search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹூண்டாய் அல்கசார்"

    • ஹூண்டாய் அல்கசார் புது வேரியண்ட் விலை அதன் பிரெஸ்டிஜ் வேரியண்ட்-ஐ விட ரூ. 55 ஆயிரம் குறைவு ஆகும்.
    • இந்த மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் அல்கசார் மாடலின் புதிய பேஸ் வேரியண்ட்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த வேரியண்ட் பிரெஸ்டிஜ் எக்சிக்யுடிவ் என அழைக்கப்படுகிறது. புது வேரியண்ட் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் டீசல் என்ஜினுடன் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இது தற்போதைய எக்சிக்யுடிவ் வேரியண்டை விட ரூ. 55 ஆயிரம் வரை விலை குறைவு ஆகும்.

    புதிய ஹூண்டாய் அல்கசார் விலை விவரங்கள்:

    அல்கசார் பிரெஸ்டிஜ் எக்சிக்யுடிவ் 7 சீட்டர் பெட்ரோல் மேனுவல் ரூ. 15 லட்சத்து 89 ஆயிரம்

    அல்கசார் பிரெஸ்டிஜ் எக்சிக்யுடிவ் 7 சீட்டர் டீசல் மேனுவல் ரூ. 16 லட்சத்து 30 ஆயிரம்

    அல்கசார் பிரெஸ்டிஜ் எக்சிக்யுடிவ் 7 சீட்டர் டீசல் ஆட்டோமேடிக் ரூ. 17 லட்சத்து 77 ஆயிரம்

    அல்கசார் பிரெஸ்டிஜ் எக்சிக்யுடிவ் 6 சீட்டர் டீசல் மேனுவல் ரூ. 16 லட்சத்து 30 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    புதிய அல்கசார் வேரியண்டில் இன்போடெயின்மெண்ட் மட்டுமே மாற்றப்பட்டு இருக்கிறது. முந்தைய மாடலில் 10.25 இன்ச் டச் ஸ்கிரீனுக்கு மாற்றாக அளவில் சிறிய 8 இன்ச் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே போன்ற யூனிட் தான் புதிய ஐ20 மற்றும் கிரெட்டா மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மேலும் இதில் புளூ லின்க் கனெக்டெட் அம்சங்கள் நீக்கப்பட்டு உள்ளன. இவை தவிர பெரும்பாலான இதர அம்சங்களில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் இந்த மாடலில் பானரோமிக் சன்ரூப், எல்இடி ஹெட்லேம்ப்கள் உள்ளன. இதன் பெட்ரோல் மாடல் 7 சீட்டர் வடிவிலும், டீசல் மாடல் 7 மற்றும் 6 சீட்டர் வடிவில் கிடைக்கிறது.

    ×