search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுத்தை பதுங்கிய"

    • சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி ஓசூர் கிராமத்தில் செயல்படாத கல்குவாரி உள்ளது. இதன் அருகே ஓசூர் கிராமம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன.
    • புதர் மண்டி கிடப்பதால் மீண்டும் சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் புகும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட வருவாய் துறை அதிகாரிகள் இந்த கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஈரோடு, ஜூலை. 5-

    சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி ஓசூர் கிராமத்தில் செயல்படாத கல்குவாரி உள்ளது. இதன் அருகே ஓசூர் கிராமம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன.

    வருவாய் துறைக்கு சொந்தமான இந்த கல்குவாரியின் உரிமம் கடந்த 2014-ம் ஆண்டு முதல் காலாவதியானது. இதனால் குவாரியை சுற்றியுள்ள பட்டா நிலங்களில் கற்கள் மலை போல் குவிந்துள்ளது.

    பல வருடங்களாக குவிந்துள்ள கற்குவியல்களில் செடி, கொடி வளர்ந்து புதர் நிறைந்து காடு போன்று காட்சியளிக்கிறது.

    இந்நிலையில் ஒரு சிறுத்தை இந்த கல்குவாரியில் தஞ்சம் புகுந்து கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் புகுந்த ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வந்தன.

    தொடர்ந்து போக்கு காட்டி வந்த சிறுத்தையை பிடிக்க பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து வனத்துறையினர் கூண்டு வைத்து கடந்த மாதம் 30-ந் தேதி சிறுத்தையை பிடித்தனர்.

    பின்னர் சிறுத்தை அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. இதை அடுத்தே அப்பகுதி மக்கள், விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்தனர்.

    இருந்தாலும் மீண்டும் கல்குவாரியில் வேறு ஏதாவது வன விலங்குகள் பதுங்கி மீண்டும் அச்சுறுத்தக் கூடாது என பயந்து வருகின்றனர்.

    இது குறித்த அப்பகுதி மக்கள் கூறியதாவது:

    இந்த செயல்படாத கல்குவாரி 1.25 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே உள்ளது. ஆனால் இதனை சுற்றியுள்ள பட்டா நிலங்களில் கற்கள் மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனால் தரிசு இடத்தில் விவசாயம் செய்ய முடிவதில்லை.

    புதர் மண்டி கிடப்பதால் மீண்டும் சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் புகும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட வருவாய் துறை அதிகாரிகள் இந்த கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இது தவிர இந்த பகுதியில் உள்ள புதர்களை அகற்றி சுத்தமாக வைத்திருந்தால் வனவிலங்குகள் ஊருக்குள் வராது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×