என் மலர்
நீங்கள் தேடியது "திஷா பதானி"
- சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'கங்குவா' படம் நவம்பர் 14-ந் தேதி வெளியாகவுள்ளது.
- கங்குவா திரைப்படத்தின் இரண்டாம் பாடலான YOLO அண்மையில் வெளியானது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கங்குவா'. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் 38 மொழிகளில் 3டி முறையில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
திரைப்படம் வரும் நவம்பர் 14-ந் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 26 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. வட இந்தியாவில் 3500 மேற்பட்ட திரையரங்குகளில் கங்குவா திரைப்படம் வெளியாகவுள்ளது.
படத்தின் ப்ரோமோஷன் பணிகளை வட இந்தியாவில் படக்குழு தொடங்கியது. படத்தின் முதல் பாடலான ஃபயர் சாங் மிகப்பெரியளவில் வரவேற்பை பெற்றது.

கங்குவா திரைப்படத்தின் இரண்டாம் பாடலான YOLO என்ற பாடலை தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த பாடலில் கவர்ச்சியான உடையில் திஷா பதானி நடனமாடியுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்நிலையில், YOLO பாடலில் படு கவர்ச்சியாக இருக்கும் திஷா பதானி காட்சிகளை நீக்க வேண்டும் இல்லையெனில் மாற்றியமைக்க வேண்டும் என சென்சார் போர்டு கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கங்குவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து இருப்பவர் திஷா பதானி.
- கங்குவா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.
கங்குவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து இருப்பவர் திஷா பதானி.
தொடர்ந்து இந்தி தெலுங்கு திரை உலகில் பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்தி திரை உலகில் இவரது நடிப்பில் சமீபத்தில் தொடர்ந்து புதிய படங்கள் வெளியாகி வருகிறது. சினிமா மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் தீவிர ஆர்வம் கொண்டவர் திசா பதானி.
கங்குவா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. அதில் படக்குழு மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். அவ்விழாவில் திஷா பதானி சிகப்பு நிற புடவையில் அழகாக வந்து இருந்தார். இந்த படத்தில் நடித்த அனுபவத்தையும் வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சிவாவுக்கு நன்றியை தெரிவித்தார்.
அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வரும் திசா பதானி சில தினங்களாக தொடர்ந்து அவரது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கடற்கரையில் நீச்சல் உடையில் நின்றபடி எடுத்த புகைப்படங்களை தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பல்வேறு விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கங்குவா படத்தின் இரண்டாம் பாடலான யோலோ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது.
- கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.
சூர்யா தற்பொழுது சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தில் சூர்யா இரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கங்குவா படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. திரைப்படத்தின் இரண்டாம் பாடலான யோலோ பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. இந்நிலையில் மதன் கார்க்கி எழுதியுள்ள கங்குவா படத்தின் 'தலைவனே' பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- இப்படத்தில் சூர்யா இரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சூர்யா தற்பொழுது சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தில் சூர்யா இரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல் மற்றும் பலர் நடித்துள்ளனர். கங்குவா படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
திரைப்படத்தின் இரண்டாம் பாடலான யோலோ பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடப்பெற்றது.
இந்நிலையில் நடிகர் சூர்யாவின் 'கங்குவா' பட போஸ்டரை இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- திஷா பதானி நடித்துள்ள கங்குவா திரைப்படம் அண்மையில் வெளியானது.
- ஜெகதீஷ் சிங் பதானியிடம் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ரூ.25 லட்சம் மோசடி செய்துள்ளனர்.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம்வருபவர் திஷா பதானி. அண்மையில் இவர் நடித்த கங்குவா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
இந்நிலையில், திஷா பதானியின் தந்தை ஜெகதீஷ் சிங் பதானியிடம் உத்தரபிரதேச அரசில் உயர் பதவி வாங்கி தருவதாக கூறி 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ரூ.25 லட்சம் மோசடி செய்துள்ளனர்.
உ.பி. அரசாங்கத்தில் உள்ள உயர் அதிகாரிகளுடன் தங்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், நாங்கள் கேட்கும் பணத்தை கொடுத்தால் அரசாங்க கமிஷனில் உயர் பதவி வாங்கு தருவதாக சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் போலீஸ் அதிகாரி ஜெகதீஷ் சிங் பதானியிடம் மர்ம நபர்கள் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

இதை உண்மை என நம்பிய ஜெகதீஷ் சிங் பதானி, ரூ.20 லட்சத்தை அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியதோடு, ரூ.5 லட்சம் ரொக்கமாகவும் கொடுத்துள்ளார்.
ரூ.25 லட்சம் பணம் கொடுத்து 3 மாதங்கள் ஆகியும் அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படாததால் மோசடி கும்பலிடம் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அப்போது ஜெகதீஷ் சிங் பதானியை மோசடி கும்பல் மிரட்டியுள்ளனர்.
இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெகதீஷ் சிங் பதானி இது தொடர்பாக போலிசீடம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிந்துள்ள போலீசார் மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ‘எம்.எஸ்.தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி’ படம் மூலம் திஷா பதானி இந்தியில் தடம் பதித்தார்.
- பிரபுதேவா இயக்கத்தில் வெளியான ராதே படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.
பிரபல இளம் இந்தி நடிகை திஷா பதானி. இவர் 2015-ல் வருண் தேஜா ஜோடியாக லோபர் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார். இந்திய கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான 'எம்.எஸ்.தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி' படம் மூலம் இந்தியில் தடம் பதித்தார்.

திஷா பதானி
இதனை தொடர்ந்து அவர் நடித்த குங்பூ யோகா படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. கடந்த 2021-ஆம் ஆண்டு பிரபுதேவா இயக்கத்தில் வெளியான ராதே படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவரின் கைவசம் தற்போது ஏக் வில்லன் ரிட்டன்ஸ், யோதா, கேடினா, புராஜெக்ட் கே ஆகிய படங்கள் உள்ளன.

திஷா பதானி
நடிகை திஷா பதானி அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், அவர் பதிவிட்டிருக்கும் புதிய கவர்ச்சி காட்டும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர். இவரின் கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.
- ‘எம்.எஸ்.தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி’ படம் மூலம் திஷா பதானி இந்தியில் தடம் பதித்தார்.
- பிரபுதேவா இயக்கத்தில் வெளியான ராதே படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.
பிரபல இளம் இந்தி நடிகை திஷா பதானி. இவர் 2015-ல் வருண் தேஜா ஜோடியாக லோபர் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார். இந்திய கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான 'எம்.எஸ்.தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி' படம் மூலம் இந்தியில் தடம் பதித்தார்.

திஷா பதானி
தொடர்ந்து அவர் நடித்த குங்பூ யோகா படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. கடந்த 2021-ஆம் ஆண்டு பிரபுதேவா இயக்கத்தில் வெளியான ராதே படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

திஷா பதானி
இவரின் கைவசம் தற்போது ஏக் வில்லன் ரிட்டன்ஸ், யோதா, கேடினா, புராஜெக்ட் கே ஆகிய படங்கள் உள்ளன.

திஷா பதானி
நடிகை திஷா பதானி அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், அவர் புடவையில் கவர்ச்சி காட்டும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இவரின் கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.
— Disha Patani (@DishPatani) July 6, 2022