search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு"

    • ஜனவரி மாதத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 89 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
    • ஜூலை முதல் வாரத்தில் மட்டும் 13 பேருக்கு பாதிப்பு.

    ஓசூர், 

    ஓசூர் பகுதியில் மட்டும் கடந்த 2 மாதங்களில் மட்டும் 38 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஜூன் மாதத்தில் 25 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் இந்த மாதம் 13 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாக மருத்துவ துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை கெலமங்கலம் பகுதியில் 16 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    ஓசூர் பகுதியில் நோய் பாதிப்பை கண்டறிந்து பரவலை தடுக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:-

    அனைத்து பகுதிகளிலும் டெங்கு காய்ச்சலை கண்டறிந்து தடுக்கும் வகையில் கூடுதல் ஊழியர்களை நியமிக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

    ஓசூர் மாநகராட்சி ஆணையர் தரப்பில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கவில்லை.

    புதிய நகர் நல அலுவலர் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து நடவடிக்கை எடுத்து கண்காணிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    மருத்துவத்துறை உதவி இயக்குனர் வட்டாரத்தில் கூறுகையில் ஜனவரி மாதத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 89 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. தற்போது டெங்கு பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஏற்கனவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பும் அதிகரிப்பதாக வரும் தகவல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×