என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடன்குடி. ஈரோடு"

    • உடன்குடியில் இருந்து நெல்லை வழியாக ஈரோட்டிற்கு இயக்கப்பட்ட அரசு விரைவு பேருந்து சேவை எந்தமுன்னறிவிப்பு இன்றி திடீரென நிறுத்தம் செய்யப்பட்டு விட்டது.
    • ஈரோடு செல்பவர்கள் தனியார் பேருந்திலோ, நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஈரோடு செல்லும் பேருந்தில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

    சாத்தான்குளம்:

    உடன்குடியில் இருந்து சாத்தான்குளம், நாசரேத், நெல்லை வழியாக ஈரோட்டிற்கு அரசு விரைவு பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இந்த பேருந்தால் உடன்குடி, சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மற்றும் வியாபாரிகள் பயன் அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் கொரோனா அவசர காலத்தில் இந்த பேருந்து முற்றிலும் நிறுத்தப்பட்டன. பின்னர் கடந்த 9மாதங்களுக்கு பின் பொதுமக்கள் கோரிக்கை ஏற்று மீண்டும் இயக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அதன் பின் எந்தமுன்னறிவிப்பு இன்றி ஈரோடு விரைவு பேருந்து சேவை திடீரென நிறுத்தம் செய்யப்பட்டு விட்டது. இதனால் இப்பகுதியில் ஈரோடு செல்பவர்கள் தனியார் பேருந்திலோ, நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஈரோடு செல்லும் பேருந்தில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    ஆதலால் மாவட்ட கலெக்டர் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள், பொதுமக்கள் தேவையை கருத்தில் கொண்டு உடன்குடியில் இருந்து சாத்தான்குளம் வழியாக ஈரோட்டிற்கு அரசு விரைவு பேருந்து சேவையை தொடங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வேணுகோபால் மற்றும் கிராம மக்கள், வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    ×