என் மலர்
நீங்கள் தேடியது "உத்தர பிரதேசம்"
- ஆக்ராவின் ஹிரியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தது.
- உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் பயணித்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலத்தின் முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் யோகி ஆதித்யநாத்.
இதற்கிடையே, மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்து 8 ஆண்டு நிறைவடைந்த நிலையில், நேற்று அரசு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆக்ராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று மாலை விமானம் மூலம் லக்னோ புறப்பட்டார்.
ஆக்ராவின் ஹிரியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தது. அப்போது விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் உடனடியாக ஹிரியா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அதன்பின், கோளாறு சரிசெய்யப்பட்டு சுமார் 2 மணிநேர தாமதத்திற்குபின் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அதே விமானத்தில் லக்னோ புறப்பட்டுச் சென்றார்.
விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டபோது முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உள்பட யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கிராமத்திற்குள் புகுந்த கொள்ளைக் கும்பல் 24 தலித்களை சுட்டுக்கொன்றது.
- 17 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் 13 பேர் மரணம் அடைந்தனர். ஒருவர் தலைமறைவானார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் கொள்ளை கும்பலால் ஒரு கிராமத்தில் 24 தலித் மக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 44 வருடங்கள் கழித்து 3 குற்றவாளிக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மெயின்பூரி மாவட்டத்தில் ஜேஸ்ரானா காவல் நிலையத்திற்கு உள்பட்ட திஹுலி கிராமத்தில் கடந்த 1981-ம் ஆண்டு நவம்பர் 18-ந்தேதி சந்தோஷா என அழைக்கப்படும் சந்தோஷ் சிங், ராதே என அழைக்கப்படும் ராதே ஷியாம் ஆகியோர் தலைமையில் கொள்ளை கும்பம் நுழைந்தது.
அந்த கிராமத்தைச் சேர்ந்த தலித் சமூகத்தினரைச் சேர்ந்த 24 பேரை ஈவு இரக்கமின்றி கொள்ளைக் கும்பல் சுட்டுக்கொன்றது. இதில் பெண்கள் குழந்தைகளும் அடங்குவர். சுட்டுக்கொன்றதுடன் அவர்களுடைய பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றது கொள்ளைக் கும்பல்.
இது தொடர்பாக லெய்க்சிங் என்பவர் 1981-ம் அணடு நவம்பர் மாதம் 19-ந்தேதி புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு சந்தோஷ் மற்றும் ராதே உள்பட 17 கொள்ளையர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது 17 குற்றவாளிகளில் 13 பேர் மரணமடைந்தனர். இதில் சந்தோஷ் மற்றும் ராதே ஆகியோரும் அடங்குவர்.
மீதமுள்ள 4 பேரில் ஒருவர் இன்னும் தலைமறைவாக உள்ளார். கப்தான் சிங், ராம் சேவக், ராம் பால் ஆகிய மூன்று பேர் வழக்கை சந்தித்து வந்தனர்.
இந்த நிலையில்தான் கப்தான் சிங், ராம் சேவக், ராம் பால் ஆகிய மூன்று பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் கடந்த 12ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. மார்ச் 18-ந்தேதி தண்டனை வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதன்படி நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. 3 பேருக்கு மரண தண்டனை வழங்கியதுடன், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கியது.
இந்த கொடூர சம்பவம் நடைபெற்ற கிராமத்திற்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். எதிர்க்கட்சி தலைவர் வாஜ்பாய், துக்கமடைந்த குடும்பங்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நடைபயணம் மேற்கொண்டார்.
- 1981-ஆம் ஆண்டு கொள்ளைக் கும்பல் 24 பேரை சுட்டுக்கொன்றது.
- இது தொடர்பாக பேர் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
உத்தர பிரதேச மாநிலத்தில் கொள்ளை கும்பலால் ஒரு கிராமத்தில் 24 தலித் மக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 44 வருடங்கள் கழித்து 3 பேர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மெயின்பூரி மாவட்டத்தில் ஜேஸ்ரானா காவல் நிலையத்திற்கு உள்பட்ட திஹுலி கிராமத்தில் கடந்த 1981-ம் ஆண்டு நவம்பர் 18-ந்தேதி சந்தோஷா என அழைக்கப்படும் சந்தோஷ் சிங், ராதே என அழைக்கப்படும் ராதே ஷியாம் ஆகியோர் தலைமையில் கொள்ளை கும்பம் நுழைந்தது.
அந்த கிராமத்தைச் சேர்ந்த தலித் சமூகத்தினரைச் சேர்ந்த 24 பேரை ஈவு இரக்கமின்றி கொள்ளைக் கும்பல் சுட்டுக்கொன்றது. இதில் பெண்கள் குழந்தைகளும் அடங்குவர். சட்டுக்கொன்றதுடன் அவருர்களுடைய பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றது.
இது தொடர்பாக லெய்க்சிங் என்பவர் 1981-ம் அணடு நவம்பர் மாத் 19-ந்தேதி புகார அளித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு சந்தோஷ் மற்றும் ராதே உள்பட 17 கொள்ளையர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது 17 குற்றவாளிகளில் 13 பேர் மரணமடைந்தனர். இதில் சந்தோஷ் மற்றும் ராதே ஆகியோரும் அடங்குவர்.
மீதமுள்ள 4 பேர் ஒருவர் இன்னும் தலைமறைவாக உள்ளார். கப்தான் சிங், ராம் சேவக், ராம் பால் ஆகிய மூன்று பேர் வழக்கை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான் கப்தான் சிங், ராம் சேவக், ராம் பால் ஆகிய மூன்று பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மார்ச் 18-ந்தேதி தண்டனை வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த கொடூர சம்பவம் நடைபெற்ற கிராமத்திற்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். எதிர்க்கட்சி தலைவர் வாஜ்பாய், துக்கமடைந்த குடும்பங்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நடைபயணம் மேற்கொண்டார்.
- ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தது உத்தர பிரதேச அரசு
- உயிரிழந்த 6 பேரில் 3 பேர் குழந்தைகள் என காவல்துறை தகவல்
ஃபிரோசாபாத்:
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் நகரில் வீட்டு உபயோகத்திற்கான எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பர்னிச்சர் பொருட்களை விற்கும் கடை செயல்பட்டு வந்துள்ளது. கடைக்கு மேலே உள்ள முதல் தளத்தில் உரிமையாளரின் குடும்பத்தினர் வசித்து வந்தனர். நேற்று இந்த கடையில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது.
இந்த தீ முதல் தளத்திற்கு வேகமாக பரவியது. ஆக்ரா, மெயின்புரி, எட்டா மற்றும் ஃபிரோசாபாத் ஆகிய இடங்களில் இருந்து 18 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. மேலும் 12 காவல் நிலையங்களைச் சேர்ந்த பணியாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இரண்டரை மணி நேரம் இந்த பணி நீடித்தது.
இந்த தீ விபத்தில் கடை உரிமையாளரின் வீடு எரிந்து நாசமானது. தீயில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிந்ததாக மூத்த காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் திவாரி தெரிவித்துள்ளார். தீக் காயங்களுடன் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் நெரிசல் நிறைந்த பகுதி என்பதால், மீட்பு பணியில் கூடுதல் முயற்சி மேற்கொள்ள வேண்டியிருந்ததாக ஆஷிஷ் திவாரி கூறியுள்ளார். தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்தார். மேலும் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
- பாதிக்கப்பட்ட நபர் தலித் சமூகத்தைச் சேர்ந்த ராஜேந்திரா என்பது தெரியவந்தது.
- மின்தடை தொடர்பான பிரச்சனையில் லைன்மேன் ராஜேந்திராவை தாக்கியதாக தகவல்.
உத்தர பிரதேச மாநிலத்தில் வாலிபர் ஒருவரை கடுமையாக தாக்கி செருப்பை நாக்கால் நக்க வைத்த கொடூர சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
அந்த வீடியோவில் ஒரு நபர், மரக்கட்டிலில் அமர்ந்தபடி காலை நீட்ட, அவரது செருப்பை ஒரு வாலிபர் நாக்கால் நக்கி சுத்தம் செய்யும் காட்சி இடம்பெற்றிருந்தது. அத்துடன், அந்த வாலிபர் காதை பிடித்துக்கொண்டு, தான் செய்தது தவறுதான் என கூறி தோப்புக் கரணம் போடுகிறார். இதேபோல் மற்றொரு வீடியோவில் அந்த நபர், வாலிபரின் கையை முறுக்கி கீழே தள்ளி கடுமையாக தாக்குவது பதிவாகியிருந்தது.
இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தின் சோனாபத்ரா மாவட்டத்தில் நடந்துள்ளது. வீடியோ வைரலான நிலையில் போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்துள்ளனர். விசாரணையில் அந்த நபர் மின்சாரத்துறையின் லைன்மேன் தேஜ்பாலி சிங் என்பதும், பாதிக்கப்பட்ட நபர் தலித் சமூகத்தைச் சேர்ந்த ராஜேந்திரா என்பதும் தெரியவந்தது. இதையடுத்து தேஜ்பாலி சிங் மீது எஸ்.சி.எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது.
ராஜேந்திராவின் தாய் மாமன் வீட்டில் மின்தடை ஏற்பட்டதாகவும், இதுதொடர்பாக பிரச்சனையில் லைன்மேன் ராஜேந்திராவை தாக்கியதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- சட்டசபை கூடும் காலம் 14 நாட்களில் இருந்து ஏழு நாட்களாக குறைப்பு
- சபாநாயகருக்கு முதுகு தெரியும்படி எந்த உறுப்பினரும் உட்காரவும், நிற்கவும் கூடாது
இந்தியாவிலேயே அதிக உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றமாக உத்தர பிரதேச மாநிலம் சட்டமன்றம் திகழ்கிறது. 403 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். உறுப்பினர்கள் செல்போன் பயன்படுத்துவதற்கு, பேப்பர்களை கிழிப்பதற்கு, சத்தமாக சிரிப்பதற்கு விரைவில் தடைவர இருக்கிறது.
இதற்கான புதிய விதிமுறைகள் நேற்றுமுன்தினம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதன்மீதான விவாதம் இன்று நடைபெற்று அதன்பின் நடைமுறைப்படுத்தப்படும்.
சபாநாயகருக்கு முதுகு தெரியும்படி எந்த உறுப்பினரும் உட்காரவும், நிற்கவும் கூடாது. உரை நிகழ்த்தும்போது கேலரில் உள்ள யாரையும் சுட்டிக்காட்டக் கூடாது. அதேபோல் பாராட்டக்கூடாது. புகைப்பிடிக்கக் கூடாது. சத்தமாக சிரிக்கக் கூடாது.
சட்டசபை கூடும் காலம் 14 நாட்களில் இருந்து ஏழு நாட்களாக குறைப்பு. உறுப்பினர்கள் எந்தவிதமான குறிப்புகளையும் எடுத்துச் செல்லக் கூடாது. சட்டமன்ற முதன்மை செயலகம் அன்றைய தினத்திற்குரிய பணிக்குறிப்புகளை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலமாக உறுப்பினர்களுக்கு கிடைக்கப்பெற செய்யும் போன்ற விதிமுறைகள் அதில் அடங்கியுள்ளன.
- இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- இந்த சம்பவம் தேவையில்லாமல் பெரிய பிரச்சினையாக மாற்றப்படுவதாக ஆசிரியை விளக்கம்.
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் ஹக்பர்பூர் கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு மாணவன் கணக்கு வாய்ப்பாடை மனப்பாடம் செய்து தவறாக கூறியதாலும், வீட்டுப் பாடத்தை எழுதாமல் வந்ததாலும் ஆசிரியை திருப்தி தியாகி சக மாணவர்களை அழைத்து மாணவன் கன்னத்தில் அறையும் படி கூறியுள்ளார். மேலும் மத ரீதியிலும் அந்த மாணவரை விமர்சித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்வை மாணவனின் உறவினர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டுப்பாடம் எழுதி வராத மாணவனை மதரீதியிலாக விமர்சித்து சக மாணவர்களை கொண்டு தாக்குதல் நடத்தியதாக ஆசிரியை திருப்தி தியாகி மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவனை தாக்கிய சம்பவம் தொடர்பாக சர்ச்சையில் சிக்கிய ஆசிரியை, "எனது தவறை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இதற்காக நான் வெட்கப்பட மாட்டேன். அந்த மாணவனை மத ரீதியில் துன்புறுத்த வேண்டும் என்பது என் நோக்கம் இல்லை. இந்த சம்பவம் தேவையில்லாமல் பெரிய பிரச்சினையாக மாற்றப்பட்டு இருக்கிறது," என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், மாணவன் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பள்ளி மீது விசாரணை நடத்தப்பட இருக்கிறது. இதன் காரணமாக பள்ளியை தற்காலிகமாக மூடுவதற்கு அம்மாநில பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. பள்ளி மூடப்படுவதை தொடர்ந்து, அப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் வேறு பள்ளியில் அனுமதிக்கப்படுவார்கள் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- வீட்டில் தங்கியிருந்தவர் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு ஆலையை நடத்தி வந்துள்ளார்.
- விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
உத்திர பிரதேச மாநிலத்தின் காசியாபாத் மாவட்டத்தை அடுத்த லோனி பகுதியில் இருந்த இரண்டு மாடிகள் கொண்ட வீட்டின் கட்டிடம் இடிந்து விழுந்ததில், மூன்று குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் ஏழு பேர் பலத்த காயமுற்றனர்.
இடிந்து விழுந்த வீட்டை அதன் உரிமையாளர் வாடகைக்கு விட்டிருந்ததாக தெரிகிறது. வீட்டில் வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தவர், அதில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு ஆலையை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட விபத்து காரணமாகவே வீடு இடிந்து விழுந்துள்ளது.
குடியிருப்பு பகுதியில் வீடு இடிந்து விழுந்த சத்தத்தை கேட்டு அங்கு விரைந்த அக்கம்பக்கத்தினர், இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த போலீசாருடன், தேசிய பேரிடர் மீட்பு படையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
நான்கு மணி நேர போராட்டத்திற்கு பிறகு, மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த ஏழு பேரை மீட்டனர். மீட்கப்பட்ட ஏழு பேரும் கடுமையாக காயமுற்றனர் என்று காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
- ரெயில் விபத்து பற்றிய சி.சி.டி.வி. வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
- இந்த சம்பவம் தொடர்பாக உயர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் மின்சார ரெயில் பிளாட்ஃபாரத்தின் மீது ஏறி நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும், ரெயில் விபத்துக்கான காரணம் பற்றிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ரெயில் விபத்து பற்றிய சி.சி.டி.வி. வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. அதன்படி ரெயிலை இயக்கி வந்த லோக்கோ பைலட், ஒருகட்டத்தில் ரெயிலை நிறுத்திவிட்டு அதில் இருந்து வெளியேறுகிறார். அவர் வெளியேறியதும், சில நொடிகளில் மற்றொரு லோக்கோ பைலட் ரெயிலில் ஏறுகிறார்.
ஏறும் போதே தனது மொபைல் போனில் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த அவர் உள்ளே நுழைந்ததும், கதவை இழுத்து மூடினார். பிறகு, உள்ளே வந்த அவர் தனது பையை ரெயிலை இயக்கும் ஸ்விட்ச் மீது வைத்து, தொடர்ச்சியாக மொபைல் போனை பயன்படுத்துகிறார். இந்த சூழலில் தான் திடீரென ரெயில் வேகமெடுத்தது.
உடனே சுதாரித்துக் கொண்ட அவர் ரெயிலை நிறுத்தும் முன்பு அது, பிளாட்ஃபாரத்தின் மீது ஏறியது. இதனாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உயர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. மேலும் ஐந்து பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என்று ரெயில்வே மேலாளர் தேஜ் பிரகாஷ் தெரிவித்து உள்ளார்.
- அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடக்கிறது.
- ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைக்கு ஆயிரக்கணக்கான பரிசு பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.
உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜன.22-ம் தேதி நடைபெறவுள்ளது. கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் பரிசுப் பொருட்களை அனுப்பி வருகின்றனர்.
ராமர் கோவில் கட்டுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைக்கு ஆயிரக்கணக்கான பரிசு பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது.குறிப்பாக, சீதையின் பிறந்த மண்ணாக கருதப்படும் நேபாளத்தின் ஜனக்புரி ஜானகி கோயிலில் இருந்து 30 வாகனங்களில் 3,000 வகை பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் தங்கம், வெள்ளியில் தயாரான பாதுகைகள், கண்கவர் துணிகள், ஆபரணங்கள் உள்ளன.
சீதை சிறை வைக்கப்பட்டதாக குறிப்பிடப்படும் இலங்கையில் இருந்து பெரிய வடிவிலான பாறை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பாறையில் சீதை சிறை வைக்கப்பட்ட காட்சிகள் ஓவியமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. குஜராத்தின் வதோதராவில் இருந்து 108 அடி நீளத்தில் தூபம் போடுவதற்கான குச்சிகள் வந்துள்ளன. தூபம் போடும்போது எழும் புகையால் சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் இந்த குச்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. குஜராத் பாஜக அரசு சார்பில் 44 அடி உயர பித்தளை கொடிக் கம்பம், 6 சிறிய கொடிக் கம்பங்கள் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் அலிகர் அருகிலுள்ள எட்டாவில் இருந்து 2 ஆயிரத்து 100 கிலோ எடைகொண்ட ராட்சத கோயில் மணி தயாரிக்கப்பட்டு, அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தலைநகர் லக்னோவில் இருந்து அலோக்குமார் சாஹு என்ற காய்கறி வியாபாரி வித்தியாசமான கடிகாரம் அனுப்பி உள்ளார். அயோத்திக்காக 2018-ல்தயாரித்த இந்தக் கடிகாரத்திற்கு அலோக் குமார், இந்திய அரசின் காப்புரிமையை பெற்றுள்ளார். சூரத் வைர வியாபாரி ஒருவர் 5 ஆயிரம் அமெரிக்க வைரங்கள் பதிக்கப்பட்ட ராமர் கோவில் வடிவிலான வெள்ளி ஆபரணத்தை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்திருந்த உத்தராயணி கவுதிக் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் ஏதேனும் ஒரு மாநிலம் முதலிடம் பெறப்போகிறது என்றால் அது உத்தரகாண்டாக தான் இருக்கும் என நான் நினைக்கிறேன் என்றார்.
2022ம் ஆண்டு நடைபெற்ற மாநில சட்டமன்ற தேர்தலின்போது பாஜக அளித்த முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று பொது சிவில் சட்டம். உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, தனது தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே பொது சிவில் சட்டம் உருவாக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன பிரகாஷ் தேசாய் தலைமையிலான ஒரு குழுவை அமைத்து ஒப்புதல் அளித்தார்.
கடந்த 5 ஆண்டுகளில் உத்தரகாண்ட் மாநிலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் இடையேயான உறவுகளைப் பற்றி குறிப்பிட்ட அவர், ஆந்திராவில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்ட பிறகு இரு மாநிலங்களுக்கும் இடையே தீர்க்கப்படாத பல பிரச்னைகள் இருந்து வருகிறது. ஆனால் உத்தரபிரதேசம் பிரிக்கப்பட்ட பிறகு, இதுபோன்ற பிரச்னைகள் நடக்கவில்லை என்றார்.
உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் இடையேயான உறவு வலுவாக உள்ளதாக தெரிவித்த அமைச்சர் ராஜ்நாத் சிங், இரு மாநிலங்களிலும் வசிக்கும் மக்களுக்கு இடையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லாமல் உறவுகள் வலுபெற்று வருகிறது என்றார்.
- ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
- 55 நாடுகளை சேர்ந்த 100 தலைவர்களுக்கு ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள அழைப்பு
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா, வரும் 22-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது. இதில் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு குறித்து உலக இந்து அறக்கட்டளை அமைப்பின் தலைவர் சுவாமி விக்யானந்த் கூறியதாவது,
தூதர்கள் உட்பட 55 நாடுகளை சேர்ந்த 100 தலைவர்களுக்கு ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளோம். பிரபு ராம்வம்சத்தை சேர்ந்த கொரிய ராணிக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, ரொமினிகா, எகிப்து, எத்தியோப்பியா, பிஜி, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட 55 நாடுகளை சேர்ந்த தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வரும் தலைவர்கள் லக்னோவிற்கு ஜன.20 - ஆம் தேதி வரவுள்ளனர். 21-ஆம் தேதி மாலை அவர்கள் அயோத்தி வந்தடைவர். உலக நாடுகளின் தலைவர்கள் பலருக்கு அழைப்பு விடுக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் இடம் சிறியதாக இருப்பதால் விருந்தினர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.