ் பெறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
- சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், செயலாளருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
- பேச்சுவார்த்தைக்கு வருமாறு போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு தமிழக அரசு மீண்டும் அழைப்பு விடுத்தது.
சென்னை:
அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 8 ஆண்டுகளாக வழங்கப்படாத அகவிலைப்படி உயர்வை வழங்க வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வருகிற 9-ந்தேதி முதல் 'ஸ்டிரைக்' நடத்த உள்ளனர்.
இதையடுத்து 9-ந்தேதி வேலைநிறுத்தப்போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்து இருந்தனர்.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், செயலாளருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு தமிழக அரசு மீண்டும் அழைப்பு விடுத்தது.
இந்நிலையில், சென்னை பல்லவன் இல்லத்தில் சிஐடியு, தொமுச, அண்ணா தொழிற்சங்க பேரவை உட்பட 20க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
- மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் பஸ்கள் ஓடும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
- சென்னை பாரிமுனையில் இருந்து வழக்கமான எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை:
சென்னையில் அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி அடைந்ததால் இன்று முதல் வேலைநிறுத்தத்தை தொடங்குவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இருந்தாலும் மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் பஸ்கள் ஓடும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் 32 பணிமனைகளில் இருந்து 2,749 மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. மொத்தம் 3092 மாநகர பஸ்கள் இயக்கப்பட வேண்டிய நிலையில், 2749 பஸ்கள் இயக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை பாரிமுனையில் இருந்து வழக்கமான எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் மாநகர பஸ்கள் வழக்கத்தை விட கூடுதலாக 103 சதவீதம் இயக்கப்படுகின்றன. மாநிலம் முழுவதும் அரசு விரைவு போக்குவரத்துகழக பஸ்கள் 100 சதவீதம் இயக்கப்படுகின்றன.
- அதிமுக ஆட்சியில் நிராகரிக்கப்பட்ட கோரிக்கைகள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன.
- இந்தியாவிலேயே எந்தவொரு போக்குவரத்து கழகத்திலும் இங்குள்ளது போன்ற கட்டமைப்பு இல்லை.
சென்னை:
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார்.
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:
* தமிழகம் முழுவதும் பஸ்களை முழுமையாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
* கூடுதலாக ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கான அகவிலைப்படியை, நிதி நெருக்கடியால் வழங்க முடியாத நிலை உள்ளது.
* அதிமுக ஆட்சியில் நிராகரிக்கப்பட்ட கோரிக்கைகள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன.
* கருணை அடிப்படையில் வேலை, புதிய பணியிடங்கள் நிரப்புதல் ஆகிய 2 கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
* கோரிக்கைகள் வைக்கப்படாமலேயே தீபாவளிக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்பட்டது.
* அண்ணா தொழிற்சங்கத்தோடு மற்ற தொழிற்சங்கங்கள் இணைந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது.
* திமுக எப்போதும் தொழிலாளர்களுக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய இயக்கம்.
* முன்வைக்கப்பட்ட 6 கோரிக்கைகளில் ஒரு கோரிக்கையை நிறைவேற்ற தான் அரசு சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது.
* தொழிற்சங்கம் என்பது மக்களுக்காக தான். கோரிக்கைளை முன்வைத்து போராட்டம் நடத்தலாம். ஆனால் அது மக்களை பாதிக்கக்கூடாது.
* இந்தியாவிலேயே எந்தவொரு போக்குவரத்து கழகத்திலும் இங்குள்ளது போன்ற கட்டமைப்பு இல்லை.
* 95 சதவீதத்திற்கும் மேல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
- தொழிற்சங்கங்கள் அனைத்தும் பெரும்பாலும் அரசியல் கட்சிகளை சார்ந்தே இயங்குகின்றன.
- இன்று காலை தி.மு.க.வின் தொ.மு.ச., காங்கிரசின் ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கங்களை சேர்ந்த பணியாளர்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டனர்.
சென்னை:
தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்களில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் சுமார் 70 தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. இந்த தொழிற்சங்கங்கள் அனைத்தும் பெரும்பாலும் அரசியல் கட்சிகளை சார்ந்தே இயங்குகின்றன.
தமிழக பேருந்து போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களுக்கு 15-வது ஊதிய ஒப்பந்தத்தை செயல்படுத்துவது, வாரிசுகளுக்கு வேலை, ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைதொகை உள்பட 6 அம்ச கோரிக்கைகளை கடந்த பல மாதங்களாக தீவிரமாக வலியுறுத்தி வருகிறார்கள். இந்த கோரிக்கைகளில் 70 தொழிற்சங்கத்துக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.
ஆனால் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு 9-ந்தேதி (இன்று) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்தப்படும் என்ற அறிவிப்பில் பேருந்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இடையே மாறுபட்ட கருத்துக்கள் எழுந்துள்ளன. வேலைநிறுத்த அறிவிப்பில் அரசியல் வரக்கூடாது என்று தி.மு.க. மற்றும் காங்கிரஸ் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின.
ஆனால் பிரதான தொழிற்சங்கங்களில் ஒன்றான கம்யூனிஸ்டு ஆதரவு பெற்ற சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் அதை ஏற்கவில்லை. அ.தி.மு.க. தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்க பேரவையுடன் இணைந்து வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்க பேரவை, கம்யூனிஸ்டின் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கங்கள் மேலும் பல தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பாட்டாளி தொழிற்சங்கம் (பா.ம.க.), தே.மு.தி.க. தொழிற்சங்கம், தமிழ் மாநில தொழிற்சங்க காங்கிரஸ் பேரவை, பாரதிய மஸ்தூர் சங்கம் (பி.எம்.எஸ்.), புதிய தமிழகம் தொழிற்சங்கம், நாம் தமிழர் தொழிற்சங்கம், மனித உரிமை கழகம், திரு.வி.க. தொழிற்சங்கம் ஆகியவை வேலைநிறுத்தத்துக்கு ஆதரவாக உள்ளன.
மேலும் அகில இந்திய தொழிற்சங்க பேரமைப்பு (ஏ.ஐ.டி.யு.சி.), இந்து மஸ்தூர் சபா (எச்.எம்.எஸ்.), மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி (எம்.எல்.எஸ்.) ஆகிய முக்கிய சங்கங்களும் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் இன்றைய போராட்டத்தில் பங்கேற்று பணிக்கு செல்லவில்லை.
முக்கிய தொழிற்சங்கங்கள் அ.தி.மு.க. தொழிற்சங்கத்துடன் கைகோர்த்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பிரதான தொழிற்சங்கமான ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கம் பேருந்து வேலைநிறுத்தத்தில் பங்கேற்க போவதில்லை என்று நேற்று அறிவித்தது. அ.தி.மு.க. தொழிற்சங்கம் இந்த போராட்டத்தை அரசியல் ஆக்குவதால் வேலைநிறுத்தத்தில் பங்கேற்காமல் பணிக்கு செல்வதாக அறிவித்தது.
இதன் காரணமாக இன்று காலை தி.மு.க.வின் தொ.மு.ச., காங்கிரசின் ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கங்களை சேர்ந்த பணியாளர்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டனர். இதன் காரணமாகவே தமிழகம் முழுவதும் பஸ்கள் பெரும்பாலும் இயக்கப்பட்டன.
சில மாவட்டங்களில் அந்தந்த பகுதி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் இருந்தன. மாவட்ட தொழிற்சங்கங்களால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை.
- நெல்லை மண்டல போக்குவரத்து கழகமானது நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கியதாகும்.
- நெல்லை மாவட்டத்தில் இருந்து மற்ற பகுதிகளுக்கு தினமும் 236 பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இன்றும் வழக்கம்போல் அவை ஓடியது.
நெல்லை:
போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, காலி பணியிடங்களை நிரப்புதல், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த சில தொழிற்சங்கத்தினர் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். இதனால் பஸ்கள் இயங்காது எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
அதேநேரத்தில் அனைத்து பஸ்களும் வழக்கம்போல் இயங்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்பதால் போக்குவரத்து துறை சார்பில் முன்கூட்டியே தற்காலிகமாக டிரைவர்கள், கண்டக்டர்கள் உள்ளிட்டவர்களை தேர்வு செய்து வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று ஊழியர்கள் போராட்டத்தை தொடங்கிய நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வண்ணம் வழக்கம்போல் பஸ்கள் இயங்கின.
நெல்லை மண்டல போக்குவரத்து கழகமானது நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். இந்த மண்டலத்தில் மொத்தம் 1,660 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் நெல்லை மாவட்டத்தில் 7 பணிமனைகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 7 பணிமனைகளும், தென்காசியில் 4 பணிமனைகளும் உள்ளன. மொத்தம் உள்ள 18 பணிமனைகளின் மூலமாக இந்த 3 மாவட்டங்களிலும் 898 பஸ்களும் இன்று அதிகாலை முதல் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன.
அனைத்து பஸ்களும் பணிமனைகளில் இருந்து வழக்கம்போல் அதிகாலை முதலே புறப்பட்டன.
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, கன்னியாகுமரி, தென்காசி , தூத்துக்குடி, திருச்செந்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், திசையன்விளை, சாத்தான்குளம் ஆகிய பகுதிகளுக்கு வழக்கம்போல் பஸ்கள் இயங்கின. இதனால் வெளியூர்களுக்கு பணிக்கு செல்வோர், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினரும் எவ்வித பாதிப்பும் இன்றி பஸ் நிலையங்களில் இருந்து வழக்கமான நேரப்படி பஸ்களில் புறப்பட்டு சென்றனர்.
நெல்லை மாவட்டத்தில் இருந்து மற்ற பகுதிகளுக்கு தினமும் 236 பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இன்றும் வழக்கம்போல் அவை ஓடியது. அதேபோல் தென்காசி மாவட்டத்தின் வழித்தடங்களில் 157 பஸ்கள் வழக்கமாக இயங்கும். ஆனால் இன்று வழக்கத்தை விட 3 பஸ்கள் கூடுதலாக, அதாவது 160 பஸ்கள் இயங்கின. தென்காசி பணிமனையில் இருந்து 67 பஸ்களும். செங்கோட்டை பணிமனையில் இருந்து 40 பஸ்களும் முழுவதுமாக இயக்கப்பட்டு வருவதாக பணிமனை மேலாளர்கள் தெரிவித்தனர். இதேபோல் குமரி மாவட்டத்தில் வழக்கம்போல் 488 பஸ்கள் ஓடின.
தூத்துக்குடி மாவட்ட வழித்தடத்தில் ஓட வேண்டிய 226 பஸ்களில் 3 பஸ்கள் மட்டுமே ஓடவில்லை. அதிகாலையில் மாநகரில் 50 பஸ்களில் 49 பஸ்கள் ஓடின. புறநகர்களில் 34 பஸ்களில் 31 பஸ்கள் ஓடின. தொடர்ந்து கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் உள்ளிட்ட 7 பணிமனைகளில் இருந்தும் பஸ்கள் இயக்கம் அதிகரித்தது. 3 மாவட்டங்களிலும் சராசரியாக 90 சதவீதம் வரை பஸ்கள் ஓடின.
நெல்லை மாநகர பகுதியில் வண்ணார்பேட்டை புறவழிச்சாலை பணிமனையில் இருந்து 67 பஸ்களும், தாமிரபரணி பணிமனை மூலமாக 55 பஸ்களும் என மொத்தம் 122 பஸ்கள் வழக்கமாக இயக்கப்படும். இன்று வண்ணார்பேட்டை புற வழிச்சாலை பணிமனையில் இருந்து 60 பஸ்களும், தாமிரபரணி பணிமனையில் இருந்து 45 பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து வழித்தடங்களிலும் பஸ்கள் வழக்கம்போல் இயங்கியதால் மாணவ-மாணவிகள், பணிக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் எவ்வித சிரமமும் இன்றி பயணித்தனர்.
- தேன்கனிக்கோட்டையில் இருந்து 44 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
- வெளியூருக்கு வேலைக்கு செல்வோர் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் எந்தவித பாதிப்பும் அடையவில்லை.
தருமபுரி:
காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் தமிழகம் முழுவதும் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்து இருந்தனர்.
தருமபுரி அரசு போக்குவரத்து மண்டலத்துக்குட்பட்ட தருமபுரி, பொம்மிடி, பென்னாகரம், பாலக்கோடு, அரூர், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி உள்பட 14 பணிமனைகள் உள்ளன.
இதில் மண்டலத்திற்கு உட்பட்ட தருமபுரி பஸ் நிலையத்தில் இருந்து புறநகர் மற்றும் டவுன் பஸ்கள் என 853 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டும் வரும் நிலையில் தருமபுரி பஸ் நிலையத்தில் இன்று காலை முதல் அனைத்து பஸ்கள் வழக்கம் போல் இயங்கின.
இதேபோன்று பாலக்கோடு போக்குவரத்து பணிமனையில் இருந்து வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது மேலும் புறநகர் பஸ்கள் 24, டவுன் பஸ்கள்-23, மாற்று பஸ்கள்-4 என மொத்த 51 பஸ்கள் இன்று வழக்கம் போல் இயங்கி வருகின்றன.

கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் இருந்து புறநகர் மற்றும் டவுன் பஸ்கள் என 900-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை முதல் கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் இருந்து புறநகர் மற்றும் அரசு டவுன் பஸ்கள் வழக்கம்போல் பஸ்கள் இயங்கின.
கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் இருந்து டவுன் பஸ்கள் 100, புறநகர் பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரையில் 45 பஸ்களும், ஓசூரில் இருந்து 74 சாதாரண பஸ்கள் , 76 சொகுசு பஸ்கள் கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்பட வெளி மாநிலங்களும், புறநகருக்கும் இயக்கப்பட்டன.
இதேபோல் தேன்கனிக்கோட்டையில் இருந்து 44 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
காவேரிப்பட்டனத்தில் வழக்கம் போல அனைத்து புறநகர் மற்றும் டவுன் பஸ்கள் உள்ளிட்ட அனைத்து பஸ்களும் வழக்கம் போல குறிப்பிட்ட நேரத்திற்கு இயங்கின.
இதனால் வெளியூருக்கு வேலைக்கு செல்வோர் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் எந்தவித பாதிப்பும் அடையவில்லை.
- தமிழகம் முழுவதும் தற்போது 15,528 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
- மாநகர பஸ்கள் 95 சதவீதம் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னை:
கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழகம் முழுவதும் தற்போது 15,528 பஸ்கள் இயக்கப்படுகின்றன. 95.33 சதவீத பஸ்கள் இயங்கி வருகின்றன.
* SETC பஸ்கள் 100 சதவீதம் இயக்கப்பட்டு வருகின்றன. மாநகர பஸ்கள் 95 சதவீதம் இயக்கப்பட்டு வருகின்றன.
* அனைத்து வகையான பஸ்களும் சீராக இயங்குகின்றன. பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் அச்சமின்றி பயணிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆளும் கட்சிக்கு ஆதரவான தொ.மு.ச., ஐ.என்.டி.யு.சி., விடுதலை சிறுத்தை, ம.தி.மு.க. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை.
- பொங்கல் சிறப்பு பஸ்கள் 12-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது.
சென்னை:
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பவை உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தன.
இதையடுத்து அரசு தரப்பிலும், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தரப்பிலும் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தது. நிதி சுமை காரணமாக பொங்கலுக்கு பிறகு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தொழிற்சங்க பிரதிநிதிகள் அதை ஏற்க மறுத்தனர்.
குறிப்பாக ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வு, ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு பணப்பலன்கள் ஆகிய முக்கியமான பிரச்சினைகள் நீண்டகாலமாக நிலுவையில் இருப்பதால் அதனை மட்டுமாவது நிறைவேற்ற வேண்டும் என்று தொழிற்சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.
இது தொடர்பாக நேற்று நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அரசுக்கும், போக்குவரத்து தொழிற்சங்கத்தினருக்கும் இடையே எந்த உடன்பாடும் ஏற்படாததால் இன்று (9-ந்தேதி) முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்தன.
அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட 15 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தன. அதன்படி நேற்று இரவு முதலே போராட்டத்தில் அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., பி.எம்.எஸ்., பாட்டாளி தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட சில சங்கங்கள் இணைந்து போராட்டத்தில் குதித்தன.
ஆளும் கட்சிக்கு ஆதரவான தொ.மு.ச., ஐ.என்.டி.யு.சி., விடுதலை சிறுத்தை, ம.தி.மு.க. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை. அ.தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளை சார்ந்த தொழிற்சங்க தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
பொங்கல் பண்டிகை காலத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால் பொதுமக்களின் வெளியூர் பயணம் எவ்விதத்திலும் பாதிக்கப்படாமல் இருக்க அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பொங்கல் சிறப்பு பஸ்கள் 12-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது. முன் பதிவு செய்த பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்வதில் எவ்வித சிரமமும் இல்லாமல் பயணத்தை தொடர அரசு பஸ்களை முழுமையாக இயக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் முழு அளவில் பஸ்களை இயக்க நேற்று இரவு முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 8 போக்குவரத்து கழகங்களிலும் உள்ள பஸ்களை முழு அளவில் இயக்க அனைத்து ஊழியர்களையும் பணிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
விடுப்பில் இருந்தவர்கள் வேலைக்கு வராவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று அரசு பஸ்கள் முழுமையாக இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் அனைத்து முன் ஏற்பாடுகளையும் செய்தனர்.
அதன்படி இன்று அதிகாலை 5 மணி முதல் அரசு பஸ்கள் டெப்போக்களில் இருந்து ஒவ்வொன்றாக புறப்பட்டன. தமிழகம் முழுவதும் பெரும்பாலான பஸ்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் வழக்கம் போல சேவையை தொடங்கின.
அனைத்து பணிமனைகளுக்கும் இன்று அதிகாலையிலேயே டிரைவர்கள், கண்டக்டர்கள் வந்தனர். அவர்கள் பஸ்களை வெளியே எடுக்கும்போது பல்வேறு இடங்களில் தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.
அங்கு பாதுகாப்புக்கு போடப்பட்டிருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினார்கள். பிறகு பஸ்கள் பணிமனையில் இருந்து பஸ் நிலையங்களுக்கு சென்றன. காலை 8 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் சுமார் 95 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன.
தமிழகத்தில் காலை 10 மணி நிலவரப்படி இயக்க வேண்டிய 16,144 பஸ்களில் 15,322 பஸ்கள் இயக்கப்பட்டன. அரசு விரைவு பஸ்கள் (எஸ்.இ.டி.சி) 100 சதவீதம் இயக்கப்பட்டது. சென்னையில் 95 சதவீத பஸ்கள் இயங்கின.
போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் வெளியே வந்தன. நகர பஸ்கள், வெளியூர் செல்லக்கூடிய பஸ்கள் பெரும்பாலானவை இயக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, விழுப்புரம், தஞ்சாவூர், கும்பகோணம், புதுச்சேரி, திருப்பூர், ஓசூர், தர்மபுரி, நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பஸ் போக்குவரத்து சீராக நடைபெற்றது.
சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் 3233 பஸ்கள் இயக்கப்படும். இன்று காலை 7 மணி நிலவரப்படி 3092 பஸ்கள் இயக்கப்பட்டதாக மேலாண்மை இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள 32 டெப்போக்களில் இருந்தும் வழக்கமான அளவு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் எப்பொழுதும் போல் பயணம் செய்தனர். மகளிர் இலவச பயணத்தை தொடர்ந்தனர்.
ஒரு சில டெப்போக்களில் போராட்டக்காரர்கள் கூட்டமாக நின்று கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.
பூந்தமல்லியில் 80 சதவீத பஸ்கள் இன்று இயக்கப்பட்டன. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பஸ்கள் இயக்கப்பட்டன.
பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தற்காலிக டிரைவர், கண்டக்டர்கள் பணிக்கு அழைக்கப்பட்டனர். ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்தவர்களை மீண்டும் பணிக்கு வரவழைத்தனர்.
இதுதவிர ஐ.ஆர்.டி.யில் பயிற்சி பெறுகின்ற டிரைவர்களும் நேற்றிரவு அழைக்கப்பட்டு பணி வழங்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் போராட்டத்தை சமாளிக்க அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் தற்காலிகமான டிரைவர், கண்டக்டர்கள் நியமிக்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இதனால் பொங்கல் சிறப்பு பஸ்கள் உள்ளிட்ட வழக்கமான பஸ் போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. வழக்கமான அளவு பஸ்கள் இயக்கப்படுவதால் பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் பிசுபிசுத்தது.
- காங்கயத்தில் 80 பஸ்களில் 62 பஸ்களும், தாராபுரத்தல் 76 பஸ்களில் 61 பஸ்களும், உடுமலையில் 94 பஸ்களில் 92 பஸ்களும் இயக்கப்பட்டன.
- திருப்பூர் மண்டலத்திற்குட்பட்ட பழனி-1 பணிமனையில் 47 பஸ்களில் 43 பஸ்களும், பழனி 2ல் 37 பஸ்களில் 26 பஸ்களும் இயக்கப்பட்டன.
திருப்பூர்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத்தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவித்தன. அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
அதன்படி சி.ஐ.டி.யு. தலைமையிலான கூட்டமைப்பு, அண்ணா தொழிற்சங்க பேரவை தலைமையிலான கூட்டமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
திருப்பூர் மாநகரில் இன்று அரசு பஸ்கள் ஓடாது என்று பல இடங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டன. தொ.மு.ச. தொழிற்சங்க ஓட்டுனர்கள், நடத்துனர்கள் வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்படும் என்று பஸ்களில் நோட்டீஸ் ஒட்டினர். வேலைநிறுத்த போராட்டம் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் இன்று பஸ்கள் இயக்கப்படுமா, இயக்கப்படாதா? என்பது தெரியாததால் பொதுமக்கள் தவிப்புக்கு ஆளானார்கள்.
இதனால் வெளியூர் செல்லக்கூடிய பயணிகள் நேற்றிரவு தாங்கள் செல்லக்கூடிய இடங்களுக்கு பயணித்தனர். இதனால் நேற்று இரவு திருப்பூர் மத்திய பஸ் நிலையம், கோவில்வழி பஸ் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல வேண்டியவர்கள் முன்கூட்டியே நேற்று ஊருக்கு புறப்பட்டு சென்றதை காண முடிந்தது.
இந்தநிலையில் பயணிகளுக்கு பாதிப்பு இல்லாமல் பஸ்களை இயக்குவதற்கான ஏற்பாடுகளை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.
அதன்படி இன்று திருப்பூர் மாவட்டம் முழுவதும் 90 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. திருப்பூர் பணிமனை 1-ல் மொத்தமுள்ள 88 பஸ்களில் 54 பஸ்கள் இயக்கப்பட்டன. பணிமனை 2-ல் 57 பஸ்களில் 41 பஸ்கள் இயக்கப்பட்டன. பல்லடம் பணிமனையில் இருந்து 70 பஸ்களில் 67 பஸ்களும், காங்கயத்தில் 80 பஸ்களில் 62 பஸ்களும், தாராபுரத்தல் 76 பஸ்களில் 61 பஸ்களும், உடுமலையில் 94 பஸ்களில் 92 பஸ்களும் இயக்கப்பட்டன.
திருப்பூர் மண்டலத்திற்குட்பட்ட பழனி-1 பணிமனையில் 47 பஸ்களில் 43 பஸ்களும், பழனி 2ல் 37 பஸ்களில் 26 பஸ்களும் இயக்கப்பட்டன. திருப்பூர் மண்டலம் முழுவதும் மொத்தம் 549 பஸ்களில் 446 பஸ்கள் இயக்கப்பட்டன. மொத்தம் 90.36 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.