search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூகோஸ் சுருள்"

    • ஈக்களின் குஞ்சு, முதிர்ந்த ஈக்களும் தென்னை மரங்களின் ஓலைகளின் அடியில் இருந்து சாறை உறிஞ்சி, தேன் போன்ற திரவ கழிவை வெளியேற்றும். அத்திரவ கழிவால், கரும்பூசணம் படர்ந்து, ஓலைகள் கருமை நிறமாகும்
    • அதிக பூச்சி கொல்லிகள் உபயோகிக்கும்போது நன்மை செய்யும் இயற்கை எதிரிகள் அழிந்து விடுவதால் ரசாயன பூச்சி கொல்லிகளை தவிர்த்து இயற்கை எதிர் பூச்சிகளை வளர்த்து கட்டுப்படுத்துவது சிறந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சி.சின்னசாமி, வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் 38,800 ஏக்கரில் தென்னை சாகுபடி செய்துள்ளனர். தென்னையில் இருந்து தேங்காய், இளநீர் கிடைப்பதுடன், ஓலைகள் கூரை வேய்வதற்கும், வேலி அமைக்கவும் பயன்படுகிறது. பயனுள்ள ஓலைகளை ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் கோடை காலங்களில் தாக்குவதுடன், தென்னை மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது.

    ஈக்களின் குஞ்சு, முதிர்ந்த ஈக்களும் தென்னை மரங்களின் ஓலைகளின் அடியில் இருந்து சாறை உறிஞ்சி, தேன் போன்ற திரவ கழிவை வெளியேற்றும். அத்திரவ கழிவால், கரும்பூசணம் படர்ந்து, ஓலைகள் கருமை நிறமாகும்.

    மஞ்சள் நிறம், வளர்ச்சி அடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மையு டையதால், மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களில் இரு புறமும் ஆமணக்கு எண்ணெய் தடவி, ஒட்டும் பொறிகளை தயார் செய்து ஏக்கருக்கு 8 என்ற எண்ணிக்கையில் 5, – 6 அடி உயரத்தில் ஆங்காங்கு கட்டி வைத்து ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்.

    மஞ்சள் விளக்கு பொறி களை ஏக்கருக்கு 2 வீதம் தென்னந்தோப்புகளில் அமைத்து மாலை 6 மணி முதல் 11 மணி வரை ஒளிர செய்து வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்.

    தாக்கப்பட்ட தென்னை மரங்களின் இலைகளின் மேல் விசை தெளிப்பானால் தண்ணீரை மிகுந்த அழுத்தத்துடன் பீச்சி அடித்து வெள்ளை ஈக்கள் கரும்பூசணங்களை அழிக்கலாம்.

    வெள்ளை ஈக்களின் இளங்குஞ்சுகளை கட்டுப்ப டுத்தும் திறன் கொண்ட ஒட்டுண்ணி குளவியான என்கார்சியாவின் கூட்டு புழுவை உள்ளடக்கிய தென்னை ஓலைகளை ஏக்கருக்கு 10 இலை துண்டுகள் வீதம் தாக்கப்பட்ட ஓலைகளின் மீது 10 மரம் இடைவெளியில் வைத்து கட்டுப்படுத்தலாம்.

    இரை விழுங்கியான கிரைசோபெர்லா என்ற பச்சை கண்ணாடி இறக்கை பூச்சியின் முட்டைகளை ஏக்கருக்கு 300 வீதம் தாக்கப்பட்ட மரங்களில் வைத்து கட்டுப்படுத்தலாம். கிரைசோபெர்லா ஒட்டுண்ணியானது பவானி உயிரியல் கட்டுப்பா ட்டு மையத்தில் இருந்து பெறப்பட்டு வேளாண் விரிவாக்க மையங்களின் மூலம் ஈரோடு மாவட்ட தென்னை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

    என்கார்சியா ஒட்டுண்ணி குளவிகள், கிரைசோபிட் இரை விழுங்கிகள் தென்னந்தோப்புகளில் இயற்கையாக பல்கி இனப்பெருக்கம் அடைய ஏதுவாக சாமந்தி பூ, சூரியகாந்தி, தட்டை பயறு போன்ற பயிர்களை தென்னந்தோப்புகளில் பயிர் செய்யலாம்.

    அதிக பூச்சி கொல்லிகள் உபயோகிக்கும்போது நன்மை செய்யும் இயற்கை எதிரிகள் அழிந்து விடுவதால் ரசாயன பூச்சி கொல்லிகளை தவிர்த்து இயற்கை எதிர் பூச்சிகளை வளர்த்து கட்டுப்படுத்துவது சிறந்தது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×