என் மலர்
நீங்கள் தேடியது "காவலர்"
- வாடிப்பட்டி போலீஸ் நிலையத்தில் தேசியகாவலர்தியாகதினம் அனுசரிக்கப்பட்டது.
- இன்ஸ்பெக்டர் நித்யப்ரியா தலைமை தாங்கினார்.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி போலீஸ் நிலையத்தில் தேசியகாவலர்தியாகதினம் அனுசரிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் நித்யப்ரியா தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், இந்தியாவில் 1959-ம்ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந்தேதி இந்திய-சீனா எல்லையான லடாக்கில் நடந்த மோதலில் இந்திய எல்லைப் பாதுகாப்பு காவலர்கள் 10 பேர் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தனர். அதனால் அக்டோபர் 21-ந்தேதி தேசியகாவலர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
காவலர்களின் பணி, செயல்பாடு, தினசரி கடமைகள், வழக்குப்பதிவுசெய்யும்முறை, விசாரணை, புலனாய்வு, குற்றசெயல்பாடுகளை கண்டறியும் தன்மை, போதைதடுப்பு, சட்ட விதிகளை பின்பற்றும்வழிமுறைகள் பற்றி விளக்கினார். சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், வாண்டையார், (பயிற்சி) சக்தி கணேஷ், உடற்கல்வி ஆசிரியர்கள் சுரேஷ், ஸ்டாலின் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிமாணவர்கள் கலந்துகொண்டனர்.
எழுத்தர் நாகராஜன் நன்றி கூறினார். முன்னதாக வாடிப்பட்டி காவல்நிலையத்தில் பணியின் போது கடந்தஆண்டு இறந்த போலீஸ்காரர் கச்சைகட்டி மகேந்திரன் படத்திற்கு மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
- காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
- கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மரியாதை செலுத்தினர்
பெரம்பலூர்
கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ந்தேதி லடாக் பகுதியில் ஹாட் பிரிங்ஸ் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர். கடல் மட்டத்திலிருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில் வீரமரணம் அடைந்த அந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையிலும் மற்றும் பணியின்போது வீர மரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந்தேதி காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று காலை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே தண்ணீர்பந்தலில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீர வணக்கம் நாள் போலீசார் சார்பில் அனுசரிக்கப்பட்டது.
அப்போது மைதானத்தில் உள்ள காவலர் நினைவு தூணில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி, மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையர்கண்ணி, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, மாவட்ட வன அலுவலர் குகனேஷ், மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா, பெரம்பலூர் சிறை துணை சூப்பிரண்டு சிவா, அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அர்ஜூனன் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
- காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது
- எஸ்.பி. மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்
அரியலூர்
அரியலூர் மாவட்ட ஆயதப் படை மைதானத்திலுள்ள நீத்தார் நினைவுத் தூணில், வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
ராணுவம் மற்றும் காவல் துறை உள்ளிட்ட காவல் படைகளில் பணியாற்றி வீரமரணம் அடைந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அக்.21 ஆம் தேதி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆளிநர்கள் 63 குண்டுகள் முழங்க அங்குள்ள நீத்தார் நினைவு தூணில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இவரைத் தொடர்ந்து, ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் மணவாளன், ஆய்வாளர பத்மநாபன், மாவட்ட மதுவிலக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் காமராஜர், அரியலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ், மாவட்ட குற்ற ஆவணக் காப்பாளர் சுரேஷ் மற்றும் அரியலூர், கீழப்பழுவூர், கயர்லாபாத் காவல் நிலைய ஆய்வாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
- 2-ம் நிலை காவலர் பணிக்கு முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
- தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள், www.tnusrb.tn.gov.in
மதுரை
மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 2-ம் நிலை காவலர், 2-ம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரர்களுக்கு 5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இந்த பணியிடத்திற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 47 வயதுக்கு மிகாமல் உள்ள முன்னாள் ராணுவத்தினர் ராணுவப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட தேதியில் இருந்து 3 ஆண்டுகள் நிறைவு செய்யாதவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் பணியில் உள்ள ராணுவத்தினர் விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியில் இருந்து ஓராண்டு காலத்திற்குள் விடுவிக்கப்படுபவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள், www.tnusrb.tn.gov. என்ற இணையதள முகவரியில் 7.7.2022 முதல் 15.8.2022-க்குள் விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.