search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்புத்துறை மந்திரி"

    • அமைதியை விரும்பும் இந்தியா, போருக்கு தயங்குவதாக தவறாக நினைக்கக் கூடாது.
    • தீங்கு விளைவிக்க விரும்புபவர்களுக்கு பதிலடி கொடுக்கப்படும்.

    பதோலி:

    நாட்டுக்காக உயிர்நீத்த பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினரை இமாச்சலப் பிரதேசம், பதோலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு மந்திரி ராஜ்நத்சிங் கவுரவித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    உயிர் தியாகம் செய்த துணிச்சலான வீரர்களின் குடும்பத்தினருக்கு நாடு என்றென்றும் கடன் பட்டுள்ளது. ஒழுக்கம், கடமையில் அர்ப்பணிப்பு, தேசபக்தி மற்றும் தியாகம் மூலம் மக்களுக்கு குறிப்பாக, இளைஞர்களுக்கு பாதுகாப்பு படையினர் எப்போதும் உந்து சக்தியாக திகழ்கின்றனர். 


    பின்னணியோ, மத நம்பிக்கையோ அவர்களுக்கு ஒரு பொருட்டு கிடையாது. நம்முடைய மதிப்பிற்குரிய மூவர்ணக் கொடி தொடர்ந்து உயரத்தில் பறக்கவேண்டும் என்பது முக்கியம். நமது ராணுவத்தின் துணிச்சல் உலகம் முழுவதும் மதிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

    உலகில் அமைதி நிலவ வேண்டும் என்று வலியுறுத்தி வரும் ஒரே நாடு இந்தியா. அமைதியை விரும்பும் இந்தியா, போருக்கு தயங்குவதாக எந்த நாடும் தவறாக நினைக்கக்கூடாது. எந்த ஒரு நாட்டையும், இந்தியா தாக்கவில்லை, ஒரு இஞ்ச் அன்னிய நாட்டு நிலத்தைக்கூட கைப்பற்றவில்லை. இந்தியாவின் நல்லிணக்கத்திற்கு யாராவது ஊறு விளைவித்தால், உரிய பதிலடி கொடுக்கப்படும்.

    வடக்கு எல்லைப்பகுதியில் சீனாவுடன் நமக்கு கருத்து வேறுபாடு உள்ளது. எந்தவொரு பெரிய சக்தியாக இருந்தாலும், அது பொருட்டல்ல என்பதை கல்வான் சம்பவம் மூலம் நமது தைரியமிக்க வீரர்கள் நிரூபித்தனர். நட்பு நாடுகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், புதிய இந்தியாவை மத்திய அரசு கட்டமைத்து வருகிறது. அதற்கு தீங்கு விளைவிக்க விரும்புபவர்களுக்கு பதிலடி கொடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை.
    • ஆறு வருட காலக் கெடுவின் கீழ் கொள்முதல் செய்யப்படும்.

    தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், பாதுகாப்புத்துறையில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    பாதுகாப்பு உற்பத்தியில் இந்தியத் தொழில்துறை அதிக பங்களிப்பை அளிக்கும் அடிப்படையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ விகாரங்கள் துறையில் 780 பொருட்களின் மூன்றாவது நேர்மறை உள்நாட்டு உற்பத்தி பட்டியலுக்கான முன்மொழிகளுக்கு பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

    டிசம்பர் 2023 முதல் டிசம்பர் 2028 வரையிலான காலக்கட்டத்தில், இந்த பொருட்களின் இறக்குமதி தடைக்கான குறிப்பிட்ட காலக்கெடுவை பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

    இதனையடுத்து 3வது பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் சுமார் ஆறு வருட காலக் கெடுவின் கீழ் இந்திய தொழில்துறையினரிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும்.

    டிசம்பர் 2021 மற்றும் மார்ச் 2022-இல் வெளியிடப்பட்ட இரண்டு உள்நாட்டு உற்பத்தி பட்டியல்களின் தொடர்ச்சியாக தற்போது இந்த 3வது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியல்களின்படி, 2500 பொருட்கள் ஏற்கனவே உள்ளூர்மயமாக்கப் பட்டுள்ளன.

    458 பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் உள்ளூர் மயமாக்கப்படும். அவற்றிலும் இதுவரை 167 பொருட்களை உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதாக மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ==

    • செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியது காலத்தின் கட்டாயம்.
    • செயற்கை நுண்ணறிவை அமைதிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    டெல்லியில் நடைபெற்ற பாதுகாப்புத் துறையில் செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பிலான கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில் பங்கேற்ற பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் செயற்கை நுண்ணறிவு பொருட்கள் மற்றம் தொழில்நுட்பங்களை வெளியிட்டார்

    நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மனித குல முன்னேற்றத்தில் செயற்கை நுண்ணறிவு ஒரு புரட்சிகரமான நடவடிக்கை என்றார். இந்த பூமியில் மிகவும் வளர்ச்சியடைந்த உயிரினம் மனிதன் என்பதற்கு இதுவே ஆதாரம் என்றும் அவர் கூறினார்.

    மனித மூளை படைப்பாற்றல் கொண்டது, அறிவாற்றலை பிரதிபலிக்கும் திறன் கொண்டது, அறிவாற்றலை உண்டாக்கும் நுண்ணறிவை தூண்டக்கூடியது என்பது வியப்பளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை உரிய நேரத்தில் அறிமுகப்படுத்தியது காலத்தின் கட்டாயம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    யார் மீதும் ஆதிக்கம் செலுத்துவதை இந்தியா விரும்பவில்லை என்றாலும், எதிர்கால அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்காகவே, செயற்கை நுண்ணறிவு திறன் உருவாக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

    செயற்கை நுண்ணறிவை மனிதகுல முன்னேற்றம் மற்றும் அமைதிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

    • அக்னிபாத் திட்டத்தின் கீழ் வீரர்களை சேர்க்கும் பணிகளை முப்படைகளும் தொடங்கி உள்ளன.
    • அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையில் சேர 10 ஆயிரம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.

    முப்படைகளில் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறையும் வெடித்தன. ஆனாலும் இந்த திட்டத்தை திரும்பப்பெற முடியாது என அரசு உறுதியாக தெரிவித்தது.

    அதேநேரம் இந்த திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை முப்படைகளும் தொடங்கி உள்ளன. அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையில் சேர சுமார் 10 ஆயிரம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.

    இந்த நிலையில் அக்னிபாத் திட்டத்தின் பல்வேறு அம்சங்கள் பற்றி பாதுகாப்பு துறைக்கான நாடாளுமன்ற ஆலோசனைக்குழு கூட்டம் வரும் 11ந் தேதி நடைபெற உள்ளது. இந்த குழுவில் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தேசிய மாநாடு கட்சித்தலைவர் பரூக் அப்துல்லா, திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சுதீப் பந்தோபாத்யாய் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த குழுவினரிடம் அக்னிபாத் திட்டம் குறித்து மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் விளக்கம் அளிக்கிறார். அக்னிபாத் திட்டத்தில் வீரர்கள் சேர்ப்பு உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் குறித்து அவர் விளக்கம் அளிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தில் பாதுகாப்புத்துறை செயலாளர், முப்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

    ×