என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டாஸ்மாக் பாரை திறந்த ஊழியர்கள்"
- கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோவில் எதிரே டாஸ்மாக் பார் ஒன்று புதிதாக அமைக்கப்பட்டது
- இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
கோவை:
கோவை சிங்காநல்லூர் பஸ் நிைலயம் பின்புறம் விநாயகர் கோவில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.தற்போது அந்த கோவிலில் நடந்து வந்த பணிகள் அனைத்தும் முடிந்து, .கும்பாபிஷேகத்திற்கு தயாரான நிலையில் உள்ளது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோவில் எதிரே டாஸ்மாக் பார் ஒன்று புதிதாக அமைக்கப்பட்டது. இதற்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து போரா ட்டத்திலும் ஈடுபட்டனர்.மேலும் கலெக்டர் அலுவலகம் மற்றும் போலீஸ் நிலையத்திலும், டாஸ்மாக் அதிகாரிகளிடமும் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் டாஸ்மாக் அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து அந்த கடையை மூடினர் . ஆயினும் நேற்று மீண்டும் டாஸ்மாக் பார் திறக்கப்பட்டது. சம்பவம் அறிந்த மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மரிய முத்து நேரில் சென்று பார் ஊழியர்களை எச்சரித்து, அனைவரையும் வெளியேற செய்து பாரை பூட்டிவிட்டு சென்றார்.
அதனை கண்ட அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் டாஸ்மாக் அதிகாரிகளுக்கும், மதுவிலக்கு போலீசாருக்கும் நன்றி தெரிவித்த வண்ணம் உள்ளனர்.