என் மலர்
நீங்கள் தேடியது "பாரம்பரிய மீனவர்கள்"
- குளச்சல் மீனவர் மாநாட்டில் தீர்மானம்
- மீனவர் மாநாடு குளச்சல் புனித காணிக்கை மாதா மண்டபத்தில் நடந்தது.
கன்னியாகுமரி:
குமரி மாவட்ட பாதர் தாமஸ் கொச்சேரி மீன் தொழிலாளர்கள் யூனியன் சார்பில் மீனவர் மாநாடு குளச்சல் புனித காணிக்கை மாதா மண்டபத்தில் நடந்தது. கோடிமுனை கிளை தலைவர் ரவி ரமேஷ் தலைமை தாங்கினார். குளச்சல் கிளை தலைவர் அமல்ராஜ் மாநாடு கொடி ஏற்றினார். வாணியக்குடி கிளை தலைவர் சிம்சன் வரவேற்று பேசினார்.
மாவட்ட தலைவர் அருட்பணி கிளாரட், நெய்தல் நிறுவனர் வக்கீல் ஜாண்சன், தென்னிந்திய மீனவர் நல சங்க தலைவர் பாரதி, கடல்சார் மக்கள் நல சங்கம் பிரவின் குமார், எச்.ஆர்.எல்.என்.அருண்காசி, தமிழ்நாடு தேசிய மீன் தொழிலாளர்கள் சங்கம் அருட்பணி சுசீலன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
தாமஸ் கொச்சேரி யூனியன் மாவட்ட பொருளாளர் சுரேஷ் மாநாட்டு தீர்மானங்கள் வாசித்தார்.மாநாட்டில் பாரம்பரிய மீனவர்கள் பழங்குடியினர் என்ற அங்கீகாரத்தை சட்ட பூர்வமாக்கிட மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க மத்திய, மாநில அரசுகளை கேட்பது என தீர்மானம் வலியுறுத்தப்பட்டது.
குளச்சல் பங்குத்தந்தை டைனிசியஸ், கடலோர அமைதி மற்றும் வளர்ச்சிக் குழு இயக்குனர் டங்ஸ்டன் மற்றும் மீனவர் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், மீனவர் அமைப்பு நிர்வாகிகள், நெய்தல் எழுத்தாளர்கள் உள்பட மீனவர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இயற்கை எய்திய உறுப்பினர்களின் உருவப்படம் திறக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அழிக்கல் கிளை செயலர் சோழன் நன்றி கூறினார்.