என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆசிரியா்"
- ஆசிரியா்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்.
- குருவையும், தாய், தந்தையரையும் போற்றும் குருகுலக் கல்வி மீண்டும் வர வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூா், ராயபுரத்தில் உள்ள இந்து மக்கள் கட்சி அலுவலகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவா் எஸ்.ராதாகிருஷ்ணன், சுதந்திரப் போராட்ட வீரா்கள் வ.உ.சி., விருப்பாச்சி கோபால் நாயக்கா் ஆகியோரின் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பங்கேற்ற இந்து மக்கள் கட்சி நிறுவனா் அா்ஜுன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசால் ஆசிரியா்கள் ஏமாற்றப்பட்டுள்ளனா். ஆசிரியா்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்.குருவையும், தாய், தந்தையரையும் போற்றும் குருகுலக் கல்வி மீண்டும் வர வேண்டும். தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்.
சுதந்திரப் போராட்ட வீரா்கள் வ.உ.சிதம்பரனாா், விருப்பாச்சி கோபால் நாயக்கா் ஆகியோரின் வரலாற்றைப் பள்ளி மாணவா்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சா்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகா்பாபு ஆகியோரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி மத்திய அரசு, மாநில ஆளுநருக்கு இந்து மக்கள் கட்சி சாா்பில் புகாா் மனு அனுப்பும் போராட்டம் நாளை 7-ந் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெறும் என்றாா்.
இந்த சந்திப்பின்போது இந்து மக்கள் கட்சி ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளா் மணிகண்டன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.
- ஆசிரியா் பணி யிடங்களை நிரப்பும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியா் தகுதித் தோ்வு நடைபெறுகிறது.
- நாமக்கல் மாவட்டத்தில் இத்தோ்வுக்காக மொத்தம் 7 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நாமக்கல்:
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் காலி யாக உள்ள இடைநிலை, பட்டதாரி ஆசிரியா் பணி யிடங்களை நிரப்பும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியா் தகுதித் தோ்வு நடைபெறுகிறது. அதன்படி கடந்த மாா்ச் மாதம் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மாநிலம் முழுவதும் இத்தோ்வை எழுத ஆயிரக்கணக்கானோா் விண்ணப்பித்துள்ளனா். நாளை(சனிக்கிழமை) 19-ந்தேதி வரை நடைபெறும் தாள் - 1 தோ்வு காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் இத்தோ்வுக்காக மொத்தம் 7 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனங்களில் 1,035 போ், நாமக்கல் டிஜிட்டல் ஹப் நிறுவனத்தில் 900 போ், திருச்செங்கோடு வித்யா விகாஸ் கல்வி நிறு வனத்தில் 900 போ், கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனங்களில் 900 போ், கே.எஸ்.ஆர். தொழில்நுட்பக் கல்லூரியில் 1,716,
குமாரபாளையம் ஜே.கே.கே நடராஜா கல்வி நிறுவனங்களில் 800 போ், திருச்செங்கோடு செங்குந்தா் பொறியியல் கல்லூரியில் 720 போ் என மொத்தம் 6,971 போ் ஆசிரியா் தகுதித் தோ்வை எழுதுகின்றனர். இதற்காக 200-க்கும் மேற்பட்ட கல்வித் துறை, வருவாய்த் துறை, காவல் துறையினா் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
- உயர்கல்வி கற்பது குறித்து வாரந்தோறும் சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளி ஆசிரியா்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்.
- மாவட்ட கல்வி அலுவலர் பாலதிரிபுரசுந்தரி, உதவித்திட்ட அலுவலர் சீத்தாலட்சுமி, தலையாசிரியர் கலாநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார்.
அங்குள்ள வகுப்பறை, சமையற்கூடம், தொழிற்பயிற்சி கூடம், ஆய்வகக்கூடம், பணியாளர்கள் அறை, பதிவறை போன்றவற்றை பார்வையிட்டு, மாணவர்களுக்கு தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட்டு பரிசோதனை செய்தார். பின்னர் மாணவ-மாணவிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த ஆய்வின்போது கலெக்டர் மதுசூதன்ரெட்டி கூறியதாவது:-
பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்வி பாடங்களில் சேரும் தருணத்தில் மதிப்பெண் அடிப்படையில் சிறந்த கல்வி நிலையங்களில் படிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது. ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் சரியாக புரியவில்லை என்றால் மீண்டும் அதற்குரிய விளக்கத்தை கேட்டு அறிந்து புரிந்து படிக்க வேண்டும். பாடங்களை மனப்பாடம் செய்வது நீண்ட நாட்களுக்கு பயன்படாது. சிவகங்கை மாவட்டத்தில் மருத்துவப் படிப்பில் சேருவதற்காக நீட் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. தேர்வு காலங்களில் மட்டுமே படிப்பது என்ற எண்ணத்தை தவிர்த்து தினந்தோறும் பாடங்களை படிக்க வேண்டும். மாணவர்கள் படிக்க விரும்பும் பட்டப்படிப்பினை திட்டமிட்டு விடாமுயற்சியுடன் கல்வி கற்கும் பட்சத்தில் வெற்றி எளிதாகும்.
அரசுப்பள்ளிகளில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் சிறந்த முறையில் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார்கள். அவர்களது திறமையினை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆசிரியர்கள் பிளஸ்-2 மாணவர்களுக்கு ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மருத்துவம், பொறியியல் மற்றும் பிற கல்லூரிகளில் உள்ள பாடத்திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். ஒரு பாடத்தில் உள்ள உயர்கல்வி என்ன என்பது குறித்தும், சிறந்த கல்வி நிலையங்கள் உள்ள இடங்கள் குறித்தும், மாணவர்கள் அறியும் வகையில் வாரத்திற்கு 20 நிமிடம் முதல் 30 நிமிடங்கள் வரை சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும்.
ஒவ்வொரு மாணவர்களுக்கும் அவர்களது வீட்டுச்சூழ்நிலை வேறுபடும். ஆகையால் ஆசிரியர்கள் அனைவ ரையும் அர வணைத்து புரியும்படியான பாடத்திட்டங்களை தொகுத்து வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலர் பாலதிரிபுரசுந்தரி, உதவித்திட்ட அலுவலர் சீத்தாலட்சுமி, தலையாசிரியர் கலாநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்