என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆதரவாளர்கள்"
- திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
- கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு பேசினர்.
மதுரை
திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவா ளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநில இளைஞர் பாசறை இணைச்செயலாளர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். நிர்வாகிகள் முருகேசன், ராஜ்மோகன் உள்ளிட்ட ஏராளமானோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-
மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களை கையில் வைத்துக்கொண்டு தாங்கள் தான் கட்சி என்று எடப்பாடி பழனிசாமி கருதுகிறார், ஆனால் அ.தி.மு.க.வின் உண்மையான ஒன்றரை கோடி தொண்டர்களை புறக்கணித்துவிட்டு பொதுக்குழுவில் எந்த முடிவுகள் எடுத்தாலும் செல்லாது.
மதுரை மாவட்டத்தி லுள்ள 10 தொகுதிகளை சார்ந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசித்து இ.பி.எஸ்க்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
பொதுக்குழு எந்த கட்சியை சேர்ந்தவர்கள் வேண்டுமானாலும் நடத்தலாம். அதற்கு நீதிமன்றம் அனுமதி தரும். ஆனால் பொதுக்குழுவை நடத்த வேண்டும் என்றால் ஒருங்கி ணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கையெழுத்திட்டால் தான் செல்லும். நடை பெற இருப்பது அ.தி.மு.க.வின் பொதுக்குழு அல்ல இ.பி.எஸ்.சின் பொய் குழுதான். கட்சியின் வளர்ச்சிக்காக சசிகலா மட்டுமல்ல, யார் வந்தாலும் சேர்த்துக் கொள்வார். அதற்கு தொண்டர்களும் ஒத்துழைப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- புதுக்கோட்டையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- பழைய அ.தி.மு.க.வாக செயல்பட வேண்டும்
புதுக்கோட்டை:
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி பொதுசெயலாளர் ஆவது உறுதி என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சட்டரீதியான நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றனர். இந்த நிலையில் பெரும்பான்மையான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து வருகிற நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் முக்கிய நிர்வாகிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் புதுக்கோட்டையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அ.தி.மு.க.வினர் சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் சார்பில் புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அறந்தாங்கி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரெத்தினசபாபதி தலைமை தாங்கி பேசினார். புதுக்கோட்டை நகராட்சி முன்னாள் தலைவர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். கண்டன கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர். அதன்பின் ரெத்தினசபாபதி நிருபர்களிடம் கூறுகையில், ''வருகிற 11-ந் தேதி கூட்டப்படும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கண்டிப்பாக செல்லாது. தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீா்செல்வம் தான். சசிகலா, டி.டி.வி. தினகரன் என அனைவரும் ஒருங்கிணைந்து பழைய அ.தி.மு.க.வாக செயல்பட வேண்டும் என்பது எனது விருப்பம்' என்றார்.
ராஜசேகரன் கூறுகையில், ''அ.தி.மு.க.வில் கட்சி நலனுக்காக இரட்டை தலைமை கொண்டு வரப்பட்டது. தற்போது ஒற்றை தலைமை ஏன் தேவை. 1½ கோடி தொண்டர்கள் உள்ளதில் நிர்வாகிகள் ஆயிரம் பேர் மட்டும் தான் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கின்றனர். தொண்டர்கள் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் தான் உள்ளனர்'' என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்