என் மலர்
நீங்கள் தேடியது "கல்லுரி"
- முதல் நாளில், அடையாள அட்டை அணியாமல் வருவது உட்பட பல்வேறு நெறிமுறைகளை பின்பற்றாமல் கல்லூரிக்கு வந்த மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
- மாணவர்கள் கல்லூரிக்குள் நுழையும்போதே அனைத்தும் சோதனை செய்யப்பட்டது.
உடுமலை:
உடுமலை அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கியுள்ளன.இந்தநிலையில் மாணவர்கள் கல்லூரிக்கான நெறிமுறைகளை பின்பற்றுவதற்கு பேராசிரியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
முதல் நாளில், அடையாள அட்டை அணியாமல் வருவது உட்பட பல்வேறு நெறிமுறைகளை பின்பற்றாமல் கல்லூரிக்கு வந்த மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இது குறித்து பேராசிரியர்கள் கூறியதாவது:-
ஒரு வாரத்துக்கு முன்பாகவே மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தலைமுடியை ஒழுங்கான முறையில் திருத்திக்கொண்டு வருதல், ஆடை, அடையாள அட்டை அணிவது உள்ளிட்ட சில நெறிகள் கல்லூரி செயலி வாயிலாக, முதலாமாண்டு மாணவர்கள் உட்பட அனைவருக்கும் அனுப்பப்பட்டு பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. மாணவர்கள் கல்லூரிக்குள் நுழையும்போதே அனைத்தும் சோதனை செய்யப்பட்டது.
அதில் நெறிகளை பின்பற்றாமல் இருந்த 50 பேரிடம் அடையாள அட்டை பெறப்பட்டு, தலைமுடிகளை திருத்தி வரவும், முறையான ஆடை அணிந்து வருவதற்கும் அறிவுறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ஆதிதிராவிடர் பள்ளி, கல்லுரி விடுதிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
- இதில் தங்கி பயில விரும்பும் மாணவர்கள் சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளை அணுகலாம்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆதிதிராவிடர் நல பள்ளி மற்றும் கல்லுரி விடுதிகளுக்கான மாணவர்கள் சேர்க்கை புதியதாக இணைய வழியில் விண்ணப்பிக்கும் நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளதால் 2022-23-ம் கல்வியாண்டில் விருதுநகார் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் தங்கி கல்வி பயில விரும்பும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்
இதில் தங்கி பயில விரும்பும் மாணவர்கள் சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.