என் மலர்
நீங்கள் தேடியது "புறா பந்தயம்"
- ஆந்திர மாநிலம் சிங்கராயக் கொண்டாவிலிருந்து தூத்துக்குடிக்கு 750 கி.மீ. நடைபெற்ற புறா பந்தயத்தில் மொத்தம் 300 புறாக்கள் பறக்க விடப்பட்டன.
- வெற்றி பெற்ற புறா உரிமையாளர்களுக்கு கிளப் பொருளாளர் சாவியோ பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஹார்பர் ரேசிங் பிஜியன் கிளப் சார்பாக புறா பந்தயம் நடத்தப்பட்டது.
ஆந்திர மாநிலம் சிங்கராயக் கொண்டாவிலிருந்து தூத்துக்குடிக்கு 750 கி.மீ. நடைபெற்ற புறா பந்தயத்தில் மொத்தம் 300 புறாக்கள் பறக்க விடப்பட்டன. பந்தய தூரத்தை 14 மணி நேரம் 33 நிமிடங்களில் கடந்து வக்கீல் சதீஷ்வரன் என்பவரது புறா முதலிடத்தையும்,15 மணி 52 நிமிடத்தில் கடந்து ராஜேஷ் புறா இரண்டாம் இடம், 16 மணி 59 நிமிடத்தில் கடந்து வக்கீல் சதீஷ்வரன் என்பவர் புறா மூன்றாமிடத்தையும் பெற்றது.
வெற்றி பெற்ற புறா உரிமையாளர்களுக்கு கிளப் பொருளாளர் சாவியோ பாராட்டு சான்றிதழ் வழங்கினார். கிருஷ்ணா மற்றும் தூத்துக்குடி வக்கீல் சங்க நிர்வாகி மணிகண்டராஜா உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
- சிவகங்கை அருகே உள்ள அல்லூர் கிராமத்தில் கருப்பையா சாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி, குதிரைவண்டி, புறா பந்தயம் நடந்தது.
- விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த பந்தயத்தை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
சிவகங்கை
சிவகங்கை அருகே உள்ள அல்லூர் கிராமத்தில் கருப்பையா சாமி கோவில் உள்ளது. இங்கு புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி, குதிரைவண்டி, புறா பந்தயம் நடந்தது.
இப்பந்தயத்தை தி.மு.க. மாவட்ட பிரதிநிதி அல்லூர் ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெரியமாடு மற்றும் சிறிய மாடுகளுக்கு பந்தயத்தூரம் முறையே 7, 9 கி.மீ. என்று நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. இதனைதொடர்ந்து குதிரைவண்டி பந்தயமும் நடந்தது. குதிரை வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்றவருக்கு முதல் பரிசாக ரூ. 12 ஆயிரம் வழங்கப்பட்டது.
இதேபோன்று பெரிய மாட்டுவண்டி பந்தயத்தில முதல் பரிசாக ரூ. 10 ஆயிரம் வழங்கப்பட்டது. 2-வது பரிசாக ரூ 8 ஆயிரம் வழங்கப்பட்டது. சிறிய மாடுகளுக்கான பந்தயத்தில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. 2-வது பரிசாக ரூ.8 ஆயிரம் வழங்கப்பட்டது. பரிசு தொகையை விழாகமிட்டியார் வழங்கினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த பந்தயத்தை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.