search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலையோர மரம் வெட்டி சாய்ப்பு"

    • அந்த நபர்கள் மரம் வெட்டுவதற்கான எந்த ஒரு அதிகாரியிடமும் அனுமதி பெறவில்லை என தெரியவந்தது.
    • அனுமதி பெறாமல் சாலை ஓரத்தில் இருந்த மரத்தை வெட்டி எடுத்துச் சென்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் பேரூராட்சி அலுவலக சாலையில் பல ஆண்டுகளாக வளர்ந்த பெரிய புளிய மரம் இருந்தது.

    இந்த பழமையான மரத்தை அப்பகுதியில் உள்ள சிலர் பட்டப் பகலில் கிரேன் எந்திரத்துடன் வந்து மரத்தை அடியோடு வெட்டி சாய்த்து மரத்தை முழுவதும் எடுத்துச் சென்று விட்டனர்.

    இதைப் பார்த்து அதிர்ச்சடைந்த பொது மக்களும் இயற்கை ஆர்வலர்களும் பேருராட்சி நிர்வாகத்திலும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடமும் முறையிட்டனர். சாலையோர மரத்தை வெட்டுவதற்கு யாருக்கும் அனுமதிவழங்க வில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த நபர்கள் மரம் வெட்டுவதற்கான எந்த ஒரு அதிகாரியிடமும் அனுமதி பெறவில்லை என தெரியவந்தது.

    இதனால் பொதுமக்களும் இயற்கை ஆர்வலர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அனுமதி பெறாமல் சாலை ஓரத்தில் இருந்த மரத்தை வெட்டி எடுத்துச் சென்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் மாவட்ட கலெக்டர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் இயற்கை ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். கெலமங்கலம் பேருராட்சி அலுவலகம் அருகில் உள்ள புளியமரத்தை எந்த அனுமதியும் பெறாமல் வெட்டி எடுத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×