search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காந்திகிராம பல்கலைக் கழகம்"

    • பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு பல்கலைக் கழகத்தில் செய்யப்படவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.
    • விழா நடைபெறும் பல்நோக்கு அரங்கம், ஹெலிகாப்டர் இறங்கு தளமான ஹெலிபேடு, அரங்கிற்கு வரும் மாணவர்களுக்கான வழித்தடம், ரெயில்வே சுரங்கப்பாதைக்கான வழித்தடம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

    சின்னாளபட்டி:

    திண்டுக்கல்-மதுரை4 வழிச்சாலையில் அமைந்துள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகத்தில் 36வது பட்டமளிப்பு விழா வருகிற 11ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான், தமிழக அமைச்சர்கள் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.

    பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு பல்கலைக் கழகத்தில் செய்யப்படவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். விழா நடைபெறும் பல்நோக்கு அரங்கம், ஹெலிகாப்டர் இறங்கு தளமான ஹெலிபேடு, அரங்கிற்கு வரும் மாணவர்களுக்கான வழித்தடம், ரெயில்வே சுரங்கப்பாதைக்கான வழித்தடம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

    தற்போது பல்நோக்கு அரங்கத்தில் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய பால்சீலிங் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. அரங்கத்தில் மேற்கு பகுதியில் விழாவில் பங்கேற்பவர்களுக்கான தனி பந்தல்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம் மற்றும் முக்கிய அலுவலகங்களுக்கு வர்ணம் பூசும் பணியும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    விழாவிற்கு வரும் பேராசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. முக்கிய பிரமுகர்கள் அமரும் இடம் விழா மேடையில் இடம்பெற வேண்டிய பேனர்கள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

    பட்டமளிப்பு விழா நடைபெறும் 11ம் தேதியன்று பல்கலைக் கழக நுழைவாயில் முன்பு முதல் வளாகம் முழுவதும் பாதுகாப்பிற்கு போலீசார் நிறுத்தப்பட உள்ளனர். அன்றைய தினம் பல்கலைக் கழக வளாகத்தில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் காந்திகிராம பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது.

    • காந்திகிராம பல்கலைக் கழக அதிகாரபூர்வ இணைய தள பக்கத்தில் இருந்தும் துணைவேந்தர் பெயர், படம் நீக்கப்பட்டது.
    • தற்போது அந்த பக்கம் துணைவேந்தர் பெயர், படம் இல்லாமல் வெற்றிடமாக உள்ளது.

    சின்னாளப்பட்டி:

    திண்டுக்கல்லை அடுத்துள்ள காந்திகிராம பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்த மாதேஷ்வரன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து பல்கலைக் கழக வேளாண்மைத் துறை மூத்த பேராசிரியர் ரங்கநாதன் பொறுப்பு துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.

    இதனிடையே பல்கலைக் கழகத்திற்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய பீகார் மத்திய பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் எச்.சி.எஸ்.ரத்தோர் தலைமையில் 3 பேர் கொண்ட தேடுதல் குழுவை மத்திய அரசு நியமனம் செய்தது.

    இந்நிலையில் காந்திகிராம பல்கலைக் கழகத்திற்கு மத்திய உயர்கல்வி அமைச்சகத்திடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் துணைவேந்தராக இருந்த மாதேஸ்வரன் ராஜினாமா செய்ததால் பொறுப்பு துணைவேந்தராக பல்கலைக்கழக மூத்த பேராசிரியர் ரங்கநாதன் நியமனம் செய்யப்பட்டார்.

    அவர் அந்த பொறுப்பிலிருந்து உடனடியாக விடுவிக்கப்படுகிறார். அடுத்து 6 மாத காலம் அல்லது புதிய துணைவேந்தரை நியமிக்கும் வரை காந்திகிராம பல்கலைக் கழகத்திற்கு பொறுப்பு துணைவேந்தராக புதுச்சேரி பல்கலைக் கழக துணைவேந்தர் குர்மித் சிங் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதனைதொடர்ந்து பொறுப்பு துணைவேந்தராக இருந்த ரங்கநாதன் உடனடியாக துணைவேந்தர் பொறுப்பில் இருந்து விலகினார்.

    காந்திகிராம பல்கலைக் கழக அதிகாரபூர்வ இணைய தள பக்கத்தில் இருந்தும் துணைவேந்தர் பெயர், படம் நீக்கப்பட்டது. தற்போது அந்த பக்கம் துணைவேந்தர் பெயர், படம் இல்லாமல் வெற்றிடமாக உள்ளது.

    இதனிடையே காந்திகிராம பல்கலைக் கழகத்தின் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களாக இருந்த பல்கலைக் கழக பேராசிரியர்கள் ஆனந்தகுமார் (தமிழ்துறை), வில்லியம் பாஸ்கரன் (சமூக அறிவியல் துறை), பாலசுந்தரி (ஆங்கில துறை) ஆகிய 3 பேரும் காந்திகிராம பல்கலைக் கழக சட்ட விதிமுறைகளின் படியும், பல்கலைக் கழக மானியக்குழு விதிமுறைகளின் படியும் பல்கலைக் கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமனம் செய்யும் வரை இதே பல்கலைக் கழகத்தில் உள்ள மூத்த பேராசிரியர் ஒருவரை தான் பொறுப்பு துணைவேந்தராக நியமிக்க வேண்டும் என்ற விதிமுறை மீறப்பட்டுள்ளதாக கூறி பல்கலைக் கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.

    இதனால் பல்கலைக் கழகத்தில் பரப்பரப்பு ஏற்பட்டு உள்ளது.

    ×