search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழனி ஆஸ்பத்திரியில் சிகிச்சை"

    • பழனயில் வினோத நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
    • வினோத நோய் பழனி ஆஸ்பத்திரியில் சிகிச்சை

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி டவுன் சண்முக புரத்தை சேர்ந்தவர் நாகேந்திரபிரசாத். இவரது மனைவி வேல்விழி (வயது39). கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் 2 குழந்தைகளுடன் வேல்விழி தனியாக வசித்து வருகிறார்.

    கடந்த 2017ம் ஆண்டு இவரது இடதுகால் மூட்டு அருகில் எலும்பு வீக்கம் ஏற்பட்டது. இதனால் அவரால் நடக்க முடிய வில்லை. மிகவும் சிரமப்பட்ட வேல்விழி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்ப ட்டார். இடுப்பில் இருந்து எலும்பு எடுத்து காலில் வைத்து அறுவை சிகிச்சை செய்தனர்.

    6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அதே பிரச்சினை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் இடுப்பில் இருந்து எலும்பு எடுத்து வைக்கப்பட்டது. ஆனால் சில நாட்கள் மட்டுமே சரியான நிலையில் மீண்டும் வேல்விழிக்கு எலும்பு வீக்கம் ஏற்பட்டு நடக்க முடியவில்லை. அவரை பரிசோதித்த டாக்டர்கள் முற்றிலும் குணமாக்குவது கடினம் என்று கூறி விட்டனர்.

    கணவர் இறந்து விட்ட நிலையில் காய்கறி வியா பாரம் பார்த்து வந்து தனது குழந்தைகளை வளர்த்து வந்துள்ளார். இதனிடையே குடும்பத்தை கவனிக்கவே போராட்டமாக மாறிவிட்ட நிலையில் தனது மருத்துவ செலவுகளை அவரால் மேற்கொள்ள முடிய வில்லை.

    எனவே தமிழக முதல்-அமைச்சருக்கு அவர் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், கணவர் இல்லாத சூழலில் எனது குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. ஆனால் எனது குழந்தை களுக்கே நான் பாரமாக உள்ளேன். எனக்கு சரியான சிகிச்சை அளிக்க தமிழக அரசு உதவ வேண்டும். இல்லையெனில் என்னை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என தெரி வித்தார்.

    இதனிடையே பழனி சப்-கலெக்டர் உதவியுடன் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பழனி அரசு ஆஸ்பத்திரியில் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ×