என் மலர்
நீங்கள் தேடியது "slug 243105"
- பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் முருகன் தலைமை தாங்கினார்.
- சிறப்பு அழைப்பாளராக தவமணி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி வாழ்த்தி பேசினார்.
கோவில்பட்டி:
பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நற்பணி மன்ற தலைவர் முருகன் தலைமை தாங்கினார். சிலம்ப பயிற்சி ஆசிரியர் சண்முகசுந்தர கணபதி, நகர்மன்ற உறுப்பினர் லவராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக 14 -வது வார்டு நகர் மன்ற உறுப்பினரும், தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாவட்ட துணை தலைவரும் பொறியாளருமான தவமணி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி வாழ்த்தி பேசினார்.
இதில் வட்டார ஒருங்கிணைப்பாளர் நிவேதா, குழந்தைகள் நலப் பணியாளர் சபீனா ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் தாஸ் நிஷா பேகம், மேற்பார்வையாளர்கள் அமுதம்மாள், பாலம்மாள், கனக லட்சுமி மற்றும் மன்ற ஆலோசகர் பாலமுருகன் மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.