search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்களிப்பு"

    • ஆசியாவில் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்த பிரெஞ்சு குடிமக்களுக்கு இன்று தேர்தல் நடந்தது.
    • புதுச்சேரி பிரெஞ்சு தூதரகத்தில் வாக்கு சாவடியில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது.

    புதுச்சேரி:

    ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் குடிமக்கள் தங்கள் பிரதிநிதிகளை ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு நேரடியாக தேர்ந்தெடுப்பார்கள்.

    5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தேர்தல் உலகளாவிய முறையில் நடைபெறும். 2024 தேர்தல் களுக்காக ஐரோப்பிய பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 720 இடங்களில் பிரான்சுக்கு 81 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பிரெஞ்சு எம்.பி.க்கள் உலகம் முழுவதும் உள்ள பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஐரோப்பிய தேர்தல்கள் ஜூன் 6-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் நடைபெறுகிறது.

    ஆசியாவில் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்த பிரெஞ்சு குடிமக்களுக்கு இன்று தேர்தல் நடந்தது. வெளிநாட்டில் உள்ள குடிமக்களுக்கு அவர்கள் வசிக்கும் நாட்டில் இருந்தே வாக்களிக்கும் உரிமையை பிரான்ஸ் அரசு வழங்குகிறது.

    இதன்படி கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 4 ஆயிரத்து 546 பிரெஞ்சு குடிமக்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர். இவர்கள் வாக்களிக்க வசதியாக புதுச்சேரியில் 2 சென்னை மற்றும் காரைக்காலில் தலா ஒன்று என 4 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு 38 வெவ்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் ஐரோப்பிய தேர்தல்களில் பங்கேற்கின்றனர். புதுச்சேரி பிரெஞ்சு தூதரகத்தில் வாக்கு சாவடியில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது.

    பிரான்சின் கான்சல் ஜெனரல் லிஸ் டால்போட் பாரே, புதுச்சேரியில் வாக்களித்தார். தொடர்ந்து அவர் வாக்களிக்கும் செயல் முறையையும் மேற்பார்வை யிட்டார். மாலை 6 மணி வரை வாக்கு பதிவு நடக்கிறது.

    புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு துணை தூதரகம் மற்றும் சென்னையில் உள்ள பியூரோ டி பிரான்ஸ் தேர்தலுக்கான ஏற்பாடுளை செய்திருந்தது. 

    • வாக்காளர் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி புதுவை மாநில விலங்கான அணில் வேடமணிந்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
    • வாக்காளர்கள் அனைவரும் வாக்குப்பதிவு நாளன்று தவறாமல் வாக்களிக்குமாறு மாணவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி தேர்தல் துறை 100 சதவீதம் வாக்குபதிவு மற்றும் நேர்மையான வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது .

    ஆடல்-பாடல் இதில் ஒரு பகுதியாக புதுச்சேரி காந்தி திடல், ரெயில் நிலையம், அண்ணாசாலை மற்றும் கார்கில் நினைவிடம் உட்பட 7 இடங்களில் பாடலுடன் நடன குழு மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    இதில் வாக்காளர் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி புதுவை மாநில விலங்கான அணில் வேடமணிந்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தலில் பங்கெடுத்தல் திட்ட மாநில அதிகாரி டாக்டர் கோவிந்தசாமி, நாட்டு நலப்பணி திட்ட அதிகாரி சதீஷ்குமார் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம் சார்பில், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சமுதாய கல்லூரி மாணவ- மாணவிகள், ஆங்கிலத்தில் பிளாஷ் மாப் என்றழைக்கப்படும் மின்னல் நடனம் கடற்கரை சாலை தலைமைச் செயலகம் எதிரே நடைபெற்றது.


    30 மாணவ- மாணவிகள் ஆடிய மின்னல் நடனத்தை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர். சமுதாய கல்லூரியின் முதல்வர் லலிதா ராமகிருஷ்ணன், வாக்காளர் கல்வி முதன்மை அதிகாரி லதா பார்த்திபன் மற்றும் பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். உடற்பயிற்சி கல்வி இயக்குனர் ஜெகதீஸ்வரியின் மேற்பார்வையில் நடனம் அமைக்கப்பட்டிருந்தது. வாக்காளர் கல்வி கருத்துக்கள் அடங்கிய பாடல், வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்திய வண்ணம் பாடல் முடிந்தது.

    வாக்காளர்கள் அனைவரும் வாக்குப்பதிவு நாளன்று தவறாமல் வாக்களிக்குமாறு மாணவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

    புதுவை அரசு ஆயுஷ் மருத்துவ துறையுடன் இணைந்து வெங்கட்டா நகர் பூங்காவில், நடைபயிற்சிக்கு வந்த பொதுமக்களுக்கு, நல்ல உடல் வளம் அமைய உதவும் யோகாப் பயிற்சிகள் செய்து காண்பிக்கப்பட்டது.

    அத்துடன் வாக்காளர் விழிப்புணர்வு கருத்துக்களும் சொல்லப்பட்டு, விழிப்புணர்வு கருத்துக்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

    ஆயுஷ் மருத்துவத் துறையின், யோகா மற்றும் இயற்கை சிகிச்சை பிரிவின் டாக்டர் வெங்கடேஸ்வரன் யோகாவின் சிறப்புக்களை எடுத்துரைத்தார். காலை நடைபயிற்சி செய்திட வந்த பொதுமக்கள் பலர் ஆர்வமாக கலந்து கொண்டு சந்தேகங்கள் கேட்டு விளக்கம் பெற்றனர். 

    • பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த ஏராளமான மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ரயிலடியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட நிர்வாகம், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் நடந்த பேரணியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த ஏராளமான மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு வாக்களிப்பது ஜனநாயக கடமை, நிச்சயமாக வாக்களிப்பேன் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.

    மேலும் வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஜனநாயக முறைப்படி வாக்களித்தற்காக முதியோர்களுக்கு பாராட்டு சான்றிதழை வழங்கினார்.
    • தஞ்சாவூர் மாவட்டத்தில் 20 முதியோர் இல்லங்கள் செயல்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சர்வதேச முதியோர் தினத்தினை முன்னிட்டு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

    தொடர்ந்து சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற முதியோர்களுக்கு கலெக்டர் பரிசுகளை வழங்கினார்.

    மேலும் 80 வயதுக்கு ேமற்பட்ட முதியோர்கள் ஜனநாயக முறைப்படி வாக்களித்தற்காக தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட பாராட்டு சான்றிதழை வழங்கினார்.

    இதையடுத்து "இந்திய குடிமகன் குடிமகளாகிய நான், முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன் எனவும், மனோரீதியாகவும் உடல் ரீதியாகவும் காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன் எனவும், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன்.

    பொது இடங்களான மருத்துவமனை, வங்கி, பேருந்து போன்ற இடங்களில் முதியோர்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களுக்கெதிரான கொடுஞ்செயல்கள், வன்மு றைகள் எவ்விதத்திலும் இழைக்கப்படுவதனை தடுத்திட பாடுபடுவேன் என உளமாற உறுதி கூறுகிறேன்."

    என்ற உறுதிமொழி வாசிக்க அனைத்து அரசு அலுவலர்களும் அதனை பின் தொடர்ந்து வாசித்தனர்.

    பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரி வித்ததாவது:-

    தமிழ்நாட்டில் அதிக ரித்து வரும் ஆதரவற்ற முதியோர்களின் எண்ணிக்கையினை கருத்தில் கொண்டு அவர்களின் நலன் காக்க சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் ஆதரவற்ற முதியோர்களுக்கான இல்லங்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் 20 முதியோர் இல்லங்கள் செயல்பட்டு வருகிறது. இதுவரை 19 முதியோர் இல்லங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1 முதியோர் இல்லம் பதிவு செய்யப்பட நடவடிக்கையில் உள்ளது.

    அனைத்து முதியோர் இல்லங்களில் உள்ள முதியவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டம் 2007ன் கீழ் 187 மனுக்கள் பெறப்பட்டு, 182 மனுக்கள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி சுதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரெங்கராஜன், மாவட்ட சமூக நல அலுவலர் ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிதேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது.
    • இன்று காலை 7மணிக்கு தேர்தல் தொடங்கியது. மாலை 6மணி வரை நடைபெறவுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவ ட்டத்தில் முகையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காரணை ஊராட்சி வார்டு எண் 7-ல் உள்ள அம்பேத்கர் தெரு, பிள்ளையார் கோவில் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்குத்தெரு ஆகிய பகுதிகள், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம் முண்டியம்பாக்கம் ஊராட்சி வார்டு எண் 9-ல் உள்ள குளக்கரை தெரு, மெயின் ரோடு, மேட்டுத் தெரு, தச்சர் தெரு ஆகிய பகுதிகள், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியம் அன்னமங்கலம் ஊராட்சி வார்டு எண் 5-ல் உள்ள ஆஞ்சநேயர் கோவில் தெரு, மடவிளாகம், மாரியம்மன் கோவில் தெரு, நடுத்தெரு ஆகிய பகுதிகள் அமைந்துள்ள கிராம ஊராட்சி வார்டுகளின் வார்டு உறுப்பினர்களுக்கான தற்செயல் தேர்தல் இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை 7மணிக்கு தேர்தல் தொடங்கியது. மாலை 6மணி வரை நடைபெறவுள்ளது.

    முண்டியம்பாக்கம் ஊராட்சி வார்டு எண் 9-ல் 513 வாக்குகள் உள்ளது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.

    ×