என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கடலரிப்பு"
- சுமார் 25 அடி ஆழத்திற்கு பள்ளம் விழுந்ததில் சாலையில் துண்டிப்பு ஏற்பட்டது
- கடலரிப்பு ஏற்பட்டு கொட்டப்பட்ட மணல்கள் அடித்து செல்லப்பட்டுள்ளது
கன்னியாகுமரி :
குளச்சல் அருகே கொட்டில்பாட்டில் கடந்த வருடம் ஜூலை மாதத்தில் ஏற்பட்ட கடல் சீற்றத்தில் ராட்சத அலைகள் எழுந்து கடலரிப்பு தடுப்பு சுவரை தாண்டி விழுந்தது.
இதில் ஆலயத்தின் அருகில் ஏற்பட்ட கடல ரிப்பில் அலை தடுப்பு சுவர் கற்கள் சரிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் சுமார் 25 அடி ஆழத்திற்கு பள்ளம் விழுந்ததில் சாலையில் துண்டிப்பு ஏற்பட்டது. மேலும் கிழக்கு பகுதியில் 2 இடங்களில் அலை தடுப்பு சுவர் கற்கள் சரிந்து கடலில் விழுந்தது. தொடர்ந்து ஏற்படும் கடலரிப்பிலிருந்து வீடுகளை பாதுகாக்க அங்கு தற்காலிகமாக மணல் மூடைகளை அடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து பிரின்ஸ் எம்.எல்.ஏ. முயற்சியால் மணவாளக்குறிச்சி ஐ.ஆர்.இ.எல். நிறுவனம் சார்பில் கடலரிப்பில் ஏற்பட்ட பள்ளத்தில் மணல் கொட்டப்பட்டது. அங்கு கடலரிப்பு காலங்களில் வீடுகளை பாதுகாக்க நிரந்தர தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக குளச்சல் பகுதியில் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது. கொட்டில்பாட்டில் மணல் கொட்டப்பட்ட பகுதியில் மீண்டும் கடலரிப்பு ஏற்பட்டு கொட்டப்பட்ட மணல்கள் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதனால் கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொட்டில்பாட்டில் ஏற்பட்ட மீண்டும் கடலரிப்பு பகுதிகளை நேற்று பிரின்ஸ் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதில் பங்குத்தந்தை ராஜ், மாநில காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் யூசுப்கான், மாவட்ட துணை தலைவர் முனாப் மற்றும் நிர்வாகிகள் அந்தோணி தாசன், ஜார்ஜ், மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் ஸ்டார்வின் உள்பட ஊர் மக்கள் கலந்துகொண்டனர்.
கடலரிப்பு பகுதியை பார்வையிட்ட பின்னர் பிரின்ஸ் எம்.எல்.ஏ. ஆண்டுதோறும் நடக்கும் கடலரிப்பில் கொட்டி ல்பாட்டில் மீனவர் கிரா மத்தை பாதுகாக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்து வேன் என உறுதி அளித்தார்.
- குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படுவது வழக்கம்.
- ராட்சத அலைகள் எழுந்து மணல் பரப்பு வரை விழும்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படுவது வழக்கம். ராட்சத அலைகள் எழுந்து மணல் பரப்பு வரை விழும். இதனால் பாதுகாப்பு கருதி விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியதால் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திரும்பின. இதனால் மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டது. தற்போது கடந்த 1-ந்தேதி முதல் மேற்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகளுக்கு 60 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதால் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை.
ஆனால் பைபர் வள்ளங்கள், கட்டு மரங்கள் வழக்கம்போல் மீன் பிடித்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று காலை குளச்சல் கடல் பகுதியில் கடல் திடீர் சீற்றமாக இருந்து வருகிறது. ராட்சத அலைகள் எழுந்து மணல் பரப்பு வரை விழுந்து செல்கிறது.
இந்த அலை வெள்ளத்தால் துறைமுக பழைய பாலத்தின் தூண் பகுதியில் ஏற்பட்ட கடலரிப்பு பகுதியில் மணல் குவிந்து உள்ளது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட கடலரிப்பு பகுதியில் மணல் திட்டு உருவாகி உள்ளது. குளச்சல், கொட்டில்பாடு சுற்று வட்டார பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் மணல்பரப்பில் நிறுத்தப்பட்ட பைபர் வள்ளங்களை மீனவர்கள் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள் தொழில் பாதிப்பில்லாமல் வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றன.
- அமைச்சர் எ.வ.வேலுவிடம் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு
- சாலையை விரிவாக்கம் செய்து உயர்ந்த தரத்துடன் முழுமையாக சீரமைக்க வேண்டும்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சி களில் கலந்து கொண்ட பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சர் எ.வ.வேலுவிடம் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஒரு கோரிக்கை மனு வழங்கினார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலையான பரசேரி - திங்கள்நகர் - புதுக்கடை சாலை கடைசியாக 2016-ம் ஆண்டு சீரமைக்கப்பட்டது. இந்த சாலையின் நடுப்பகுதியில் பதிக்கப்பட்டுள்ள சுனாமி கூட்டு குடிநீர் திட்டத்தின் ராட்சத சிமெண்ட் குழாயில் நீர் அழுத்தத்தால் ஏற்படும் உடைப்புகளாலும், புயல், மழை காரணங்களாலும் சாலை முழுவதுமாக பழுதடைந்துள்ளது.
இந்த சாலை மாவட்டத்தின் மிக முக்கியமான போக்குவரத்து சாலை. இந்த சாலையில் பரசேரி-–திக்கணங்கோடு, திக்கணங்கோடு-–கருங்கல் என இரு கட்டங்களாக சாலைகள் சீரமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஆனால், மிகவும் பழுதடைந்துள்ள கருங்கல்-புதுக்கடை சாலை எந்த திட்டத்திலும் இதுவரை சேர்க்கப்படவில்லை. ஆகவே, கருங்கல்-– புதுக்கடை வரை சாலையை விரிவாக்கம் செய்து உயர்ந்த தரத்துடன் முழுமையாக சீரமைக்க வேண்டும்.
ஏழுதேசம் மற்றும் ஆறுதேசம் கிராமங்கள் வழியாக செல்லும் கன்னியாகுமரி பழைய உச்சக்கடை சாலை கணபதியான்கடவு முதல் விரிவிளை வரையுள்ள சாலையை விரிவாக்கம் செய்யும் பணியை விரைவாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட வள்ளவிளை –எடப்பாடு– இரவிப்புத்தன்துறை சாலை மற்றும் முள்ளூர்துறை-அரையன்தோப்பு-தேங்காப்பட்டணம் சாலை ஆகிய 2 சாலைகளும் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கடல் சீற்றத்தால் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த 2 சாலைகளும் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திற்கு செல்லும் மிகமுக்கியமான சாலைகளாகும். இந்த 2 சாலைகளையும் ரூ.29 கோடி மதிப்பீட்டில் கடலரிப்பு தடுப்புச்சுவர் அமைத்து நிரந்தரமாக சாலை சீரமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு நடைபெற்ற மானிய கோரிக்கை எண் 21 -ல் அறிவிக்கப்பட்டது. ஆனால் திட்டம் அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்து ஒரு வருடம் முடிந்த பிறகும் இதுவரை கடலரிப்பு தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் தொடங்கப்படவில்லை. ஆகவே கடல் சீற்றம் தொடங்கும் முன்பு பொதுமக்கள் நலன்கருதி கடலரிப்பு தடுப்புச்சுவர் அமைத்து இந்த 2 சாலைகளையும் சீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் முஞ்சிறையிலிருந்து மங்காடு வழியாக கோழிவிளை செல்லும் மங்காடு சாலை சீரமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், புயல், மழை காரணங்களாலும் சாலை பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. ஆகவே, மங்காடு சாலையை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு பணி நிமித்தமாக அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் வருகைதரும் போது அவர்கள் தங்குவதற்காக எந்தவித வசதியும் இல்லை. இதனால் அவர்கள் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாகர்கோவிலில் உள்ள அரசு பயணிகள் விடுதியில் தங்க வேண்டிய நிலை காணப்படு கிறது. ஆகவே கிள்ளியூர் பகுதியில் பயணியர் தங்கும் விடுதி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள கோ ரிக்கை களுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுத்த கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- கொட்டில்பாட்டில் கடந்த 2 நாட்களாக ஏற்பட்ட கடல் சீற்றத்தால் கடலரிப்பு
- சுமார் 25 அடி ஆழத்திற்கு பள்ளம் விழுந்ததில் சாலையில் துண்டிப்பு
கன்னியாகுமரி:
குளச்சல் அருகே கொட்டில்பாட்டில் கடந்த 2 நாட்களாக ஏற்பட்ட கடல் சீற்றத்தில் ராட்சத அலைகள் எழுந்து கடலரிப்பு தடுப்பு சுவரை தாண்டி விழுந்தது.
இதில் ஆலயத்தின் அருகில் ஏற்பட்ட கடலரிப்பில் அலை தடுப்பு சுவர் கற்கள் சரிந்து விழுந்தது.அந்த பகுதியில் சுமார் 25 அடி ஆழத்திற்கு பள்ளம் விழுந்ததில் சாலையில் துண்டிப்பு ஏற்பட்டது.மேலும் கிழக்கு பகுதியில் 2 இடங்களில் அலை தடுப்பு சுவர் கற்கள் சரிந்து கடலில் விழுந்தது.
தொடர்ந்து ஏற்படும் கடலரிப்பிலிருந்து வீடு களை பாதுகாக்க அங்கு தற்காலிகமாக மணல் மூடைகளை அடுக்க வேண்டும் என மீனவர் கள் வலியுறுத்தினர். இதை யடுத்து குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் மணவாளக்குறிச்சி மணல் ஆலை நிறுவன அதிகாரிகளிடம் மணல் மூடைக்கு தேவையான மணல் வழங்குமாறு பேச்சு வார்த்தை நடத்தினார்.தொடர்ந்து பிரின்ஸ் எம்.எல்.ஏ. கொட்டில்பாட்டில் கடலரிப்பு ஏற்பட்ட பகுதி களை பார்வையிட்டார்.
இதில் மணல் ஆலை நிறுவன கனிமம் பிரிவு முதன்மை மேலாளர் சிவராஜ், துணை பொது மேலாளர் ஜெயச்சந்திரன், பங்குத்தந்தை ராஜ், கவுன்சிலர் பனிக்குருசு, மாநில காங்.செயற்குழு உறுப்பினர் யூசுப்கான், குளச்சல் நகர தலைவர் சந்திரசேகர், முன்னாள் ராணுவ வீரர் சுதன் ஆகியோர் உடனிருந்தனர்.தொடர்ந்து பிரின்ஸ் எம்.எல்.ஏ.கடலரிப்பில் பாதிக்கப் பட்ட சிங்கார வேலர் காலனி பகுதியையும் பார்வையிட்டு சென்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்