search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர் பணி"

    • போட்டித் தேர்வை தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்தி வருகிறது.
    • ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2-ல் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் வகுப்பு எடுத்து வருகின்றனர். இவர்கள் போட்டித் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த போட்டித் தேர்வை தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்தி வருகிறது.

    தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், அரசு நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர் பணி யிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டது. இதையடுத்து இந்த தேர்வை எழுத ஏராளமானோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வந்தனர். இதற்கிடையே, காலி பணியிடங்களின் எண்ணிக்கையை 2,582 ஆக உயா்த்தி ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.

    இந்நிலையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடந்தது. தமிழகம் முழுவதும் உள்ள 130 மையங்களில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 41 ஆயி ரத்து 485 பேர் எழுதினார்கள்.

    சென்னையிலும் இந்த தேர்வை எழுதுவதற்காக பல இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து சென்னையிலும் ஏராளமானோர் தேர்வை எழுதினார்கள். ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2-ல் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த தேர்வை எழுது பவர்கள் காலை 8.30 மணிக்கு தோ்வு மையத்துக்கு வந்தனர். அவர்கள் கடும் சோதனைக்கு பிறகு காலை 9.30 மணிக்குள் தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை இயக்குநா்கள், இணை இயக்குநா்கள் நியமனம் செய்யப்பட்டு தோ்வு மையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். தோ்வு மையத்துக்குள் அச்சிடப்பட்ட அல்லது கையால் எழுதப்பட்ட தாள்கள், செல்போன், டேப்லட், லேப்டாப், கால்கு லேட்டர் போன்ற எந்த பொருட்களையும் அனுமதிக்கவில்லை. தேர்வு நடைபெறும் அனைத்து அறைகளிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு, ஆசிரியா் தோ்வு வாரியத்தின் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்பட்டது.

    • இணைய வழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வருகிற 3-ந்தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
    • ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2023-24-ம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர், வட்டார வளமைய பயிற்றுநர் காலிப் பணியிடங்களுக்கு போட்டி தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு விண்ணப்பதாரர்கள் இணைய வழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வருகிற 3-ந்தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் விண்ணப்பதாரர்கள் இணைய வழியாக விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய கூடுதல் கால அவகாசம் கோரியுள்ளதால் இணைய வழி வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி தேதி வருகிற 7-ந்தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர், வட்டார வளமைய பயிற்றுநர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் வருகிற 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பில், "ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பு உயர்த்தப்படும்" என தெரிவித்திருந்தார்.
    • பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில் அறிவிப்பு.

    ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பை உயர்த்த வலியுறுத்தி ஆசிரியர் பணிக்கு பயிற்சி பெற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சமீபத்தில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் கோரிக்கையை முன்வைத்தனர்.

    இதைதொடர்ந்து, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பில், "ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பு உயர்த்தப்படும்" என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில் ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பை உயர்த்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஆசிரியர் பணியில் சேர பொதுப்பிரிவினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 53-ஆகவும், இதர பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 58-ஆகவும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 89 ஆசிரியர்கள் பணியிடம் காலியாக வுள்ளது.
    • ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    கடலூர் மாவட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளிகளில் கீழ்க்கண்ட விவரப்படி 76 இடை நிலை ஆசிரியர், 7 பட்டதாரி ஆசிரியர், 6 முதுகலை பட்டதாரி ஆசிரியர் என மொத்தம் 89 ஆசிரி யர்கள் பணியிடம் காலியாக வுள்ளது. கடலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் நல அலுவலகம், கடலூர், சிதம்பரம், விருத்தா சலம் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் அலுவலகங்களின் அறிவிப்புப் பலகையில் ஒட்டப் பட்டுள்ளது. மேற்கண்ட காலிப் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் முற்றிலும் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாகவும், நிபந்த னையின் அடிப்படை யிலும் நிரப்பப்படவுள்ளது. மேற்கண்ட பணியிடங்களுக்கான ஊதியம் இடைநிலை ஆசிரிய ருக்கு ரூ.12,000 பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.15,000 மற்றும் முது கலை பட்டதாரி ஆசிரிய ருக்கு ரூ.18,000 வீதம் வழங்கப்படும். இதற்கான கல்வித் தகுதி பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இடைநிலை ஆசிரியர், பட்ட தாரி ஆசிரியர், ஆசிரியர் களுக்கான தற்போதைய அரசு நடைமுறையில் உள்ள விதிகளைப் பின்பற்றி, அதன்படி வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியுடன், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வாளராக இருப்பவர்க ளுக்கு முன்னுரிமை அளிக் கப்படும். (இல்லையெனில்) வரையறுக்கப் பட்ட கல்வித் தகுதிகளுடன், ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் பட்டியலி னத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் அந்தந்த பகுதிகளில் உள்ளவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    முதுகலை பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் களுக்கான தற்போதைய அரசு நடைமுறையில் உள்ள விதி களைப் பின்பற்றி, அதன்படி வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியுடன், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று மதிப்பெண் சரி பார்ப்பில் கலந்து கொண்டிருக்க வேண்டும். பள்ளி அமைந்துள்ள எல்லைக்குள் வசிப்பவர்கள் (அல்லது) அந்த ஒன்றியத்திற்குள் வசிப்பவர்கள் (அல்லது) அந்த மாவட்டத்திற்கு எல்லைக்குள் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இடைநிலை பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் காலிப்பணியடங்களை சம்பந்தப்பட்ட பாடத்திற்கான முழுமையான கல்வித் தகுதி பெற்ற நபர்களை மட்டுமே மேலே தெரிவிக்கப்பட்டுள்ள வாறு பள்ளி மேலாண்மைக் குழுவின் வாயிலாக நிரப்பிக் கொள்ள வேண்டும்.

    மேலும் மேற்கண்ட இந்த தற்காலிக பணி நியமனம், தேர்வு செய்யப்படும் இடைநிைல பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, அவர்கள் பணி நியமனம் செய்யப்படும் நாள்முதல் ஏப்ரல் 2024-ம் மாதம் வரை மட்டும் தேர்வு செய்யப்படும். பணி நாடு நர்கள், ஆசிரியர் காலிப்பணி யடங்களை கடலூர் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினர் நல அலுவலகம், மற்றும் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் ஆதிதிராவிடர் நல தனிவட்டாட்சி யர் அலுவலகங்களில் தெரிந்து கொண்டு அந்த பணியிடங்களுக்கு மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். மேற்கண்ட காலிப்பணி யிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தனது எழுத்து மூலமான விண்ணப்பத்தினை உரிய கல்வித் தகுதிச் சான்று ஆவணங்க ளுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் உள்ள மாவட்ட ஆதிதி ராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் 4-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் ஒப்ப டைத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • தேவைப்படும் மாணவர்களுக்கு கல்வியும், திறமையும் போதிக்க வேண்டியது தான் ஆசிரியர் பணியின் நோக்கம்.
    • தற்போது இடமாறுதலுக்கான கலந்தாய்வுக்கு மனுதாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு அதிகமாக ஆசிரியர்கள் பணியாற்றினர். இதனால், உபரி ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு இடமாறுதல் செய்து அரசு உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து, அப்பள்ளியில் பணியாற்றிய கணித ஆசிரியர் துரைராஜ், புவியியல் ஆசிரியர் சிங்காரவேலு, அறிவியல் ஆசிரியர் புவனேஸ்வரி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்குகள் தொடர்ந்தனர்.

    இந்த வழக்குகள் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இடமாற்றம் தொடர்பாக அரசு பல்வேறு காலகட்டங்களில் அரசாணைகள் பிறப்பித்துள்ளன. அதற்கு முரணாக தங்களை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த உத்தரவுகளை ரத்து செய்து தொடர்ந்து திருத்துறைப்பூண்டி பள்ளியில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

    இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    ஆசிரியர்களின் சேவை வேறு பள்ளிகளுக்கு தேவைப்படும் பட்சத்தில் அதை மனமுவந்து ஏற்றுக்கொண்டு தாமாக அப்பள்ளிகளுக்கு இடமாறுதல் பெற்று செல்ல வேண்டும்.

    தேவைப்படும் மாணவர்களுக்கு கல்வியும், திறமையும் போதிக்க வேண்டியது தான் ஆசிரியர் பணியின் நோக்கமே தவிர, தனக்கு வசதியான இடத்தில் பணி பெறுவது அல்ல.

    தற்போது இடமாறுதலுக்கான கலந்தாய்வுக்கு மனுதாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வில் மனுதாரர்கள் நிவாரணம் பெறலாம். தற்போது எந்த நிவாரணமும் வழங்க முடியாது.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    • ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்ற (டெட்) பட்டதாரிகளை தற்காலிகமாக நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
    • 67 பள்ளிகளில் 86 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

    திருப்பூர் :

    தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்ற (டெட்) பட்டதாரிகளை தற்காலிகமாக நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    திருப்பூர், தாராபுரம், உடுமலை, பல்லடம் உள்ளிட்ட கல்வி மாவட்டங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு மாவட்ட அலுவலகத்தில் கல்வி விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.திருப்பூர் கல்வி மாவட்ட அளவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் விண்ணப்பிக்க பட்டதாரிகள் அலைமோதினர். முதல் நாளான நேற்று முன்தினம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 106 பேர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 86 பேர், முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 127 பேர் என மொத்தம் 319 பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.மேலும் திருப்பூரில் தொடக்க கல்வித்துறையின் கீழ், 117 இடைநிலை, 54 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும் 67 பள்ளிகளில் 86 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. விருப்பமுள்ளோர்இன்று மாலை, 5மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×