என் மலர்
முகப்பு » slug 243457
நீங்கள் தேடியது "மாடு முட்டி பலி"
- மேய்ந்து கொண்டிருந்த மாட்டை விரட்டியபோது விபரீதம்
- போலீசார் விசாரணை
வெம்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா மாத்தூர் கிராமம் பழைய வன்னியர் தெருவை சேர்ந்த பச்சையப்பன் 80. விவசாயி இவர் கடந்த 4. தேதி இவருடைய வாழை தோப்புக்கு சென்றார்.
அங்கு மாடு மேய்ந்து கொண்டிருந்தது. அதனை பச்சையப்பன் விரட்டினார். அப்போது பச்சையப்பனை மாடு முட்டியது. இதில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் மயங்கி விழுந்தார்.
அங்கு உள்ளவர்கள் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்து பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தூசி சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
×
X