என் மலர்
நீங்கள் தேடியது "ஏரல்"
- வாலிபர் இருசக்கர வாகனத்தை போட்டு விட்டு தப்பி ஓட்டம்.
- சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.
ஸ்ரீவைகுண்டம்:
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள அகரம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் சந்திரலிங்கம். இவரது மனைவி தேவிகலா (வயது 36). இவர்களுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் தேவிகலாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த கணவர் சந்திரலிங்கம் மனைவி தேவிகலாவை கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு தேவிகலா மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து தேவிகலாவை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
தேவிகலாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். அதற்குள் வாலிபர் தனது இருசக்கர வாகனத்தை போட்டு விட்டு ஓடினார்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஏரல் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் தேவிகலாவை கொலை செய்தது அதே பகுதியை சேர்ந்த லிங்கராஜ் (26) என்பது தெரியவந்துள்ளது. கள்ளக்காதல் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய லிங்கராஜை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- மரத்தை சுற்றி சந்தனம் குங்குமம் தேய்த்து வழிபாடு செய்தனர்.
- மரத்தில் பால் வடிவதை மக்கள் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.
ஸ்ரீவைகுண்டம்:
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே பெருங்குளம் அமைந்துள்ளது. இந்த ஊருக்கு மேல்புறத்தில் சிவகளைக்கும், பெருங்குளத்துக்கும் இடையே குளம் உள்ளது.
இந்த குளத்துக்கரை பகுதியில் உள்ள ஒரு வேப்பமரத்தில் இருந்து நேற்று மாலை பால் வடிந்துள்ளது. இதை அந்த வழியாகச் சென்றவர்கள் அருகே உள்ள ஊர்மக்களிடம் கூறியுள்ளனர்.

இதையடுத்து அங்கு வந்த ஊர்மக்கள் அம்மன் விரும்பும் மரமான வேப்பமரத்தில் இருந்து பால் வருவதை பார்த்து அம்மன் தான் இதை உருவாக்கி உள்ளார் என்று அந்த மரத்தை சுற்றி சந்தனம் குங்குமம் தேய்த்து சூடம் ஏற்றி வழிபாடு செய்துள்ளனர். தொடர்ந்து நேற்றும் பால் வடிந்ததை பார்த்து அவர்கள் வழிபாடு செய்தனர்.
அதை பார்த்து அந்த வழியாகச் சென்ற இளம்பெண் தனது தாயுடன் ஆட்டோவில் வந்துள்ளார். இங்கு நின்ற கூட்டத்தை பார்த்து ஆர்வத்துடன் அந்த இடத்தில் இறங்கி சாமி கும்பிட்டு விட்டு சென்றார். அந்த நேரத்தில வேப்பமரத்தில் இருந்து நுரை பொங்கியபடி பால் போன்ற வெள்ளை நிறத்தில் வடிந்தது.
இந்த செய்தி அந்த பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் காட்டுத் தீ போல் பரவவும் ஊர்மக்கள் மற்றும் அந்த வழியாக சாலையில் செல்பவர்கள் என அனைவரும் இறங்கி வேப்பமரத்தில் இருந்து பால் வடிவதை ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.
இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறுகையில், வேப்பமரத்தில் இருந்து பால் வடிவது மிகவும் அபூர்வமாகும். இது தெய்வ சக்தியான மரம் என்று கூறுகிறார்கள்.
- ஆடி அமாவாசை திருவிழா வருகிற 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. அன்று காலை 7.30 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது.
- முக்கிய திருவிழா 28-ந் தேதி நடக்கிறது. அன்று பகல் 1 மணிக்கு சாமி உருகுபலையில் கற்பூர விலாசம் வரும் சிறப்பு காட்சியும், அதனை தொடர்ந்து அபிஷேக ஆராதனை நடக்கிறது.
ஏரல்:
ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா 12 நாட்கள் சிறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெறும். இந்த திருவிழாவில் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலிருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா வருகிற 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. அன்று காலை 7.30 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8 மணிக்கு கேடய சப்பரத்தில் அருணாசலசாமி கோவில் வளாகத்தில் வலம் வருதல், 20-ந் தேதி இரவு 8 மணிக்கு திரு ஆல் வாகனத்தில் குறி சொல்லும் கூத்தன் அலங்காரத்தில் வலம் வருதல், 21-ந் தேதி இரவு 8 மணிக்கு முல்லை சப்பரத்தில் சதாசிவ மூர்த்தி அலங்காரம், 22-ந் தேதி பூங்குயில் சப்பரத்தில் நடராஜர் அலங்காரம், 23-ந் தேதி திருப்புண்ணை சப்பரத்தில் நவநீதகிருஷ்ணன் அலங்காரத்தில் வலம் வருதல், 24-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு ஏக சிம்மாசன சப்பரத்தில் பாலசேமன் அலங்காரம், 25-ந் தேதி திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு பல்லாக்கில் தவழ்ந்த கிருஷ்ணர் திருக்கோலம், 26-ந் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு வில்வச்சப்பரத்தில் ராஜாங்க அலங்காரம், 27-ந் தேதி புதன்கிழமை இரவு 8 மணிக்கு சின்ன சப்பரத்தில் பிச்சாண்டவ மூர்த்தி திருக்கோலத்தில் கோவில் மற்றும் ஏரல் நகரத்தில் வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
முக்கிய திருவிழா 28-ந் தேதி நடக்கிறது. அன்று பகல் 1 மணிக்கு சாமி உருகுபலையில் கற்பூர விலாசம் வரும் சிறப்பு காட்சியும், அதனை தொடர்ந்து அபிஷேக ஆராதனை, மாலை 5 மணிக்கு இலாமிச்சைவேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலம், இரவு 11 மணிக்கு கற்பகப்பொன் சப்பரத்தில் சாமி எழுந்தருளல் காட்சி நடைபெறுகிறது. 29-ந் தேதி காலை 4 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், பகல் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம், மாலை 6 மணிக்கு ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோவில் பந்தலில் தாகசாந்தி, இரவு 10.30 மணிக்கு கோவில் மூலஸ்தானம் வந்து சேரும் ஆனந்த காட்சி திருக்கற்பூர தீப தரிசனம் நடைபெறுகிறது.
30-ந் தேதி காலை 8 மணிக்கு தீர்த்தவாரி பொருனை நதியில் சகல நோய் தீரும் திருத்துறையில் நீராடல், பகல் 12.30 மணிக்கு அன்னதானம், பகல் 3 மணிக்கு ஆலிலைச் சயன அலங்காரம், மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவு 9 மணிக்கு திருவருள் புரியும் மங்கல தரிசனம் நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ. கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார்.