என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வந்த வாலிபர்"

    • கோபியில் இருந்து ஒரு கார் வந்து கொண்டு இருந்தது. அந்த கார்போலீசார் சோதனை செய்து கொண்டு இருந்த இடத்தில் வந்து நின்றது.
    • இதையடுத்து போலீசார் மது போதையில் காரை ஓட்டியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் தவிட்டுப்பாளை யம் மார்க்கெட் அருகே போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது கோபியில் இருந்து ஒரு கார் வந்து கொண்டு இருந்தது. அந்த கார்போலீசார் சோதனை செய்து கொண்டு இருந்த இடத்தில் வந்து நின்றது.

    காருக்குள் 2 பேர் இருந்தனர். அதில் ஒரு வாலிபர் கார் கண்ணாடியை இறக்கி போலீசாரை முறைத்து பார்த்தார். அதன்பின் அந்த காரை அவர் ஓட்டி சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த போக்குவரத்துக் போலீசார் இருசக்கர வாகனத்தில் காரை விரட்டினர்.

    அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் எதிரே சென்ற காரை போக்குவரத்து போலீசார் மடக்கி படித்தனர். காரை ஓட்டி வந்த வாலிபர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் தடுமாறியபடி காரை விட்டு கீழே இறங்கினார்.

    அப்போது போக்கு வரத்து சப்-இனஸ்பெக்டர் விஜயகுமார் அவரிடம் விசாரித்தார். அப்போது அவர் விசாரணைக்கு ஒத்து ழைக்க மறுத்து ரகளையில் ஈடுபட்டார்.

    தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் காரை ஓடடி வந்தது கோபியை சேர்ந்த அருண் (21) என்பதும், மது போதையில் காரை ஓட்டி வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் மது போதையில் காரை ஓட்டியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் அந்த வாலிபரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டு கார் பறிமுதல் செய்யப்பட்டு அந்தியூர் போலீஸ் நிலையத்தில் கொண்டு வரப்பட்டது.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டது.

    ×