என் மலர்
நீங்கள் தேடியது "கடன் வழங்கும்"
- ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.
- கடன் விண்ணப்பங்களை கே.சிகருப்பண்ணன் எம்.எல்.ஏ. 30-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வழங்கினார்.
கவுந்தப்பாடி:
ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் நகர கூட்டுறவு வங்கிகள் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் என். கிருஷ்ணராஜ் தலைமையில் நடந்தது. முன்னதாக கிளை மேலாளர் வேலுமணி வரவேற்றார்.
கடன் விண்ணப்பங்களை கே.சி.கருப்பண்ணன் எம்.எல்.ஏ. 30-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் பவானி யூனியன் சேர்மன் பூங்கோதை, கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பாவா தங்கமணி, மேலாளர்கள் லோகமுத்து, தர்மலிங்கம், கவுந்தி டெக்ஸ் மேலாளர் தண்டபாணி, டாக்டர் மனோகரன், ஜான், தட்சிணாமூர்த்தி, ஜெகதீஷ், ஆறுமுகம், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள். முடிவில் மேற்பார்வையாளர் ராஜேஸ்வரன் நன்றி கூறினார்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் உதவித்தொகை வழங்கும் முகாம் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பெருந்துறை கிளையில் நடைபெற்றது.
- இந்த முகாமில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
பெருந்துறை:
பெருந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் உதவித்தொகை வழங்கும் முகாம், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பெருந்துறை கிளையில் நடைபெற்றது.
கிளை மேலாளர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
முகாமில் சிறப்பு அழைப்பாளராக பெருந்துறை ஜெயக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு கடன் உதவி தொகை மற்றும் உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் அப்புகுட்டி (எ) வெங்கடாஜலபதி, பெருந்துறை பேரூராட்சி கவுன்சிலர் அருணாச்சலம், கல்யாணசுந்தரம், மாவட்ட பொருளாளர் மணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.