என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுவர் இடிந்து விபத்து"

    • கோயிலில் ஏற்பட்ட இடிபாடுகளில் 5 தொழிலாளர்கள் சிக்கினர்.
    • மீட்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதி.

    ஹரியானாவில் உள்ள கோயிலின் சுவர் இடிந்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் சிக்கியுள்ளதாகவ தகவல் வெளியாகியுள்ளது.

    ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஜெகநாதர் கோயில் சுவர் இடிந்து விபத்துக்குள்ளானது.

    இதனால் ஏற்பட்ட இடிபாடுகளில் 5 தொழிலாளர்கள் சிக்கினர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில், முதற்கட்டமாக ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    தொடர்ந்து, 4 பேரையும் மீட்பு குழுவினர் மீட்டனர். இந்த 5 பேரில், 4 பேர் நலமுடன் உள்ளதாகவும், ஒருவர் மட்டும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • இடிபாடுகளுக்கு அடியில் இருந்து உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
    • தெலுங்கானாவின் பல்வேறு பகுதிகளிலும் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள பாச்சுபல்லி பகுதியில் பெய்த கனமழை காரணமாக கட்டுமானத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு வயது குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

    பலியானவர்கள் ஒடிசா மற்றும் சத்தீஸ்கரைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்றும் இந்த சம்பவம் நேற்று நடந்ததாகவும் பாச்சுபல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

    இடிபாடுகளுக்கு அடியில் இருந்து உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

    தெலுங்கானாவின் பல்வேறு பகுதிகளிலும் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

    பேரழிவு நிவாரணப் படை குழுக்கள், நகரின் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள தண்ணீர் மற்றும் விழுந்த மரங்களை அகற்றி வருவதாக கிரேட்டர் ஐதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கனமழை பெய்து வருவதால் சுவர் இடிந்து விழும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
    • விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    மத்திய பிரதேசத்தில் கனமழை பெய்து வருவதால் சுவர் இடிந்து விழும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இங்கு இந்த ஆண்டு மட்டும் மழை தொடர்பான சம்பவங்களில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், ம.பி.யின் ஷாபூரில் உள்ள ஹர்தௌல் பாபா கோவிலின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 9 குழந்தைகள் உயிரிழந்தனர்.

    விபத்தில் காயமடைந்த குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ம.பி.யில் நடந்த விபத்து எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் பிரதமர் நிவாரண நிதியாக வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் எனபதிவிட்டுள்ளார்.

    • கட்டுமான விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
    • 8 பேர் படுகாயம் அடைந்த நிலையில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    தலைநகர் டெல்லியில் உள்ள அலிப்பூர் பகுதியில் விற்பனை கிடங்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. இன்று காலை அந்த கட்டிடத்தின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்தது. தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இடிபாடுகளில் சிக்கியவர்களில் 5 பேர் உயிரிழந்தனர். 10 பேர் மீட்கப்பட்ட நிலையில், அதில் படுகாயம் அடைந்த 9 பேர் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. கட்டுமான விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

    ×