என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தடுப்பு கட்டை"
கடலூர்:
கடலூர் திருப்பாதிரி ப்புலியூர் ெரயில் நிலையம் அருகே குப்பன் குளம் பகுதி உள்ளது.இந்த பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ெரயில் நிலையம் மேம்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இதனை தொடர்ந்து இன்று காலை ெரயில் நிலையம் ஓரமாக தடுப்பு கட்டை அமைக்கும் நடவடிக்கையாக முதற்கட்டமாக பலகை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
இதனை பார்த்த குப்பன் குளம் சேர்ந்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ெரயில்வே நிர்வாகம் சார்பில் நடைபெற்று வரும் பணியை தடுத்து நிறுத்த திரண்டு வந்தனர். இத்தகவல் அறிந்த மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா, கவுன்சிலர் தஷ்ணா, அ.தி.மு.க.நிர்வாகி நாகராஜன் மற்றும் பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டனர். இதனை தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்த நிலையில் ெரயில் நிலைய அதிகாரிகள் பிரபாகரன் மற்றும் வாசுதேவன் ஆகியோர் மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா மற்றும் திரண்டு இருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அப்போது பொதுமக்கள் பேசுகையில், குப்பன் குளம் பகுதியில் நூற்றுக்க ணக்கான குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றோம். மேலும் இவ்வழியாக தான் கார், ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறை வாகனம் போன்றவற்றை வந்து செல்கின்றன. தற்போது திடீரென்று ெரயில்வே நிர்வாகம் தடுப்பு கட்டை அமைத்தால் எந்த வாகனமும் குப்பன் குளத்திற்கு வர முடியாத அவல நிலை ஏற்படும். ஆகையால் அனைத்து வாகனங்களும் வந்து செல்லும் நடவடிக்கையாக இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ெரயில்வே துறை அதிகாரிகள் இது சம்பந்தமாக உயர் அதிகாரியிடம் கலந்து ஆலோசித்து பதில் தெரிவிக்கின்றோம் என உத்தரவாதம் அளித்தனர். அதன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
- கட்டை மற்றும் கற்களை கொண்டு எந்த வாகனமும் செல்லாத வகையில் மறித்துக் கொண்டிருந்தார்.
- எந்த பஸ்சும் நிற்கவில்லை என்பதால் குடிபோதையில் இது போன்ற நடவடிக்கை யில் ஈடுபட்டது தெரிய வந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக்குப்பம் பகுதியில் வாலிபர் ஒருவர் நேற்று நள்ளிரவு சாலையின் குறுக்கே இரும்பு தடுப்பு கட்டை மற்றும் கற்களை கொண்டு எந்த வாகனமும் செல்லாத வகையில் மறித்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் வாகன ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உடனடியாக அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினார்.அவர் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்த கோபிநாத் (வயது) 27 என்பது தெரியவந்தது. தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வரும் அவர் முத்தாண்டிக் குப்பத்தில் தனது நண்பரின் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளார். பின்னர் தனது ஊருக்கு செல்வதற்காக இந்த பகுதியில் நின்று கொண்டிருந்தபோது எந்த பஸ்சும் நிற்கவில்லை என்பதால் குடிபோதையில் இது போன்ற நடவடிக்கை யில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பேராசிரியர் கோபிநாத்தை எச்சரிக்கை செய்து அறிவுரை வழங்கி இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என தெரிவித்தார். பின்னர் சப் இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் போலீசாரை அழைத்து பேராசிரியர் கோபிநாத்தை பாதுகாப்பாக தஞ்சாவூர் செல்லும் பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இருந்து வருகின்றது.
- ஒரு சில இடங்களில் உள்ளே இருக்கும் கம்பிகள் முழுவதும் வெளியே தெரிந்த வண்ணம் உள்ளது.
கடலூர்:
கடலூர் கம்மியம்பேட்டை சாலையில் கெடிலம் ஆறு உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று செல்கிறது. இந்த பாலம் வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் கடலூர் மாநகரத்திற்குள் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் கடலூர் செம்மண்டலம் மற்றும் கடலூர் ஜவான்பவன் சாலை வழியாக அனைத்து கனரக வாகனங்களும் இந்த பாலம் வழியாக தான் சென்று வருகின்றது. இதன் காரணமாக இவ்வழியாக 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இருந்து வருகின்றது. இந்நிலையில் இந்த பாலமானது கம்மியம்பேட்டை பாலத்தின் இருபுறமும் விபத்து ஏற்படாத வகையில் சிமெண்ட் தடுப்பு கட்டைகள் அமைத்து இருந்தன.
ஆனால் தற்போது சிமெண்ட் கட்டைகள் பெயர்ந்து வருகின்றது. மேலும் கனரக வாகனங்கள் செல்லும் போது அதிகமான அதிர்வுகள் ஏற்படுவதால் சிமெண்ட் காரைகள் சாலையில் விழுந்தும், பல இடங்களில் விரிசல் ஏற்பட்டும், ஒரு சில இடங்களில் உள்ளே இருக்கும் கம்பிகள் முழுவதும் வெளியே தெரிந்த வண்ணம் உள்ளது. இதனால் ெபரிய அளவிலான விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள், சமூக அலுவலர்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே பெரிய அளவிளான சேதம் ஏற்படும் முன்னர் அதிகாரிகள் இதில் தலையிட்டு பாலத்தின் சிமெண்ட் தடுப்பு கட்டைகளை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
- எதிர்பாராதவிதாக இருசக்கர வாகனம் சாலையின் தடுப்புச்சுவரில் மோதியது.
- ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்-மரக்காணம் சாலையில் உள்ள காந்தி நகர் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் பிரபுகுமார். இவரது மகன் அபிஷேக் (வயது 30). இவர் இன்று அதிகாலை திண்டிவனம்-புதுவை நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கீழ்கூத்த ப்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதாக இருசக்கர வாகனம் சாலையின் தடுப்புச்சுவரில் மோதியது.
இதில் அபிஷேக் தூக்கி வீசப்பட்டார். அவருக்கு தலையில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த கிளியனூர் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அபிஷேக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
- தனது நண்பரை புளியங்குடி கிராமத்தில் விட மோட்டார் சைக்கிளில் சென்றார்.
- சாலையோரம் இருந்த கட்டையில் மோதி வாலிபர் இறந்தார்.
கடலூர்:
சிதம்பரம் மீன் மார்க்கெட் வீதியில் வசிப்பவர் ஜனார்த்தனன் என்பவரது மகன் சந்தோஷ்குமார் (வயது 28). இன்று அதிகாலை தனது நண்பரை புளியங்குடி கிராமத்தில் விட மோட்டார் சைக்கிளில் சென்றார். நண்பரை இறக்கி விட்டு வீடு திரும்பினார். அப்போது பனி ப்பொழிவு அதிகமாக இருந்தது. இதனால் குச்சிப்பாளையம் அருகேமோட்டார் சைக்கிளில் வந்தபோது சாலையோரமிருந்த குடிநீர் குழாய் கட்டையில் மோதினார். இதில் மார்புப் பகுதியில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சாலையில் சென்றவர்கள் கொடுத்த தகவலின்படி, சம்பவ இடத்திற்கு விரைந்த சிதம்பரம் தாலுக்கா போலீசார் உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடும் பனிப்பொழிவால் சாலையோரம் இருந்த கட்டையில் மோதி வாலிபர் இறந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
- விழுப்புரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தடுப்பு கட்டை அமைக்கும் பணியில் போக்குவரத்து போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
- அதிநவீன பிளக்ஸ் புல் ஸ்பிரிங் தடுப்பு கட்டை அமைக்கும் பணியை நகர போக்குவரத்து காவல்துறை அமைத்துள்ளனர்.
விழுப்புரம்:
விழுப்புரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பிளக்ஸ் புல் ஸ்பிரிங் தடுப்பு கட்டை அமைக்கும் பணியை போக்குவரத்து போலீசார் தீவிரப் படுத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீ நாதா அறிவுறுத்தலின்படி விழுப்புரம் டி.எஸ்.பி பார்த்திபன் மேற்பார்வையில், விழுப்புரம் நகரில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையில், நகரின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க விழுப்புரம் -புதுவை சாலை காந்தி சிலையிலிருந்து பாணாம் பட்டு பாதை செல்லும் வரை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வாகனங்களில் நெரிசல் ஏற்படுகிறது.
இதனை ஒழுங்குபடுத்தும் நோக்கத்துடன் முதற் கட்டமாக விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு சாலை பானம்பட்டு பிரிவு மற்றும் ஹவுசிங் போர்டு சாலை சந்திக்கும் இடத்தில் மாவட்ட காவல்துறை, விழுப்புரம் நகர போக்குவரத்து காவல்துறை மற்றும் ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்து அதிநவீன பிளக்ஸ் புல் ஸ்பிரிங் தடுப்பு கட்டை அமைக்கும் பணியை நகர போக்குவரத்து காவல்துறை அமைத்துள்ளனர். இந்த தடுப்பு கட்டையில் ஒளி பிரதிபலிப்பு உள்ளதால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு வசதியாக உள்ளது. தடுப்பு கட்டையின் மீது வாகனங்கள் மோதினாலும் எந்தவித சேதமும் ஏற்படாது. தடுப்பு கட்டை அமைக்கப்பட்டுள்ள இந்த இடம் அடிக்கடி விபத்துக்குள்ளான இடம். தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டதை பொது மக்களும் வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் வெகுவாக நேரடியாகவும் வலைத்தளங்கள் மூலமாகவும் போக்குவரத்து போலீசாரை பாராட்டி வருகின்றனர்.
இது சம்பந்தமாக போக்குவரத்து காவல்துறையைச் சேர்ந்த உயர்அதிகாரி ஒருவரிடம் கேட்ட பொழுது மிக விரைவில் புதுவை-விழுப்புரம் மாதா கோயில் பஸ் நிறுத்தத்தில் இருந்து காந்தி சிலை வரை மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட எஸ்.பி ஏற்பாட்டின் பேரில் இன்னும் 2 வாரத்திற்குள் அதிநவீன பிளக்ஸ் புல் ஸ்பிரிங் தடுப்பு கட்டை அமைக்கும் பணி தொடங் கப்பட உள்ளது.மேலும் இதனால் போக்குவரத்து நெரிச்சல் மிக விரைவில் குறைய வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்