என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சரவணம்பட்டி"
- 2 தம்பிகளுடன் தங்கி இருந்து அங்குள்ள அடுக்கு மாடி கட்டிடத்தில் வேலை செய்து வந்தார்.
- கோவை இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பில்ட்ராம் (வயது 39). இவர் கோவை விளாங்குறிச்சி பகுதியில் தனது 2 தம்பிகளுடன் தங்கி இருந்து அங்குள்ள அடுக்கு மாடி கட்டிடத்தில் வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று பில்ட்ராம் சரவணம்பட்டி விளாங்குறிச்சி சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். அந்த டாஸ்மாக் கடையில் மது அருந்த வரும் நபர் ஒருவர், அங்கு வருபவர்களிடம் பணத்தை பறித்து தகராறில் ஈடுபடுவது வழக்கம். இதேபோன்று அந்த நபர் நேற்று மது அருந்த வந்த பில்ட்ராமிடம் பணம் தருமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டார். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்றார். இதனால் அந்த நபர் பில்ட்ராமிடம் இருந்து பணத்தை பறிக்க முயற்சி செய்தார்.அப்போது பில்ட்ராம் அவரை தடுத்து உள்ளார். பின்னர் டாஸ்மாக் கடை முன்பு 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அந்த நபர், பில்ட்ராமை அடித்து கீழே தள்ளிவிட்டார். இதில் பில்ட்ராம் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றார். அறைக்கு திரும்பிய பில்ட்ராமின் தம்பி ரஞ்சித் ராம், பில்ட்ராமை காணவில்லை என தேடி கொண்டு இருந்தார். அப்போது டாஸ்மாக் கடை ஊழியர் விக்னேஷ் என்பவர் ரஞ்சித் ராமிடம், அவரது அண்ணன் பில்ட்ராம் டாஸ்மாக் கடை அருகே இறந்து கிடப்பதாக கூறினார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த ரஞ்சித் ராம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தனது அண்ணனின் உடலை கண்டு கதறி அழுதார். பின்னர் இதுகுறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பில்ட்ராமின் உடலை மீட்டு கோவை இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொ டர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை பரிசோதணை செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடையில் பில்ட்ராமிடம் தகராறு செய்த அந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசா ரணையில் சரவண ம்பட்டி விநாயகாபுரம் 2-வது வீதியை சேர்ந்த சூரியா (24) என்பவர் பில்ட்ராமை தள்ளிவிட்டதில் இறந்தது தெரியவ ந்தது. போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சரவணகுமார் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வருகிறார்.
- 20 பேர் கொண்ட கும்பல் வெறிசெயலில் ஈடுபட்டது.
கணபதி,
கோவை சரவணம்பட்டி சிவனந்தாபுரம் ஜனதா நகரை சேர்ந்தவர் மணிகண்டன்.
இவரது மகன் சரவணகுமார்(வயது23). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வருகிறார்.
நேற்று இரவு அவரது வீட்டில் உறவினர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டி ருந்தனர். இரவு 11 மணியளவில் வீட்டிற்குள் 20 பேர் கொண்ட கும்பல் அத்துமீறி உள்ளே நுழைந்தனர்.
அவர்கள் சரவணகுமாரிடம் காமராஜ பு ரத்தை சேர்ந்த ஒரு வா லிபர் குறித்து கேட்டனர். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.
இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் வீட்டில் இருந்த பொருட்களை ஆயுதங்களால் அடித்து உடைத்து சூறையாடினர்.
பின்னர் தகாத வார்த்தைகளால் பேசி கல்லூரி மாணவர் சரவ ணகுமாரை அரிவாளால் வெட்டினர்.
இதில் அவருக்கு தலை மற்றும் நெற்றியில் வெட்டு காயம் விழுந்தது. இதனை பார்த்து தடுக்க முயன்ற அவரது மாமா பாலசுப்ரமணியத்தையும் அரிவாளால் வெட்டினர்.
இதில் அவருக்கு உடலில் பல இடங்களில் வெட்டு காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த கும்பல் அவர்களை மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதையடுத்து உறவினர்கள் பலத்த காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். முன் விரோதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 6 ஆண்டாக ஒரு ஹெர்பல் நிறுவனத்தில் மருத்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார்.
- 4 பேர் கொண்ட கும்பல் தகாத வார்த்தைகளால் பேசி ஸ்டீபன் ராஜை தாக்கினர்.
கோவை
கோவை போத்தனூர் காந்தி நகரை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் (வயது29). இவர் கடந்த 6 ஆண்டாக ஒரு ஹெர்பல் நிறுவனத்தில் மருத்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று ஸ்டீபன் ராஜ் தனது நண்பர்களை சந்திப்பதற்காக கணபதி ரவீந்திரநாத் தாகூர் வீதியில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தார்.
அப்போது திடீரென ஓட்டல் அறைக்குள் 4 பேர் கொண்ட கும்பல் அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் ஸ்டீபன் ராஜின் முகவரி உள்ளிட்ட விவரங்களை கேட்டு தகராறு செய்தனர்.
அப்போது அவர்களு க்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 4 பேர் கொண்ட கும்பல் தகாத வார்த்தைகளால் பேசி ஸ்டீபன் ராஜை தாக்கினர். பின்னர் அவரிடம் இருந்த ரூ.40 ஆயிரம் பணம், 2 செல்போன்கள் ஆகியவற்றை பறித்தனர்.
அந்த கும்பலில் ஒருவன் கத்தியால் ஸ்டீபன் ராஜின் தலையில் குத்தினார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள், 4 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
பலத்த காயமடைந்த ஸ்டீபன் ராஜை அவரது நண்பர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஓட்டலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவில் கும்பல் வந்து செல்லும் காட்சி பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.
- வெளிமாநில அழகிகளை வைத்து விபசாரம் நடைபெறுவதாக புகார்கள் எழுகின்றன.
- கூடுதலாக ரூ. 2 ஆயிரம் கொடுத்தால் ஜாலியாக இருக்கலாம் என்றார்.
கோவை, செப். 11-
கோவை நகரில் பல இடங்களில் மசாஜ் சென்டர் செயல்பட்டு வருகிறது. இதில் சில சென்டர்களில் மசாஜ் என்ற பெயரில் வெளிமாநில அழகிகளை வைத்து விபசாரம் நடைபெறுவதாக புகார்கள் எழுகின்றன.
இந்நிலையில், சேலத்தை சேர்ந்த 23 வயது வாலிபர் ஒருவர் சொந்த வேலை காரணமாக கோவை வந்தார். பீளமேட்டில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். பின்னர் அவர் கோவையில் உள்ள மசாஜ் சென்டருக்கு செல்ல நினைத்தார்.
இதனையடுத்து அந்த வாலிபர் சரவணம்பட்டியில் செயல்பட்டு வரும் ஒரு மசாஜ் சென்டருக்கு சென்றார். அப்போது அங்கு இருந்த பார்த்திபன் (28), என்பவர் இங்கு மசாஜ் செய்து விட்டு இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருக்கலாம். கூடுதலாக ரூ. 2 ஆயிரம் கொடுத்தால் போதும், நீங்கள் ஜாலியாக இருக்கலாம் என்றார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் சரவணம்பட்டி போலீஸ் நிலையம் சென்றார். பின்னர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் அந்த மசாஜ் சென்டருக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு இளம்பெண்ணை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 26 வயது இளம்பெண்ணை மீட்டு கணபதி அத்திப்பாளையம் பிரிவில் உள்ள ஒரு காப்பகத்தில் சேர்த்தனர்.
மசாஜ் செய்ய சென்ற வாலிபரிடம் இளம்பெண்ணை காட்டி விபசாரத்துக்கு அழைத்த பார்த்திபன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நண்பர்கள் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை:
கோவை சரவணம்பட்டி பெரியவீதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது மனைவி ஜீவா. இவர்களது மகன் விமல்(வயது18).
இவர் காளப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். விமல் போதை மாத்திரை மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். இதனால் பள்ளிக்கு சரியாக செல்லாமல் விமல் சுற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக விமல் வீட்டுக்கு செல்லாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று விமல் தான் படிக்கும் பள்ளிக்கு அருகில் உள்ள நூலகத்தின் முன்பு அதிக போதையில் படுத்து இருந்தார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் 3 பேர் அங்கு சென்று விமலை எழுந்து வீட்டுக்கு செல்லுமாறு அறிவுரை கூறினர். ஆனால் அவர் வீட்டுக்கு செல்லாமல் நண்பர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தகராறாக மாறியது. அப்போது அவரது நண்பர்கள் விமலை தாக்கி உள்ளனர். இதனால் போதையில் இருந்த விமலுக்கு வலிப்பு ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் பயந்து போய் அங்கிருந்து சென்றனர்.
விமல் வலிப்பால் துடிப்பதைக் கண்டு அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வி ரைந்து சென்று மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மாணவரின் தாயார் ஜீவா அளித்த புகாரின் அடிப்படையில் சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து மாணவர் விமலை தாக்கிய அவரது நண்பர்களான 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடையின் மேற்கூரையை பிரிந்து உள்ளே இறங்கிய மர்மநபர் கடையில் இருந்த அரிசி மற்றும் பணத்ைத கொள்ளையடித்து சென்றார்.
- அரிசி மூட்டை பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.
கோவை :
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சிவானந்தாபுரத்தை சேர்ந்தவர் ஜெபஸ்டின் ரஜேஷ் (வயத 36). இவர் அந்த பகுதியில் அரிசி கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் கடையை பூட்டி விட்டு மதிய உணவு சாப்பிடுவதற்காக சென்றார்.
அப்போது கடையில் மேற்கூரையை பிரிந்து உள்ளே இறங்கிய மர்மநபர் கடையில் இருந்த 5 கிலோ அரிசி மூட்டை 6, 1 கிலோ அரிசி மூட்டை 7 என ரூ.2,345 மதிப்பிலான அரிசி மூட்டைகள், ரூ. 3 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
இது குறித்து ஜெபஸ்டின் ராஜேஷ் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அரிசி மூட்டை பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்