என் மலர்
நீங்கள் தேடியது "இந்திய மகளிர் கிரிக்கெட்"
- இத்தொடருக்கான இந்திய அணியில் ஷபாலி வர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
- காஷ்வி கௌதம், ஸ்ரீசாரனி, சுச்சி உபாத்யாய் ஆகிய அறிமுக வீராங்கனைகளுக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்த முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் ஏப்ரல் 27-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் ஒவ்வொரு அணியும் தலா 4 போட்டிகளில் விளையாடவுள்ளது. அதில் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளன.
இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை மகளிர் அணியை எதிர்த்து இந்திய மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இத்தொடரின் அனைத்து போட்டிகளும் கொழும்புவில் உள்ள ஆர் பிரமதோசா கிரிக்கெட் மைதானத்தில் மட்டுமே நடைபெறவுள்ளது.
இந்தாண்டு இந்தியாவில் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் நிலையில், அத்தொடருக்கு தயாராகும் வகையில் இந்த முத்தரப்பு தொடரானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில் இந்திய மகளிர் அணி களமிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துணைக்கேப்டனாக ஸ்மிருதி மந்தனாவும் தொடர்கிறார்.
அதேசமயம் இத்தொடருக்கான இந்திய அணியில் ஷபாலி வர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும் ரேணுகா சிங் தாக்கூர் மற்றும் டைட்டஸ் சாது ஆகியோரும் காயம் காரணமாக இந்த முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்கவில்லை.

இருப்பினும் நடந்து முடிந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய காஷ்வி கௌதம், ஸ்ரீசாரனி ஆகியோரும், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட சுச்சி உபாத்யாய் ஆகிய அறிமுக வீராங்கனைகளுக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முத்தரப்பு தொடருக்கான இந்திய மகளிர் அணி:
ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், யாஸ்திகா பாட்டியா, தீப்தி ஷர்மா, அமன்ஜோத் கவுர், காஷ்வீ கௌதம், சினே ராணா, அருந்ததி ரெட்டி, தேஜல் ஹசாப்னிஸ், ஸ்ரீ சரணி, சுசி உபாத்யாய்.
- புரூக் ஹாலிடே அரை சதம் விளாசினார். அவர் 86 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
- வங்கதேச தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அகமதாபாத்:
நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஆட்டத்தில் இந்தியாவும், 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் தொடர் 1-1 என சமனில் உள்ளது.
இந்நிலையில், தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
அதன்படி நியூசிலாந்தின் தொடக்க வீராங்கனைகளாக சுசி பேட்ஸ்- ஜார்ஜியா ப்ளிம்மர் களமிறங்கினர். சுசி பேட்ஸ் 4 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த லாரன் டவுன் 1, கேப்டன் சோஃபி டெவின் 9 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இதனையடுத்து ஜார்ஜியா ப்ளிம்மருடன் புரூக் ஹாலிடே ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். ஜார்ஜியா ப்ளிம்மர் 39 ரன்கள் எடுத்த போது அவுட் ஆனார். மேடி கிரீன் 15, இசபெல்லா 25 என வெளியேறினர்.
ஒரு முனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புரூக் ஹாலிடே அரை சதம் விளாசினார். அவர் 86 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
இறுதியில் நியூசிலாந்து அணி 232 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்கதேச தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- இந்திய மகளிர் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
- இந்த ஆண்டு 6 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 108 ரன்கள் மட்டுமே ஷபாலி வர்மா எடுத்துள்ளார்.
இந்திய மகளிர் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில போட்டிகளில் சொதப்பிய தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா இந்த தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் இந்த ஆண்டு 6 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 108 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 33 ரன்கள் அடித்துள்ளார்.
காயம் காரணமாக நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயங்கா பாட்டீல் விலகி உள்ளார். மேலும் கடந்த மாதம் நியூசிலாந்திற்கு எதிராக 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றதில் விளையாடிய அணியில் இருந்து உமா செத்ரி, தயாளன் ஹேமலதா, ஸ்ரேயங்கா பாட்டீல் மற்றும் சயாலி சத்கரே ஆகிய நான்கு பேர் இடம் பெறவில்லை.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, பிரியா புனியா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், தேஜல் ஹசாப்னிஸ், தீப்தி சர்மா, மின்னு மணி , பிரியா மிஸ்ரா, ராதா யாதவ், டைட்டாஸ் சாது, அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்கூர், சைமா தாகூர்.
- ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் குவித்தது.
- ஆஸ்திரேலியாவின் எல்லிஸ் பெர்ரி 105 ரன்களும் ஜார்ஜியா வோல் 101 ரங்களும் அடித்தனர்.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ளது.
முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய பெண்கள் அணி வெற்றி பெற்ற நிலையில் 2 ஆவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி 105 ரன்களும் ஜார்ஜியா வோல் 101 ரன்களும் அடித்தனர். இந்திய அணி தரப்பில் சைமா தாக்கூர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 372 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 44.5 ஓவர்களில் 249 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வியடைந்தது. அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 54 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா அணி தரப்பில் அன்னாபெல் சதர்லேண்ட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி வரும் 11ம் தேதி பெர்த்தில் நடைபெறுகிறது.
- இந்தியாவின் மந்தனா 105 ரன்களில் அவுட் ஆனார்.
- ஆஸ்திரேலிய தரப்பில் ஆஷ்லே கார்ட்னர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பெர்த்:
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி பெர்த்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 298 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சதர்லேண்ட் சதம் அடித்து அசத்தினார். அவர் 110 ரன்னில் அவுட் ஆனார். இந்தியா தரப்பில் அருந்ததி ரெட்டி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
கடினமான இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக மந்தனா - ரிச்சா கோஷ் களமிறங்கினர். ரிச்சா கோஷ் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து மந்தனாவுடன் ஹர்லீன் தியோல் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினர்.
இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 118 ரன்கள் குவித்தது. தியோல் 39 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஹர்மன்பிரீத் கவுர் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மந்தனா சதம் (105) அடித்து அவுட் ஆனார்.
இதனை தொடர்ந்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்னில் வெளியேற இறுதியில் இந்தியா 45.1 ஓவரில் 215 ரன்னில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய தரப்பில் ஆஷ்லே கார்ட்னர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் இந்தியாவை ஒயிட்வாஷ் செய்துள்ளது.
- 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- ஆட்டநாயகி விருதை தீப்தி சர்மாவும், தொடர் நாயகியாக ரேணுகா தாகூரும் தட்டி சென்றனர்.
மகளிர் கிரிக்கெட் போட்டியின் ஒருநாள் தொடரில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடி வந்தனர். முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றிய நிலையில் இன்று 3-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. 9 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதனையடுத்து ஷெமைன் காம்பெல்லே - சினெல்லே ஹென்றி ஜோடி அணியை மீட்டனர். 46 ரன்கள் எடுத்த போது காம்பெல்லே அவுட் ஆனார். அடுத்து வந்த ஜைதா ஜேம்ஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்றி அரை சதம் விளாசினார். அவர் 61 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற 162 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் மந்தனா 4 ரன்னிலும் ஹர்லீன் தியோல் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து பிரதிகா ராவல் 18, கவுர் 32, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 29 என வெளியேறினார்.
இறுதியில் தீப்தி சர்மா (39) மற்றும் ரிச்சா கோஷ் (23) அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இதனால் 28.2 ஓவரில் 167 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்தது.
- அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி 435 ரன்கள் குவித்தது.
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய ஆண்கள் அணி 418 ரன்கள் குவித்துள்ளது.
ராஜ்கோட்:
அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றி விட்டது.
இதனையடுத்து இரு மகளிர் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 435 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனைகளாக மந்தனா (135), பிரதிகா ராவல் (154) சதம் அடித்து அசத்தினர். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை படைத்துள்ளது.
மேலும் அதிக ரன்கள் குவித்த அணிகள் பட்டியலில் இந்தியா 4 -வது இடத்தில் உள்ளது. முதல் 3 இடங்களில் நியூசிலாந்து அணி உள்ளது.
இதனையெல்லாம் விட ஒருநாள் போட்டியில் ஆண்கள் இந்திய அணி குவித்த ரன்களை விட பெண்கள் அணி ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது. ஆண்கள் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 418 எடுத்ததே அதிக ரன்களாக இருந்தது. அதனை தற்போது பெண்கள் முறியடித்துள்ளது.
- முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் குவித்தது.
- இலங்கை அணியில் அதிகபட்சமாக நிலாக்சி டி சில்வா ஆட்டமிழக்காமல் 48 ரன்கள் சேர்த்தார்.
பல்லேகலே:
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இன்று கடைசி போட்டி நடைபெற்றது.
டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 75 ரன்கள் விளாசினார். ஷபாலி சர்மா 49 ரன்கள், பூஜா வஸ்திராகர் 56 ரன்கள் (நாட் அவுட்), யாஸ்திகா பாட்டியா 30 ரன்கள் எடுத்தனர்.

பூஜா வஸ்திராகர்
இதையடுத்து ஆடிய இலங்கை அணி 47.3 ஓவர்களில் 216 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியா 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணியில், அதிகபட்சமாக நிலாக்சி டி சில்வா ஆட்டமிழக்காமல் 48 ரன்கள் சேர்த்தார். கேப்டன் சமாரி அட்டபட்டு 44 ரன்களும், ஹாசினி பெரேரா 39 ரன்களும் சேர்த்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3-0 என ஒருநாள் போட்டித் தொடரை முழுமையாக கைப்பற்றியது. கடைசி போட்டியின் சிறந்த வீராங்கனை மற்றும் இந்த தொடரின் சிறந்த வீராங்கனை என இரண்டு பரிசுகளையும் ஹர்மன்பிரீத் கவுர் தட்டிச்சென்றார்.