என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நில ஆவணங்கள்"
- நில ஆவணங்களில் உள்ள முக்கிய பிரச்சினைகளில் ஒன்று, மொழி.
- இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன.
புதுடெல்லி:
நிலங்களின் உரிமை சார்ந்த பத்திரங்களை படிப்பதில் மொழி சார்ந்த தடைகளை பலரும் அனுபவித்து வருகின்றனர். எடுத்துக்காட்டாக, டெல்லியை சேர்ந்த ஒருவர் கர்நாடகாவில் ஒரு சிறிய விவசாய நிலம் வாங்கினால், கன்னட மொழியில் இருக்கும் நிலப்பத்திரத்தை அவரால் புரிந்துகொள்ள முடிவதில்லை. இதைப்போல பலரும் நிலப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை படிப்பதில் மொழி ஒரு தடையாக இருந்து வருகிறது. இந்த பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. அந்தவகையில் நிலத்தின் உரிமைகள் பதிவு ஆவணத்தை (ஆர்.ஓ.ஆர்) பிராந்திய மொழிகள் உள்பட 22 மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.
இந்த ஆர்.ஓ.ஆர். என்பது நிலத்தின் இருப்பிடம், மொத்த அளவு, நிலத்தின் மீதான உரிமைகளை பெற்றுள்ள அனைத்து நபர்களின் பெயர், ஒவ்வொருவரின் உரிமைகளின் வரம்பு மற்றும் தன்மை, நிலம் மீதான கடன், வில்லங்கம், நிலத்தின் வகைப்பாடு, வாடகை அல்லது வருவாய் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அடங்கிய தொகுப்பு ஆகும்.
இது தொடர்பாக மத்திய நில வளங்கள்துறை இணை செயலாளர் சோன்மணி போரா பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நில ஆவணங்களில் உள்ள முக்கிய பிரச்சினைகளில் ஒன்று, மொழி. இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன. அதன் அடிப்படையில் ஆர்.ஓ.ஆர். ஆவணத்தை மொழிபெயர்க்க முயற்சிக்கிறோம்.
இது தொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி, மகாராஷ்டிரா, பீகார், குஜராத் உள்ளிட்ட 8 மாநிலங்களில் ஏற்கனவே நாங்கள் சோதனை நடத்தி உள்ளோம். இது தொடர்பாக ஒரு சாப்ட்வேர் தயாராக உள்ளது. இதை நாங்கள் எந்த நேரத்திலும் வெளியிடுவோம்.
நில ஆவணங்களை 22 மொழிகளில் மொழிபெயர்ப்பது ஒரே நேரத்தில் நடக்காது. முதலில் ஆங்கிலம், இந்தி மற்றும் மாநில மொழி ஆகிய 3 மொழிகளிலும், 3 விருப்ப மொழிகளிலும் மொழி பெயர்க்குமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மாநில அரசுகள் தங்கள் தேவைக்கேற்ப இந்த விருப்ப மொழிகளை தேர்வு செய்யலாம்.
இது நில ஆவணங்களில் உள்ள மொழித்தடையை உடைக்கும். இந்த பல மொழி ஆர்.ஓ.ஆர்.களின் லட்சிய திட்டம் ரூ.11 கோடி செலவில் மேற்கொள்ளப்படுகிறது. இதை ஒரு வருடத்தில் முடிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆர்.ஓ.ஆர்-ன் அமைப்பு மற்றும் அது வழங்கும் தகவல்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்.
இவ்வாறு சோன்மணி போரா தெரிவித்தார்.
- நிலம் தொடர்பான ஆவணங்கள் கம்ப்யூட்டர் மயம் ஆக்கப்பட்டாலும், இதுவரை வழங்கிய பட்டா உத்தரவுகள் காகித வடிவிலேயே இருக்கின்றன.
- பயனாளிகள் விபரத்தை சேகரித்து இ - பட்டா வழங்கும் ஆயத்த பணி துவங்கியுள்ளது.
திருப்பூர்:
டிஜிட்டல் இந்தியா திட்ட வழிகாட்டுதலை பின்பற்றி, நில ஆவணங்களையும் கம்ப்யூட்டர் மயமாக்க அரசு திட்டமிட்டுள்ளது.நிலம் தொடர்பான ஆவணங்கள் கம்ப்யூட்டர் மயம் ஆக்கப்பட்டாலும், இதுவரை வழங்கிய பட்டா உத்தரவுகள் காகித வடிவிலேயே இருக்கின்றன.
எனவே நிலஆவணங்களை கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்து இ - பட்டா வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.முதல் கட்டமாக ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் வழங்கிய இலவச வீட்டுமனை பட்டா ஆவணங்கள் அனைத்தும் இ - பட்டாவாக, அப்டேட் செய்யும் பணி துவங்கியுள்ளது.இதனால் காகித வடிவ பட்டாவை பாதுகாக்க சிரமப்படாது. தேவைப்படும் போது கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்ய முடியும்.
இது குறித்து திருப்பூர் வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பயனாளிகள் விபரத்தை சேகரித்து இ - பட்டா வழங்கும் ஆயத்த பணி துவங்கியுள்ளது. பட்டாவில் உள்ள வழக்கமான விபரங்களுடன், ஆதார் உள்ளிட்ட பயனாளிகளின் கூடுதல் விபரத்தை இணைக்கவும் திட்டமிட்டுள்ளோம்.மாவட்டம் வாரியாக இ - பட்டா வழங்க அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவு இ - பட்டா பதிவேற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இ - சேவை மையத்தில் சான்றிதழ் வழங்குவது போல வருங்காலத்தில் இ - பட்டாவும் எளிதாக கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- வருடத்தில் 3 தவணைகளாக தலா ரூ. 2ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.6ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
- ஆவணங்களை சரிபார்ப்பு பணிகளை வரும் 31-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
மூலனூர் :
மூலனூர் வேளாண்மை உதவி இயக்குனர் நிர்மலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- பாரத பிரதமரின் விவசாயிகளுக்கான கவுரவ ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் வருடத்தில் 3 தவணைகளாக தலா ரூ. 2ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.6ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. மூலனூர் வட்டாரத்தில் 5 ஆயிரம் விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். இந்த ஆண்டு மே மாதம் வரை பயனாளிகளில் வங்கிக் கணக்கில் தொகை செலுத்தப்பட்டுள்ளது.
ஆகவே விவசாயிகள் தங்களின் நில உடமைகளுக்கான பட்டா, சிட்டா, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் ஆகிய கிராமத்திற்கு சரிபார்ப்பு பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களை சந்தித்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இதில் மூலனூர் எடைக்கல்பாடி மற்றும் தூரம்பாடி வருவாய் கிராமங்களுக்கு சசிகுமார், கிளாங்குன்டல், குமாரபாளையம் கிராமங்களுக்கு தேசிங்கு, பொன்னிவாடி, பெரமியம், வெள்ளவாவிபுதூர் வருவாய் கிராமங்களுக்கு பாலசுப்பிரமணி, கன்னிவாடி, எரசினம் பாளையம், முளையாம்பூண்டி ,சேனாபதி பாளையம், தட்டாரவலசு வருவாய் கிராமங்களுக்கு வெங்கடேஷ், அரிக்கரன் வலசு, நஞ்சை தலையூர் ,புஞ்சை தலையூர் வருவாய் கிராமங்களுக்கு குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காளிபாளையம் வருவாய் கிராமத்திற்கு செல்வராஜ், சின்னமருதூர் வருவாய் கிராமத்திற்கு அப்துல் ஜலீல் ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆகவே அந்தந்த கிராம விவசாயிகள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட அலுவலர்களை சந்தித்து ஆவணங்களை சரிபார்ப்பு பணிகளை வரும் 31-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- வருடத்தில் 3 தவணைகளாக தலா ரூ.2ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
- இந்த ஆண்டு மே மாதம் வரை பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு தொகை செலுத்தப்பட்டுள்ளது.
வெள்ளகோவில் :
விவசாயிகள் ஊக்கத்தொகை பெற நில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று வேளாண்மை உதவி இயக்குனர் அறிவித்துள்ளார்.இதுகுறித்து வெள்ளகோவில் வேளாண்மை உதவி இயக்குனர் ஆர்.பொன்னுசாமி கூறியிருப்பதாவது:-
பாரத பிரதமரின் விவசாயிகளுக்கான கவுரவ ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் வருடத்தில் 3 தவணைகளாக தலா ரூ.2ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
வெள்ளகோவில் வட்டாரத்தில் இத்திட்டத்தில் 3,920 விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இந்த ஆண்டு மே மாதம் வரை பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு தொகை செலுத்தப்பட்டுள்ளது.இனி வரும் காலங்களில் அடுத்த தவணை வழங்க பயனாளிகளின் நில உடைமைகளை சரிபார்க்க அரசு அறிவிக்கப்பட்டு அதற்குண்டான விவசாயிகளின் பட்டியலை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சரிபார்ப்பு பணிகள் முடிந்த பின்னரே அடுத்த தவணை வழங்கப்பட உள்ளது.
ஆகவே விவசாயிகள் தங்களின் நில உடமைக்கான பட்டா, சிட்டா, ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் ஆகிய ஆவணங்களை தங்களின் கிராமத்திற்கு சரிபார்ப்பு பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களை ஆவணங்களுடன் சந்தித்து சரிபார்ப்பு பணியினை பதிவேற்றம் செய்த வேண்டும்.
வெள்ளகோவில் வருவாய் கிராமத்திற்கு கார்த்தி, முத்தூர் மற்றும் வள்ளியரச்சல் வருவாய் கிராமங்களுக்கு சத்திய நாராயணன், சேனாபதிபாளையம் மற்றும் உத்தமபாளையம் கிராமங்களுக்கு லோகநாதன், புதுப்பை மற்றும் கம்பளியம்பட்டி கிராமங்களுக்கு சுரேஷ்பாபு, இலக்கமநாயக்கன்பட்டி கிராமத்திற்கு கிருபானந்தன், சின்னமுத்தூர் மற்றும் ஊடையும் கிராமங்களுக்கு தீனா, வீரசோழபுரம் மற்றும் பச்சாபாளையம் கிராமங்களுக்கு ஹரிதாஸ், மங்களப்பட்டி, மேட்டுப்பாளையம், பூமாண்டன்வலசு கிராமங்களுக்கு அனுசபர்மதி, ராசாத்தா வலசு, வேலம்பாளையம் கிராமங்களுக்கு கார்த்திக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஆகவே அந்தந்த கிராம விவசாயிகள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட அலுவலர்களை சந்தித்து ஆவணங்கள் சரிபார்ப்பு பணியை 31-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்