search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உணவு பொருட்கள். பார்சல்"

    • அதிகாரிகள் சாலையோர பழக்கடைகள் முதல் டீ கடை, வணிக வளாகங்கள் உள்ளிட்ட கடைகளில் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கடைக்கு வரும் உணவு பார்சல் வாங்க வருகை தரும் வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்து பாத்திரம் மற்றும் பைகளை கையோடு எடுத்து வருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

    திருச்சி:

    திருச்சி மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பைகளை ஒழிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக அதிகாரிகள் சாலையோர பழக்கடைகள் முதல் டீ கடை, வணிக வளாகங்கள் உள்ளிட்ட கடைகளில் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அப்போது அந்த கடைகளில் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகின்றது. நேற்று மட்டும் 497 கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டு சுமார் 502 கிேலா பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். மாநகராட்சியில் உள்ள 5 கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நேற்றையதினம் வரையில் ரூ.1 லட்த்து 42 ஆயிரம் அபராதமாக வசூலாகியுள்ளது.

    இதனால் டீக்கடைகள், ஓட்டல்களின் உரிமையாளர்கள் தொடர்ந்து கலக்கம் அடைந்துள்ளனர். மேலும் திருச்சி மாநகரில் கடைகள் நடத்தி வரும் உரிமையாளர்கள் கடைக்கு வரும் உணவு பார்சல் வாங்க வருகை தரும் வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்து பாத்திரம் மற்றும் பைகளை கையோடு எடுத்து வருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

    மேலும் இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர்கள் கூறுகையில், டீ கடைகள், மளிகை கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட கடைகளில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி தான் பார்சல்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. சாம்பார், சட்னி உள்ளிட்ட குழம்பு வகைகளும் பாலித்தீன் பைகளில் தான் வழங்கபடுகிறது.

    ஆனால் தற்போது திருச்சி மாநகரில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அதுவும் அனைத்து கடைகள், நிறுவனங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டு பிளாஸ்டிக் பயன்பாடு இருந்தால் தொடர்ந்து அபராதம் விதிக்கிறார்கள். அந்த பொருட்களையும் பறிமுதல் செய்கிறார்கள்.இதனால் தொடர்ந்து ஓட்டல்கள், கடைகள் நடத்த முடியாமல் திணறி வருகிறோம். முடிந்த அளவிற்கு வாழை இலையில் தான் பொது மக்களுக்கு பார்சல் வழங்கி வருகிறோம்.

    ஆகவே பொதுமக்களாகிய நீங்கள் ஓட்டல்களுக்கு உணவு பொருட்கள் வாங்க வருகின்ற பொழுது வீட்டிலிருந்தே பைககள் அல்லது பாத்திரங்களை கொண்டு வந்தால் அதில் தங்களுக்கான உணவு பொருட்களை வாங்கி செல்லலாம். எங்களுக்கும் அதிகாரிகள் ஆய்வின் போது எந்தவித பிரச்சினையும் ஏற்படாது.

    பொதுமக்களும் எவ்வித அச்சமுமின்றி வீட்டிற்கு உணவு பொருட்களை எடுத்து செல்லலாம் என்றனர்.

    ×