என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தகவல் உரிமை சட்டம்"

    • பல துறைகளில் சரியாக பதில் கொடுக்காமல் காலம் கடத்தி வருகிறார்கள்.
    • உள்நோக்கத்தோடு சமாதானம் பேசி பதில் கொடுக்க சொல்கின்றார்கள்.

    வீரபாண்டி :

    நுகர்வோர் விழிப்புணர்வு பிரிவு திருப்பூர் மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ணசாமி திருப்பூர் கலெக்டரிடம் அளித்துள்ளமனுவில் கூறியிருப்பதாவது:-

    தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பொதுமக்கள் கேட்கும்கேள்விகளுக்கு 30 நாட்களுக்குள் பதில் தரவேண்டும். பல துறைகளில் சரியாக பதில் கொடுக்காமல் காலம் கடத்தி குழப்பமான பதிலை தருகின்றார்கள்.தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தாலும் வருடக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டு பொது தகவல் அலுவலரையும் மனு தாரர்களையும் நேரில் அழைத்து உள்நோக்கத்தோடு சமாதானம் பேசி பதில் கொடுக்க சொல்கின்றார்கள். மேலும் பதில் தராத பொது தகவல் அலுவலர் மீது சட்டப்படியான எந்த குற்றவியல் நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் தகவல் அறியும் ஆணைய கூட்டத்தை நடத்த வேண்டும் எனகூறப்பட்டுள்ளது. 

    • திருப்பத்தூர் மாவட்ட சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் நடந்தது
    • பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பத்தூர்:

    தகவல் பெறும் உரிமைச் சட்டம் பற்றிய பயிற்சி மற்றும் லஞ்சம் தராமல் அரசு சேவை பெறுவது எப்படி? என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பத்தூர் போஸ்கோ நகர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர் கே.தயாநிதி தலைமை வகித்தார்.

    பி.நலவேணி வரவேற்றார். சட்ட பஞ்சாயத்து இயக்க மாநில செயலாளர் கங்காதுரை, மாநிலத் துணைச் செயலாளர் கங்கா சேகர் ஆகியோர், பொதுமக்கள் தகவல் உரிமை பெறும் சட்டப் பயிற்சி மற்றும் பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு இணையதளம் மூலம் புகார் அளிப்பது, லஞ்சம் தராமல் அரசு சேவைகளை பெறுவது எப்படி, காவல்துறையை சட்டப்படி அணுகுவது, பொதுநல வழக்குகள் தொடுப்பது உள்ளிட்டவை பற்றி விளக்கினர்.

    நிகழ்ச்சியில் நகராட்சி கவுன்சிலர்கள் வினோதினி, சரவணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    ×