என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லேத் பட்டறை உரிமையாளர்"

    • சம்பவத்தன்று வலி அதிகமானதால் வாழ்க்கையில் வெறுப்படைந்து மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பெரியசேமூர் சோழா நகர் தட்டான் காடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (42). லேத் பட்டறை உரிமையாளர்.

    இவர் வாகன விபத்து ஏற்பட்டு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துள்ளார். இருப்பினும் முதுகு தண்டுவடத்தில் தொடர்ந்து வலி இருந்து வந்தது.

    இந்நிலையில் சம்பவத்தன்று வலி அதிகமானதால் வாழ்க்கையில் வெறுப்படைந்து மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் ஆறுமுகத்தை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×